6TH TAMIL அறிவியல் ஆத்திச்சூடி

6TH TAMIL அறிவியல் ஆத்திச்சூடி

6TH TAMIL அறிவியல் ஆத்திச்சூடி

6TH TAMIL அறிவியல் ஆத்திச்சூடி

  • ஆத்திசூடி என்பது அகர வரிசையில் அறிவுரைகளைச் சொல்லும் இலக்கியம்
  • ஒளவையின் ஆத்திசூடியை நாம் அறிவோம்.
  • பாரதியார் ‘புதிய ஆத்திசூடி’ என்று காலத்திற்கேற்ற அறிவுரைகளைக் கூறினார்.
  • அகர வரிசையில் அறிவியல் அறிவோம்; அகில உலகையும் ஆய்வு செய்வோம்; அனைத்தையும் உலகின் நலத்திற்கு வழங்குவோம்!

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

அறிவியல் ஆத்திச்சூடி

அறிவியல் சிந்தனை கொள்

ஆய்வில் மூழ்கு

இயன்றவரை புரிந்துகொள்

ஈடுபாட்டுடன் அணுகு

உண்மை கண்டறி

ஊக்கம் வெற்றிதரும்

என்றும் அறிவியலே வெல்லும்

ஏன் என்று கேள்

ஐயம் தெளிந்து சொல்

ஒருமித்துச் செயல்படு

ஓய்வற உழை

ஔடதமாம் அனுபவம்

–    நெல்லை சு.முத்து

அருஞ்சொற்பொருள்

  • இயன்றவரை = முடிந்தவரை
  • ஒருமித்து = ஒன்றுபட்டு
  • ஔடதம் = மருந்து
6TH TAMIL அறிவியல் ஆத்திச்சூடி
6TH TAMIL அறிவியல் ஆத்திச்சூடி

நெல்லை சு.முத்து ஆசிரியர் குறிப்பு

  • “தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்” என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் நெல்லை சு.முத்து.
  • இவர் அறிவியல் அறிஞர் மற்றும் கவிஞர்.
  • விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், சதீஷ்தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.
  • அறிவியல் கவிதைகள், கட்டுரைகள் பலவற்றைப் படைத்துள்ளார்.
  • எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
  • “அறிவியல் ஆத்திச்சூடி” என்னும் நூலின் ஆசிரியர் = நெல்லை சு.முத்து.

 

Leave a Reply