6TH TAMIL துன்பம் வெல்லும் கல்வி

6TH TAMIL துன்பம் வெல்லும் கல்வி

6TH TAMIL துன்பம் வெல்லும் கல்வி

6TH TAMIL துன்பம் வெல்லும் கல்வி

  • “கல்வி அழகே அழகு” என்பர் பெரியோர்.
  • கற்றபடி நிற்பதே அந்த அழகைப் பெறுவதற்கான வழி
  • கல்வி, அறிவை வளர்ப்பதோடு பண்படுத்தவும் செய்யும்.
  • எவ்வளவுதான் கற்றிருந்தாலும் பண்பாடு இல்லாவிட்டால் அந்தக் கல்வி பயனற்றுப் போகும். பண்பட்ட மனிதரின் புகழே பல்லாண்டு நிலைத்திருக்கும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

அருஞ்சொற்பொருள்

  • தூற்றும்படி = இகழும்படி
  • மூத்தோர் = பெரியோர்
  • மேதைகள் = அறிஞர்கள்
  • மாற்றார் = மற்றவர்
  • நெறி = வழி
  • வற்றாமல் = குறையாமல்
6TH TAMIL துன்பம் வெல்லும் கல்வி
6TH TAMIL துன்பம் வெல்லும் கல்வி

பாடலின் பொருள்

  • நாம் நூல்களைக் கற்றதோடு இருந்துவிடக்கூடாது.
  • கற்றதன் பயனை மறக்கக் கூடாது.
  • நம் நாட்டின் நெறி தவறி நடக்கக் கூடாது.
  • நல்லவர்கள் குறைசொல்லும்படி வளரக் கூடாது.
  • பெரியோர் கூறும் அறிவுரைகளை மீறக் கூடாது.
  • பிறரிடம் பழகும் முறையிலும் பேசும் முறையிலும் பண்புநெறி மாறக் கூடாது.
  • பிறர் உழைப்பை நம்பி வாழக் கூடாது.
  • தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக் கூடாது.
  • துன்பத்தை நீக்கும் கல்வியினைக் கற்க வேண்டும்.
  • சோம்பலைப் போக்கிட வேண்டும்.
  • பிறருடன் வம்பு செய்யும் வழக்கம் இருந்தால் அதை விட்டுவிட வேண்டும்.
  • வானைத் தொடும் அளவுக்கு அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
6TH TAMIL துன்பம் வெல்லும் கல்வி
6TH TAMIL துன்பம் வெல்லும் கல்வி

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆசிரியர் குறிப்பு

  • எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
  • திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர்.
  • மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்.

 

 

 

Leave a Reply