6TH TAMIL சிறகின் ஓசை
6TH TAMIL சிறகின் ஓசை
- மனிதர்கள் பொருள் தேடுவதற்காக வேறு ஊர்களுக்குச் செல்கிறார்கள்
- சிலர் திரும்புகிறார்கள். சிலர் அங்கேயே தங்குகிறார்கள்.
- மனிதர்களைப் போலவே பறவைகளும் வேறு இடங்களுக்கும் நாடுகளுக்கும் செல்கின்றன.
- பறவைகள் போகாத நாடுகள் இல்லை; மலைகள் இல்லை; நீர்நிலைகள் இல்லை;
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
வலசை போதல் என்றால் என்ன
- பறவைகள் கண்டம்விட்டுக் கண்டம் பறக்கின்றன.
- அவை பெருங்கடல்களையும் மலைகளையும் கடந்து போகின்றன;
- குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்கின்றன.
- இவ்வாறு பறவைகள் இடம் பெயர்தலை வலசை போதல் என்பர்.
- நீர்வாழ் பறவைகளே பெரும்பாலும் வலசை போகின்றன.
பறவைகள் இடம்பெயர்வதர்கான காரணம்
- பெரும்பாலும் பறவைகள் இடம் பெயர்வதற்கான காரணங்களாக இருப்பவை,
- உணவு
- இருப்பிடம்
- தட்பவெப்பநிலை மாற்றம்
- இனப்பெருக்கம்
எவற்றை அடிப்படையாக கொண்டு பறவைகள் இடம் பெயர்கின்றன
- பறவைகள் எவற்றை அடிப்படையாக கொண்டு இடம் பெயர்கின்றன = நிலவு, விண்மீன், புவிஈர்ப்புப் புலம்.
- பொதுவாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் பறவைகள் வலசை போகின்றன.
வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
- தலையில் சிறகு வளர்தல்
- இறகுகளின் நிறம் மாறுதல்
- உடலில் கற்றையாக முடி வளர்தல்
- ஒருவகைப் பறவை வேறுவகைப் பறவையாக உருமாறித் தோன்றும் அளவிற்குக்கூடச் சில நேரங்களில் மாற்றங்கள் ஏற்படும்.
தமிழ் இலக்கியங்களில் வலசை போதல்
- ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சத்திமுத்தப்புலவர் “நாராய், நாராய், செங்கால் நாராய்” என்னும் பாடலை எழுதியுள்ளார்.
- அப்பாடலில் உள்ள “தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்” என்னும் அடிகள் பறவைகள் வலசை வந்த செய்தியைக் குறிப்பிடுகின்றன.
- பறவைகள் வலசை போதல் பற்றி பாடிய தமிழ் புலவர் = சத்திமுத்தப்புலவர்.
சிட்டுக்குருவி
உலகச் சிட்டுக் குருவிகள் நாள் மார்ச் – 20 |
- பறவைகளில் வெகுவாக அழிந்து வரும் பறவை இனம் = சிட்டுக்குருவி.
- சிட்டுக்குருவியின் நிறம் = பழுப்பு நிறம்.
- ஆண்குருவியின் தொண்டைப்பகுதி கறுப்பு நிறத்தில் இருக்கும்.
- உடல்பகுதி அடர்பழுப்பாக இருக்கும்.
- பெண் குருவியின் உடல் முழுவதும் மங்கிய பழுப்பு நிறத்தில் இருக்கும்.
- சிட்டுக்குருவி கூடுகட்டி வாழும் பறவையினத்தைச் சார்ந்தது.
- கூடுகட்டும் காலங்களில் சத்தமிட்டுக் கொண்டே இருக்கும்.
- கூடுகட்டிய பின் மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும்.
- பதினான்கு நாள்கள் அடைகாக்கும். பதினைந்தாம் நாளில் குஞ்சுகள் வெளிவரும்.
- துருவப் பகுதிகள் தவிர மனிதன் வாழும் இடங்களில் எல்லாம் சிட்டுக்குருவிகளும் வாழ்கின்றன.
- சிட்டுக்குருவிகள் வாழ முடியாதப் பகுதி = துருவப் பகுதி.
- இந்தியா முழுவதும் சிட்டுக்குருவிகளைக் காணலாம். இமயமலைத் தொடரில் 4000 மீட்டர் உயரத்தில் கூட இவை வாழ்கின்றன.
- தானியங்கள், புழுபூச்சிகள், மலர் அரும்புகள், இளந்தளிர்கள், தேன் போன்றவை சிட்டுக் குருவிகளின் உணவாகும்.
- சிட்டுக்குருவியின் குஞ்சுகள் பெரும்பாலும் புழு, பூச்சிகளையே உட்கொள்ளும்.
- அதனால், தாய்க்குருவி புழு பூச்சிகளைப் பிடித்துத் தம் குஞ்சுகளுக்கு ஊட்டிவிடும்.
- சிட்டுக்குருவியின் வாழ்நாள் பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகள் ஆகும்.
- சிட்டுக்குருவி உருவத்தில் சிறியது. ஆனாலும் வேகமாகப் பறக்கும்.
சிட்டுக்குருவிகளின் அழிவுக்குக் காரணங்கள்
- மனிதர்கள் விவசாயத்திற்குப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் குருவிக் குஞ்சுகளுக்கு உணவான புழுபூச்சிகள் கிடைப்பதில்லை.
- நவீன கட்டடங்கள் குருவிகள் கூடு கட்ட ஏற்றவையாக இல்லை.
- தற்காலத்தில் தாவர வேலிகளுக்கு மாற்றாகச் செயற்கை வேலிகள் அமைக்கப் படுகின்றன. எனவே சிட்டுக்குருவிகள் வாழ உகந்த வேலித் தாவரங்கள் குறைந்துவிட்டன.
- சிட்டுக்குருவிகள் ஓய்வெடுக்கும் புதர்ச்செடிகளும் இல்லை.
- உணவுக்கும், இருப்பிடத்திற்கும் சிட்டுக்குருவிகளுடன் மற்ற பறவைகள் போட்டியிடுகின்றன.
இந்தியாவின் பறவை மனிதர்
- இன்றைய பறவையியல் ஆய்வாளர்களுக்கு முன்னோடி டாக்டர் சலீம் அலி.
- தம் வாழ்நாள் முழுவதும் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் அவற்றைப் படம் பிடிப்பதிலும் ஈடுபட்டார்.
- அதனால், அவர் ‘இந்தியாவின் பறவை மனிதர்’ என்று அழைக்கப்படுகிறார்.
- பறவைகள் குறித்துப் பல நூல்களை எழுதியுள்ளார்.
- தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்குச் ‘சிட்டுக்குருவியின் வீழ்ச்சி’ (The fall of sparrow) என்று பெயரிட்டுள்ளார்.
- “மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழமுடியும்! பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது!” என்று கூறியவர் = இந்தியாவின் பறவை மனிதர் சலீம் அலி.
ஆர்டிக் ஆலா
- உலகிலேயே நெடுந் தொலைவு 22,000கி .மீ.பயணம் செய்யும் பறவையினம் = ஆர்டிக் ஆலா.
ஆர்னித்தாலஜி
- பறவை பற்றிய படிப்பு ஆர்னித்தாலஜி (ORNITHOLOGY) எனப்படும்.
கப்பல் பறவை
- சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை கப்பல் பறவை (Frigate bird).
- இது தரையிறங்காமல் 400 கிலோ மீட்டர் வரை பறக்கும்.
- இது கப்பல் கூழைக்கடா, கடற்கொள்ளைப் பறவை என்றும் அழைக்கப்படுகிறது.
- கீரைப்பாத்தியும் குதிரையும்
- பேசும் ஓவியங்கள்
- தமிழ் ஒளிர் இடங்கள்
- தொழிற்பெயர்
- விருந்தோம்பல்
- வயலும் வாழ்வும்
- திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி
- திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்
- அணி இலக்கணம்
- புதுமை விளக்கு
- அறம் என்னும் கதிர்
- ஒப்புரவு நெறி
- அணி இலக்கணம்
- திருக்குறள்
- மலைப்பொழிவு
- தன்னை அறிதல்
- கண்ணியமிகு தலைவர்
- பயணம்
- ஆகுபெயர்