அகர வரிசை

உயிரெழுத்துக்களை முதலில் அ, ஆ, இ, ஈ என வரிசைப்படுத்த வேண்டும்.

எ.கா:

எளிமை, ஊக்கம், இனிமை, ஆயிரம்
ஆயிரம், இனிமை, ஊக்கம், எளிமை

மெய்யெழுத்துக்களை முதல் எழுத்திற்கு அடுத்த எழுத்தாக வரிசைப் படுத்தவேண்டும்.

எ.கா:

தத்தை, தண்ணீர், தந்தம், தங்கை
தங்கை, தண்ணீர், தத்தை, தந்தம்

உயிர் மெய் எழுத்துக்களை க, கா, கி, கீ என வரிசைப் படுத்த வேண்டும்.

எ.கா:

கோமாளி, காலை, கலை, கொக்கு
கலை, காலை, கொக்கு, கோமாளி

எழுத்துக்களை க, ங, ச என்ற முறையில் வரிசைப் படுத்தக் கூடாது.

எ. கா:
1. திரை, தளிர், துறைமுகம், தாமரை, தீமை
தளிர், தாமரை, திரை, தீமை, துறைமுகம்
2. பண்ணை, நொறுங்கு, பனி, நரை
நரை, நொறுங்கு, பண்ணை, பனி

Leave a Comment

Your email address will not be published.