ஆனால் = படிமம் காட்சித் தன்மையால் மட்டுமே அமையும்.
மாந்தோப்பு, பருவகாலத்தின் அழுகுதோன்ற இருப்பதை இப்படிமம் உணர்த்துகிறது.
பூக்களும் தளிர்களுமாகப் பட்டாடையை மரம் போர்த்தி இருப்பதாகக் காட்டி பொன்னாகக் காட்சிபடுத்துகிறது.
படிம உத்தி
உவமை, உருவகம் போலப் படிமமும் வினை, பயன், மெய் (வடிவம்), உரு (நிறம்) ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும் என்பர்.
வினைப்படிமம்
கட்டிலைப் பின்னுகின்ற ஒருவனின் கை ஊசி எவ்வளவு வேகமாக வாரைச் செலுத்துமோ, அவ்வளவு விரைவானது, ஊரைக் கைப்பற்ற எண்ணி வந்த வீரனுட, இந்நெடுந்தகை நடத்திய பெரும்போர் என வினையை காட்சிபடுத்தி உள்ளது இப்பாடல்
காலை இளம் வெயிலின் அழகை, கன்றின் செயலோடு ஒப்பிட்டு படிமப்படுத்தியுள்ளது இக்கவிதை
பயன்படிமம்
இனியசெய்தல் = இனிய நெருஞ்சிப்பூ
இன்னாசெய்தல் = முள்
மெய்ப் (வடிவம்)படிமம்
கோவைப்பழம் போன்ற மூக்கும், பாசிமணி போன்ற கண்ணும், சிவப்பு நிறத்தில் வளைந்த கழுத்தும், வேப்பிலை போன்ற வாழும் உள்ளதாக வடிவப்படிமம் அமைந்துள்ளது
உரு (நிறம்) படிமம்
தலைமகனுக்கு தோழி கூறுவது, “உலைக்களத்திலே நன்றாக வெந்து, பின் மெல்ல மெல்ல ஆறிக் கொண்டிருக்கும் பொன்னின் நிறம் போல், அந்தி வானம்” உள்ளது
படிமம்
மனத்தின் மொழிபெயர்ப்பே படிமம் = நாம் விரும்பிய (அ) சிந்தித்த ஏதாவது ஒரு கருது வடிவத்திற்கு விளக்கம் தருவதற்காகவும் புலன்களின் உணர்வுகளை வெளிக்கொண்டு வருவதற்காகவும் செய்யப்படும் மனத்தின் மொழி பெயர்பே படிமமாகும்
இலக்கியங்களில் காட்சிகளையும் கருத்துகளையும் உண்மைகளையும் உணர்வுகளையும் வெளிக்கொணரும் கருவியாகப் படிமம் ஆளப்படுகிறது.
உவமையும் படிமமும்
தொல்காப்பியர் உவமை ஒன்றையே அணியாகக் கூறினார்.
உவமைகளை 2 வகையாக பிரிப்பர் = காட்சி தருகிற உவமைகள், காட்சி தரா உவமைகள்
சங்க இலக்கிய பாடல்களில் பெரும்பாலும் அமைந்தவை = காட்சி தரும் உவமைகள்
படிமம், காட்சி தரும் உத்தி என்பதால் காட்சி தரும் உவமைகளை மட்டுமே அது பயன்படுத்திக் கொள்கிறது.
அந்த வகையில் “உவமைக் கோட்பாடு”, படிமத்திற்கு “தோற்றுவாயாக” இருக்கிறது