12TH TAMIL இரட்சணிய யாத்திரிகம்

12TH TAMIL இரட்சணிய யாத்திரிகம்

12TH TAMIL இரட்சணிய யாத்திரிகம்

12TH TAMIL இரட்சணிய யாத்திரிகம்

  • திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த ‘நற்போதகம்’ எனும் ஆன்மீக மாத இதழில் இரட்சணிய யாத்திரிகம் பதின்மூன்று ஆண்டுகள் தொடராக வெளிவந்தது.
  • இரட்சணிய யாத்திரிகம், 1894ஆம் ஆண்டு மே திங்களில் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டது.

இரட்சணிய யாத்திரிகம்

  • ஜான் பன்யன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய பில்கிரிம்ஸ்புரோகிரஸ் (PilgrimsProgress) எனும் ஆங்கில நூலின் தழுவலாக இரட்சணிய யாத்திரிகம் படைக்கப்பட்டது.
  • இது 3766 பாடல்களைக் கொண்ட ஒரு பெரும் உருவகக் காப்பியம்.
  • இந்நூலில் உள்ள 5 பருவங்கள்,
    • ஆதி பருவம்
    • குமார பருவம்
    • நிதான பருவம்
    • ஆரணிய பருவம்
    • இரட்சணிய பருவம்
  • இக்காப்பியத்தின் குமார பருவத்தில் உள்ள இரட்சணிய சரித படலத்தில் இடம்பெறும் இயேசுவின் இறுதிக்கால நிகழ்ச்சிகள் பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளன.
  • இப்பாடப்பகுதியில் பயின்று வந்துள்ள பா வகை = அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ஆகும்.

எச்.ஏ. கிருட்டிணப் பிள்ளை

  • இரட்சணிய யாத்திரிகம் என்னும் இந்நூலின் ஆசிரியர் = எச்.ஏ.கிருட்டிணபிள்ளை ஆவார்
  • பிற சமய இலக்கியங்களைப் போலவே கிறித்துவ சமய இலக்கியங்களும் தமிழ் இலக்கிய வளமைக்குப் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளன.
  • எச்.ஏ. கிருட்டிணனார் போற்றித் திருஅகவல், இரட்சணிய மனோகரம் முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார்.
  • இவரைக் கிறித்துவக் கம்பர் என்று போற்றுவர்.

அருஞ்சொற்பொருள்

  • உன்ன லிர் – எண்ணாதீர்கள்
  • பிணித்தமை – கட்டியமை
  • நீச – இழிந்த
  • நேசம் – அன்பு
  • வல்லிய தை – உறுதியை
  • ஓர்மின் – ஆராய்ந்து பாருங்கள்
  • பாதகர் – கொடியவர்
  • குழுமி – ஒன்றுகூடி
  • பழிப்புரை – இகழ்ச்சியுரை
  • ஏதமில் – குற்றமில்லாத
  • ஊன்ற – அழுந்த
  • மாற்றம் – சொல்
  • நுவன்றிலர் – கூறவில்லை
  • ஆக்கினை – தண்டனை
  • நிண்ணயம் – உறுதி
  • கூவல் – கிணறு
  • ஒண்ணுமோ – முடியுமோ
  • உததி – கடல்
  • ஒடுக்க – அடக்க
  • களைந்து – கழற்றி
  • திகழ – விளங்க
  • சேர்த்தினர் – உடுத்தினர்
  • சிரத்து – தலையில்
  • பெய்தனர் – வைத்து அழுத்தினர்
  • கைதுறும் – கையில் கொடுத்திருந்த
  • கண்டகர் – கொடியவர்கள்
  • வெய்துற – வலிமை மிக
  • வைதனர் – திட்டினர்
  • மறங்கொள் – முரட்டுத் தன்மையுள்ளவர்
  • மேதினி – உலகம்
  • கீண்டு – பிளந்து
  • வாரிதி – கடல்
  • சுவறாதது – வற்றாதது
  • வல்லானை – வலிமை வாய்ந்தவரை
  • நிந்தை – பழி
  • பொல்லாங்கு – கெடுதல்; தீமை

இலக்கணக்குறிப்பு

  • கருந்தடம், வெங்குருதி – பண்புத்தொகைகள்
  • வெந்து, சினந்து, போந்து – வினையெச்சங்கள்
  • உன்னலிர் – முன்னிலைப் பன்மை வினைமுற்று
  • ஓர்மின் – ஏவல் பன்மை வினைமுற்று
  • சொற்ற, திருந்திய – பெயரெச்சங்கள்
  • பாதகர் – வினையாலணையும் பெயர்
  • ஊன்ற ஊன்ற – அடுக்குத் தொடர்

பிரித்து எழுதுக

  • முன்னுடை = முன் + உடை
  • ஏழையென = ஏழை + என

 

 

 

 

Leave a Reply