6TH TAMIL தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும்

6TH TAMIL தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும்

6TH TAMIL தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும்

6TH TAMIL தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும்

  • மொழியை எவ்வாறு பேசவும் எல்லுதவும் வேண்டும் என வரையறை செய்வது தான் இலக்கணம் ஆகும்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்

6TH TAMIL தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும்
6TH TAMIL தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும்
  • தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை,
    • எழுத்து இலக்கணம்
    • சொல் இலக்கணம்
    • பொருள் இலக்கணம்
    • யாப்பு இலக்கணம்
    • அணி இலக்கணம்

எழுத்து என்றால் என்ன

  • ஒலி வடிவமாக எழுப்பப்படுவதும் வரிவடிவமாக எழுதப்படுவதும் எழுத்து எனப்படுகிறது.

உயிர் எழுத்துகள்

6TH TAMIL தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும்
6TH TAMIL தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும்
  • உயிருக்கு முதன்மையானது காற்று.
  • இயல்பாகக் காற்று வெளிப்படும்போது உயிர் எழுத்துகள் பிறக்கின்றன.
  • வாயைத் திறத்தல், உதடுகளை விரித்தல், உதடுகளைக் குவித்தல் ஆகிய எளிய செயல்பாடுகளால் ‘அ’ முதல் ‘ஔ’ வரையுள்ள பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் பிறக்கின்றன.
    • உயிர் எழுத்துக்கள் = 12.
    • குறில் எழுத்துக்கள் = 5 (அ, இ, உ, எ, ஒ)
    • நெடில் எழுத்துக்கள் = 7 (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ)

உச்சரிப்புக்கு கால அளவு

  • ஒவ்வோர் எழுத்தையும் உச்சரிப்பதற்குக் கால அளவு உண்டு.
  • எழுத்தை உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவைக் கொண்டே குறில், நெடில் என வகைப்படுத்துகிறோம்.

மாத்திரை என்றால் என்ன

  • மாத்திரை என்பது இங்குக் கால அளவைக் குறிக்கிறது.
  • ஒரு மாத்திரை என்பது ஒருமுறை கண் இமைக்கவோ ஒருமுறை கைநொடிக்கவோ ஆகும் கால அளவாகும்.
    • குறில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு = 1 மாத்திரை
    • நெடில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு = 2 மாத்திரை.

மெய் எழுத்துக்கள்

  • மெய் என்பது உடம்பு எனப் பொருள்படும். மெய் எழுத்துகளை ஒலிக்க உடல் இயக்கத்தின் பங்கு இன்றியமையாதது. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகிய பதினெட்டும் மெய்யெழுத்துகள் ஆகும்.
    • வல்லின மெய் எழுத்துக்கள் = க், ச், ட், த், ப், ற்
    • மெல்லின மெய் எழுத்துக்கள் = ங், ஞ், ண், ந், ம், ன்
    • இடையின மெய் எழுத்துக்கள் = ய், ர், ல், வ், ழ், ள்.
    • மெய் எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு = அரை மாத்திரை.

உயிர்மெய் எழுத்துக்கள்

  • மெய் எழுத்துகள் பதினெட்டுடன் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றும் 216 எழுத்துகளும் உயிர்மெய் எழுத்துகள் ஆகும்.
  • மெய்யுடன் உயிர்க்குறில் சேர்ந்தால் உயிர்மெய்க் குறில் தோன்றுகிறது.
  • மெய்யுடன் உயிர் நெடில் சேர்ந்தால் உயிர்மெய் நெடில் தோன்றுகிறது.
  • ஆகவே உயிர்மெய் எழுத்துகளையும் உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில் என இருவகைப்படுத்தலாம்.
6TH TAMIL தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும்
6TH TAMIL தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும்

ஆய்த எழுத்து

  • தமிழ்மொழியில் உயிர்,மெய், உயிர்மெய் எழுத்துகள் தவிர தனி எழுத்து ஒன்றும் உள்ளது. அது ஃ என்னும் ஆய்த எழுத்தாகும்.
  • ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் காலஅளவு = அரை மாத்திரை.

மாத்திரை கால அளவுகள்

  • குறில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு = 1 மாத்திரை
  • நெடில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு = 2 மாத்திரை.
  • மெய் எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு = அரை மாத்திரை.
  • உயிர்மெய்க் குறில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு = 1 மாத்திரை
  • உயிர்மெய் நெடில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு = 2 மாத்திரை.
  • ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் காலஅளவு = அரை மாத்திரை.

Leave a Reply