6TH TAMIL மயங்கொலிகள்
6TH TAMIL மயங்கொலிகள்
- உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை மயங்கொலிகள் என்பர்.
மயங்கொலி என்றால் என்ன
- உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை மயங்கொலிகள் என்பர்.
- எ.கா:
- மனம் – மணம்
- இவை இரண்டும் உச்சரிக்கும் பொழுது ஏறத்தாழ ஒன்று போலவே ஒலிக்கின்றன.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
மயங்கொலி எழுத்துக்கள் எத்தனை
- மயங்கொலி எழுத்துக்கள் மொத்தம் எட்டு ஆகும். அவை,
- ந, ன, ண
- ல, ள, ழ
- ர, ற
ந, ன, ண எழுத்துகள்
- ண = நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால் ணகரம் பிறக்கிறது.
- ன = நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால் னகரம் பிறக்கிறது.
- ந = நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப் பகுதியைத் தொடுவதால் நகரம் பிறக்கிறது.
- ன = அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால்
- ண = அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால்
- ந = பல்லின் அடிப் பகுதியைத் தொடுவதால்
- (ட், ண்) (த், ந்) (ற், ன்) ஆகியவை இன எழுத்துகள்.
- இந்த இன எழுத்துகளைக் கொண்டு டகரத்தை அடுத்து வரும் ணகரம் டண்ணகரம் என்றும், தகரத்தை அடுத்து வரும் நகரம் தந்நகரம் என்றும், றகரத்தை அடுத்து வரும் னகரம் றன்னகரம் என்றும் அழைக்கப்படுகின்றன.
சொற்களில் ண, ன இடம்பெறும் வகை
- ட என்னும் எழுத்துக்கு முன் ண் வரும்
- (எ.கா.) கண்டம், வண்டி, நண்டு
- ற என்னும் எழுத்துக்கு முன் ன் வரும்
- (எ.கா.) மன்றம், நன்றி, கன்று
ல, ள, ழ எழுத்துகள்
- ல = நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் பற்களின் அடியைத் தொடுவதால் லகரம் தோன்றும்.
- இது ‘வ’ போல இருப்பதால் ‘வகர லகரம்’ என்கிறோம்.
- ள = நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் ளகரம் தோன்றும்.
- இதனைப் பொது ளகரம் என்கிறோம்.
- இது ‘ன’ போல இருப்பதால் ‘னகர ளகரம்’ என்று கூறுவர்.
- ழ = நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் ழகரம் தோன்றும்.
- (ளகரமும் ழகரமும் ஒரே இடத்தில் ஒலிக்கப்படும்).
- ழ தமிழுக்கே சிறப்பானது.
- எனவே இதனைச் சிறப்பு ழகரம் என்று அழைக்கிறோம்.
- இது ‘ம’ போல இருப்பதால் ‘மகர ழகரம்’ என்று கூறுவது இலக்கண மரபு.
ர, ற எழுத்துகள்
- ர = நாவின் நுனி மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் ரகரம் தோன்றுகிறது.
- இஃது இடையின எழுத்து என்பதால் இடையின ரகரம் என்கிறோம்.
- ற = நாவின் நுனி மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால் றகரம் தோன்றுகிறது.
- இது வல்லின எழுத்து என்பதால் வல்லின றகரம் என்கிறோம்.
- தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும்
- சிலப்பதிகாரம்
- காணி நிலம்
- சிறகின் ஓசை
- முதலெழுத்தும் சார்பெழுத்தும்
- திருக்குறள்
- அறிவியல் ஆத்திச்சூடி
- கணியனின் நண்பன்
- ஒளி பிறந்தது
- மொழி முதல் இறுதி எழுத்துகள்
- மூதுரை
- துன்பம் வெல்லும் கல்வி
- கல்விக்கண் திறந்தவர்
- நூலகம் நோக்கி
- இன எழுத்துகள்
- ஆசாரக்கோவை
- கண்மணியே கண்ணுறங்கு