12 ஆம் வகுப்பு தமிழ் அறவியல் இலக்கியங்கள்
12 ஆம் வகுப்பு தமிழ் அறவியல் இலக்கியங்கள்
- உலகிற்கு அறம் கூறும் நோக்கோடு எழுந்த இலக்கியங்கள் “அற இலக்கியங்கள்” என்றும், அறம் கூறும் கவிதைகளை “அறக்கவிதைகள்” என்றும் கூறுவர்.
- அறம் = அற + அம்
- தீமையை அறுப்பது, தீமையை நீக்குவது, அறுதி செய்வது, கடமைகளை வரையறுப்பது என்றும் பொருள் கொள்வர்.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
- சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்டவை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
- இவற்றில் அறநூல்கள் = 11, அக நூல்கள் = 6, புறநூல்கள் = 1
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மணிமகுடமாக கருதப்படும் நூல் = திருக்குறள்
- நானூறு என்ற எண்களை கொண்ட நூல்கள் = 2 (நாலடியார், பழமொழி நானூறு)
- மருந்து பெயரால் அமைந்த அறநூல்கள் = 3 (திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி)
- திரிகடுகம் = சுக்கு, மிளகு, திப்பிலி
- சிறுபஞ்சமூலம் = கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி
- ஏலாதி = ஏலம், இலவங்கம், நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு
மணிமொழிக்கோவை என்பது யாது
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை ஆகிய மூன்று நூல்களையும் “மணிமொழிக்கோவை” என்பர்
அறநூல்கள்
நூல்கள் |
ஆசிரியர் |
திருக்குறள் |
திருவள்ளுவர் |
நாலடியார் |
சமணமுனிவர்கள் |
நான்மணிக்கடிகை |
விளம்பிநாகனார் |
இன்னா நாற்பது |
கபிலர் |
இனியவை நாற்பது |
பூதஞ்சேந்தனார் |
திரிகடுகம் |
நல்லாதனார் |
ஆசாரக்கோவை |
பெருவாயின் முள்ளியார் |
பழமொழி நானூறு |
முன்றுறையரையனார் |
சிறுபஞ்சமூலம் |
காரியாசான் |
ஏலாதி |
கணிமேதாவியார் |
முதுமொழிக்காஞ்சி |
கூடலூர் கிழார் |
களவழி நாற்பது
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் சார்ந்த ஒரே நூல்
- கழுமலத்தில் நடைபெற்ற போரில் சோழன் கோச்செங்கணான், சேரன் கணைக்கால் இரும்பொறையை வென்று சிறையில் அடைத்ததால், அவனை மீட்க பொய்கையார் பாடியது இந்நூல்
- யானைப் போர் பற்றிக் குறிப்பிடுவதால் பரணி என்ற சிற்றிலக்கிய வகை தோற்றம் பெறுவதற்கு இந்நூலே காரணம் என்பர்.
- இந்நூலில் ஒவ்வொரு பாடலின் இறுதி சொல்லும் “அட்டக்களத்து” என்று முடியும்.
பிற்கால நீதிநூல்கள்
நூல்கள் |
ஆசிரியர் |
அருங்கலச்செப்பு |
— |
அறநெறிச்சாரம் |
முனைப்பாடியார் |
நறுந்தொகை |
அதிவீரராமபாண்டியர் |
நீதிநெறிவிளக்கம் |
குமரகுருபரர் |
நன்னெறி |
சிவப்பிரகாசர் |
உலகநீதி |
உலகநாதர் |
முதுமொழி வெண்பா |
—- |
ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி |
ஔவையார் |
விவேக சிந்தாமணி |
—– |
கபிலரகவல் |
கபிலர் |
நீதி சிந்தாமணி |
வேதகிரியார் |
பெண்மதிமாலை, நீதிநூல், நீதிபேதம் |
மாயூரம் வேதநாயகம் பிள்ளை |
புதிய ஆத்திச்சூடி |
பாரதியார் |
மெய்யியல்
- இருப்பு, அறிவு, விழுமியம், காரணம், மனம், மொழி, தொடர்பான சிக்கல்களைப் பற்றி ஆராய்வதே மெய்யியல் ஆகும்.
- அகநானூறு
- தலைக்குளம்
- படிமம்
- சோமசுந்தர பாரதியார்
- திரைமொழி
- கவிதைகள்
- சிலப்பதிகாரம் – புகார்க் காண்டம்
- மெய்ப்பாட்டியல்
- நடிகர் திலகம்