Skip to content
12 TAMIL தலைக்குளம்
12 TAMIL தலைக்குளம்
மக்கட்தொகைப் பெருக்கம், நாகரிக வளர்ச்சி, நகரமயமாதல், புலம்பெயர்வு, இளைய தலைமுறையினரின் மனப்பான்மை ஆகியவற்றின் விளைவாகக் கிராமங்கள், தங்கள் முகவரியை இழந்து வருகின்றன.
வட்டார வழக்கு
வட்டார வழக்கு மொழியில் எழுதி தமிழில் புகழ் பெற்றவர்கள்,
புதுமைப்பித்தன் = நெல்லைத் தமிழ்
சண்முகசுந்தரம் = கோவைத் தமிழ்
ஜெயகாந்தன் = சென்னை வட்டாரத் தமிழ்
தி.ஜானகிராமன் = தஞ்சைத் தமிழ்
தோப்பில் முகமது மீரான் = குமரித் தமிழ்
கரிசல் இலக்கியம்
கி.ராஜநாராயணன் கோவில்பட்டி வட்டாரத் தமிழைப் பயன்படுத்தி நாவல், கதைகள் போன்றவற்றை படைத்தார்.
தம்முடைய வட்டார எழுத்திற்கு அவர் “கரிசல் இலக்கியம்” என்று பெயரிட்டார்.
தோப்பில் முகமது மீரான்
தோப்பில் முகமது மீரான் எழுதிய “ஒரு குட்டித் தீவின் வரைபடம்” என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்ற சிறுகதை இது.
இவர் கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டினம் எனும் சிற்றூரில் 1944 இல் பிறந்தார்.
இவர் தமிழ் மற்றும் மலையாளம் ஆகியவற்றில் சிறுகதைகள் படைத்துள்ளார்.
புதினம், சிறுகதை எனும் பல்வேறு இலக்கியத் தளங்களில் இயங்கி வருபவர்.
இவரின் “சாய்வு நாற்காலி” எனும் புதினம் 1997 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருதை பெற்றது.
இவரின் “துறைமுகம், கூனன் தோப்பு” ஆகிய படைப்புகள் தமிழக அரசின் விருது பெற்றுள்ளன.
Related