6TH TAMIL இன எழுத்துகள்

6TH TAMIL இன எழுத்துகள்

6TH TAMIL இன எழுத்துகள்

6TH TAMIL இன எழுத்துகள்

  • சில எழுத்துகளுக்கு இடையே “ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம்” ஆகியவற்றில் ஒற்றுமையுண்டு.
  • இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துக்களை “இன எழுத்துகள்” என்பர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

இன எழுத்துகள்

  • ஆறு வல்லின மெய் எழுத்துகளுக்கும் ஆறு மெல்லின எழுத்துகளும் இன எழுத்துகள் ஆகும்.
  • சொற்களில் மெல்லின மெய் எழுத்தை அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய வல்லின எழுத்து வரும்.

ஒரே இனம்

  • இடையின எழுத்துகள் ஆறும் (ய், ர், ல், வ், ழ், ள்) ஒரே இனமாகும்.

உயிர் எழுத்துகளில் இன எழுத்துகள்

  • ஆ = அ
  • ஈ = இ
  • ஊ = உ
  • ஏ = எ
  • ஐ = இ
  • ஓ = ஒ
  • ஔ = உ
    • உயிர் எழுத்துகளில்,
      • குறிலுக்கு நெடிலும்
      • நெடிலுக்கு குறிலும் இன எழுத்துகள் ஆகும்.
  • 6TH TAMIL இன எழுத்துகள்
    6TH TAMIL இன எழுத்துகள்
    • மெய்யெழுத்துகளைப் போலவே உயிர் எழுத்துகளிலும் இன எழுத்துகள் உண்டு.
    • உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும்.
    • குறில் எழுத்து இல்லாத ஐ என்னும் எழுத்துக்கு இ என்பது இன எழுத்தாகும்.
    • ஒள என்னும் எழுத்துக்கு உ என்பது இன எழுத்தாகும்.
    • சொல்லில் உயிர் எழுத்துகள் சேர்ந்து வருவது இல்லை.
    • அளபெடையில் மட்டும் நெடிலைத் தொடர்ந்து அதன் இனமாகிய குறில் எழுத்து சேர்ந்து வரும்.
      • (எ.கா) ஓஒதல், தூஉம், தழீஇ

ஆய்த எழுத்துக்கு இன எழுத்து இல்லை

  • தமிழ் எழுத்துகளில் ஆய்த எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை.

 

 

Leave a Reply