12 ஆம் வகுப்பு தேம்பாவணி
12 ஆம் வகுப்பு தேம்பாவணி
- தேம்பாவணி நூலின் ஆசிரியர் = வீரமாமுனிவர்.
- தேம்பாவணியில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை = மூன்று.
- தேம்பாவணியில் உள்ள படலங்களின் எண்ணிக்கை = முப்பத்தாறு.
- தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை = 3615.
தேம்பாவணி பெயர்க்காரணம்
- தேம்பா + அணி = தேம்பாவணி. வாடாத மாலை எனப் பொருள்.
- தேன் + பா + அணி = தேம்பாவணி. தேன் போன்ற பாக்களை அணியாக உடைய நூல் எனப் பொருள் கொள்வர்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
தேம்பாவணி நூலின் பாட்டுடைத்தலைவன்
- தேம்பாவணி நூலின் பாட்டுடைத்தலைவன் = இயேசு பெருமானின் வளர்ப்புத் தந்தை சூசை மாமுனிவர்.
- கத்தோலிக திருச்சபையின் கொள்கைகளும் அறிவுரைகளும் கதை வடிவில் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்
- “கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்” என்று அழைக்கப்படும் நூல் = தேம்பாவணி.
வீரமாமுனிவர் ஆசிரியர் குறிப்பு
- வீரமாமுனிவரின் இயற்பெயர் = கொன்ஸ்டான் ஜோசப்பெஸ்கி.
- இத்தாலி நாட்டை சேர்ந்தவர் வீரமாமுனிவர்.
- கொன்ஸ்டான் என்னும் இத்தாலி மொழி சொல்லுக்கு அஞ்சாமை எனப் பொருள்.
- இவர் தம் பெயரை “தைரியநாதசாமி” என மாற்றிக்கொண்டார்.
- தமிழ்ச் சான்றோர் இவரை “வீரமாமுனிவர்” எனப் அழைத்தனர்.
- வீரமாமுனிவர் தமிழகம் வந்த ஆண்டு = 1710.
- 1710ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்த இப்பெரியார் 37 ஆண்டுகள் சமயப் பணியும் தமிழ்ப்பணியும் புரிந்து 1747ஆம் ஆண்டில் அம்பலக்காடு என்னும் இடத்தில இயற்கை எய்தினார்.
- வீரமாமுனிவர் இயற்கை எய்திய இடம் = அம்பலக்காடு.
வீரமாமுனிவரின் தமிழ்ப்பணி
- சிற்றிலக்கியங்கள், உரைநடை, அகராதி, மொழிபெயர்ப்பு, இலக்கணம், பெருங்காப்பியம் என்று தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகப்பெரும் பணியை செய்துள்ளார்.
வீரமாமுனிவரின் நூல்கள்
- வீரமாமுனிவரின் படைப்புகள் = திருக்காவலூர் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை, வேதியர் ஒழுக்கம், பரமார்ர்த்த குரு கதை, செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம், தொன்னூல் விளக்கம், சதுரகராதி போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார்.
- திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.
வளன் செனித்த படலம்
- காப்பியத் தலைவனான வளன் என்னும் சூசை மாமுனிவர் தாவீது மன்னனின் அரச மரபில் தோன்றிய வரலாற்றை கூறுவதே வளன் செனித்த படலம் ஆகும்.
- யோசேப்பு என்றும் சூசை என்றும் ஒலிபெயர்க்கப்பட்ட ஜோசப் என்னும் பெயரை வீரமாமுனிவர் வளன் என்று தமிழ்ப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- வளங்களை வளரச் செய்பவன் என்னும் பொருளுடைய எபிரேய மொழியில் சூசை என்னும் பெயர் வழங்கி வருகிறது.
- அதன் நேரிய மொழி பெயர்பே தமிழில் வளன் ஆகும்.
கதை சுருக்கம்
- யூதேயா நாட்டு மன்னன் சவுல்.
- பிலித்தையர் என்பார் திருமறையை பழித்தும் கடுவுளை இகழ்ந்தும் வந்தனர்.
- அரக்கன் கோலியாத் இச்ரேயால் மக்களை இகழ்ந்து, அவர்களுள் ஒருவனை போருக்கு அழைத்தான்.
- தாவீதன் என்னும் சிறுவன் அவனிடம் போர் புரிந்து அவனை கொன்றான்.
சொற்பொருள்
- வேலியால் = வேலியாக அமைந்த மதிலினால் (சூழ்ந்த)
- கதுவிடா = (பகைவர்கள்) கைப்பற்றமுடியாத
- மாலி = சூரியன்
- கதிர் வகுத்த = ஒளிவீசிய
- நாப்பண் = நடுவில்
- ஆலி = மழை நீர்
- கரிந்து = கருகி
- உருக்கொடு = உருவங்கொண்டு
- வேய்ந்த = கருமையை அணியாகப் போர்த்திக் கொண்ட மேகம்போல் கரிய மேனியைஉடையவன் என்க
- புடை = இடையின் ஒருபக்கம்
- நெருங்கி = இறுகக்கட்டி
- மாண்ட = சிறந்த
- வியன்வட்டம் = அகன்ற கேடயம்
- பொறுத்து = சுமந்துகொண்டு
- அளித்த = ஒளிமிகுந்த
- கீண்டு = கிழித்து
- அளாவு = நிறைந்த
- கிளர்ப்ப = நிறைய
- எதிர்ந்தான் = முன்னின்றான்
- கூர்த்த = ஆற்றல்மிக்க
- நான் அவன் = நானும் அவனும்
- தோர்த்தபாங்கினர் = தோல்வியுற்றவர்
- தொழும்பர் = அடிமைகள்
- ஆர்த்த = அழைத்த
- ஓகையால் = களிப்பினால்
- இகழ்வு அறைந்து = இகழ்ச்சியாயப் பேசி
- பேயதோ = பேயோ
- உரிய தொன்றிலா உரு = எதனோடும் ஒப்பிட்டுக் கூறமுடியாத உருவம்
- வெருவி = அஞ்சி
- கண்டுளி = கண்டபோது
- கதத்த = சினமிக்க
- நடுக்குறி = நடுக்கமுற்று
- கல்நெடுங்குவடு = மலைச்சிகரம்
- செருக்கு = தான் என்னும் அகங்காரம்; அகந்தை
- கடுத்து = சினந்து
- தாங்குவார் = தன்னைக் காப்பவர்
- நிருபன் = அரசன்
- அயரும்= சோர்வுறும்
- இரிந்தபின் = கழிந்தபின்
- துன்ன= நெருங்க
- கிளர்திறநெஞ்சு = இயல்பாகவே கிளர்ச்சி மிக்க நெஞ்சம்
- விளி = சாவு
- எரியை ஈட்டல் ஆம் என = நெருப்பை ஒரு சேரக் கொட்டியது போல
- கைவயம் = தோள்வலிமை
- மெய்வயம் = உடல்வலிமை
- புகைந்த = சினந்த
- விரி = விரிந்த
- ஒளி அளாவு = ஒளி பொருந்திய
- திரிய = சுமந்து திரிய
- ஆய்முற = பயன்படுத்தும் முறை
- ஐஞ்சிலை = ஐந்து கற்கள்
- கால்ஒலி = காற்றின் ஓசை
- ஓதை = ஓசை
- உயிர்ப்பிட = பெருமூச்சுவிட
- மருகி = சுழன்று
- வெல் = வெல்லத்தக்க
- வைவேல் = கூரியவேல்
- மிடல் = வலிமை
- எல்வை = தக்கசமயம்
- வல்கை = வலிமை மிக்க கரங்கள்
- ஒல்செய்வேன் = விரைந்து செயற்படுவேன்
- ஒல்லை = விரைவாக
- செல் = மேகம்
- சிலைநுதல் = கல்போன்ற நெற்றி
- எல்லை = கதிரொளி
- கடையுகம் = உலக முடிவுநாள்
- உருமு = இடி
- மருங்கு = இடுப்பு
- சிரம் = தலை
- அசனி = இடி
- கூச = நாணுற
- நாமவேல் = அச்சந்தரும்வேல்
இலக்கணக்குறிப்பு
- கதுவிடா = ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- அகல்முகில் = வினைத்தொகை
- கருமுகில், வெஞ்சுடர் = பண்புத்தொகைகள்
- கூடினர் = வினையாலணையும்பெயர்
- நான்அவன் = உம்மைத் தொகை
- அறைந்ததறைந்து = அடுக்குத்தொடர்
- கதத்த = குறிப்புப்பெயரச்சம்
- கேட்டனர் = வினையாலணையும் பெயர்
- தொடர்ந்தனன் நகைப்பான் = முற்றெச்சம்
- அளிக்குவென் = தன்மை ஒருமை வினைமுற்று
- அஞ்சினர் = வினையாலணையும் பெயர்
- கேட்ட வாசகம் = பெயரெச்சம்
- கைவயம், மெய்வயம் = ஆறாம் வேற்றுமைத் தொகைகள்
- அரிய ஆண்மை = குறிப்புப்பெயரெச்சம்
- இரிந்த பாலன் = பெயரெச்சம்
- கருமுகில், பேரிடி = பண்புத்தொகைகள்
- மதம்பொழி கரி = வினைத்தொகை
- வைவேல் = உரிச்சொற்றொடர்
- காண்கிலர் = எதிர்மறை வினைமுற்று
- உணர்மின் = ஏவல் வினைமுற்று
- பொழிமறை = வினைத்தொகை
- நாமவேல் = உரிச்சொற்றொடர்
- TNPSC_TAMIL ONE LINE NOTES (1-100)
- TNPSC_TAMIL ONE LINE NOTES (101-200)
- TNPSC_TAMIL ONE LINE NOTES (201-300)
- TNPSC_T AMIL ONE LINE NOTES (301-400)
- TNPSC_TAMIL ONE LINE NOTES (401-500)
- TNPSC_T AMIL ONE LINE NOTES (501-600)
- TNPSC_TAMIL ONE LINE NOTES (601-700)
- TNPSC TAMIL ONE LINE NOTES (701-800)
- TNPSC TAMIL ONE LINE NOTES (801-900)
- TNPSC TAMIL ONE LINE NOTES (901-1000)
- TNPSC T AMIL ONE LINE NOTES 1000 QUESTIONS PDF FREE DOWNLOAD
- 300 IMPORTANAT TNPSC POTHU TAMIL QUESTIONS AND ANSWERS