7th Samacheer Kalvi History Study Material in Tamil – 7

 பக்தி, சூஃபி இயக்கங்கள்

 • இடைக்காலத்தில் தோன்றிய பக்தி இயக்கமானது இந்தியா முழுவதும் பரவி, பல நூற்றாண்டுகளுக்கு இம்மண்ணில் நின்று நிலவியது.
 • தென்னிந்தியாவில் ஆட்சி செய்த பண்டைய அரசுகளான, பல்லவர், சோழர், பாண்டியர் காலத்தில் மக்கள் சைவம், வைணவம் ஆகிய சமய வழிபாடுகளை கொண்டிருந்தனர்.
 • பக்தி இயக்கம் முதலில் தென்னிந்தியாவிலேயே தொடங்கப்பட்டது. கபீர் அதனை மக்களிடையே பிரபலமடையச் செய்தார்.
 • சைவ சமயத்தை பரப்பிய 63 நாயன்மார்களில் திருநாவுக்கரசர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் முதன்மையானவர்களாவர்.
 • முதலில் சமண சமயத்தை சார்ந்திருந்த திருநாவுக்கரசர் என்கிற அப்பர் தனது தமக்கை திலகவதி அம்மையாரின் தாக்கத்தினால் சிவபக்தரானார்.
 • இவர் 49000-க்கும் மேற்பட்ட பதிகங்கங்களை எழுதியுள்ளார். எனினும் 311 பதிகங்களே இதுவரை கிடைத்துள்ளன.
 • ஒரே கடவுள் என்ற கோட்பாட்டையுடைய மாணிக்கவாசகர் திருவாசகம் என்கிற நூலை எழுதியுள்ளார்.
 • சம்பந்தர் 16,000 பதிகங்களை பாடினார். எனினும் 384 பதிகங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
 • சேக்கிழாரின் பெரியபுராணம் (நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்று நூல்) மற்றும் தேவாரம், திருவாசகம் திருமறை ஆகிய நூல்கள் இக்காலக்கட்டத்தில் எழுதப்பட்ட முக்கிய நூல்கள் ஆகும்.
 • இந்நூல்களில் தத்துவம், இலக்கியம், பக்தி ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன.
 • விஷ்ணுவின் புகழினைப் பரப்பியோர் ஆழ்வார்கள் எனப்பட்டனர்.
 • ஆழ்வார்கள் மொத்தம் பன்னிரெண்டு பேர் ஆவர்.
 • ஆழ்வார்களில் நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
 • ஆழ்வார்கள் பாடிய சுமார் 4000 பாடல்களை நாதமுனி என்பார் நாலாயிரத் திவ்யபிரபந்தம் என்னும் நூலாகத் தொகுத்தார்.
 • பழங்காலத்தில் தென்னிந்தியாவில் பக்தி இயக்கத்தை தொடங்கி வைத்தவர் சங்கராச்சாரியார். இவர் கேரளாவில் காலடி என்ற இடத்தில் பிறந்தார்.
 • இராமானுஜர் பக்தி இயக்கத்தை பரப்பியவர்களில் குறிப்பிடத்தக்கவர்.
 • கி.பி.12ஆம் வாழ்ந்த வைணவப்பெரியார் ஆவார்.
 • பக்தியின் மூலம் முக்தியைப் பெறலாம் என்பது இவரது கொள்கை.
 • கீழ்க்குடிகள் வைணவ மார்க்கத்தை பின்பற்றுவதை இவர் வரவேற்றார்.
 • இராமானுஜரின் சீடர் இராமானந்தர் ஆவார்.
 • வல்லபாச்சாரியார், கிருஷ்ணரை வழிபட்டார்.
 • சிவனை வழிபட்ட பசவரை பின்பற்றியோர் வீரசைவர் அல்லது லிங்காயத்துகள் எனப்பட்டனர்.
 • சைதன்யர், கிருஷ்ண வழிபாட்டை பிரபலப்படுத்தினார்.
 • கபீர், இராமானந்தரின் சீடராவார். இந்து முஸ்லீம் ஒற்றுமையை முதன்முதலாக வலியுறுத்தியனார்.
 • இவரைப்பின்பற்றிறோர் கபீர்பந்த் எனப்பட்டனர்.
 • கபீரின் போதனைகளின் தொகுப்பு பிஜகா எனப்படுகிறது.
 • இவரது பாடல்களில் தோகா வகைப்பாடல்கள் மக்களிடையே தாக்கத்தையும் ஈர்ப்பினையும் ஏற்படுத்தின.
 • கபீர் இராமானும், இரகீமும் ஒருவரே என்றார். சிலை வழிபாட்டையும், சாதிமுறைகளையும் இவர் கண்டித்தார்.
 • குருநானக் சீக்கிய மதத்தை நிறுவினார். இவர் கபீரின் உற்ற சீடர் ஆவார்.
 • மேவார் நாட்டு மன்னர் ரதோர் ரத்ணாசிங் என்பவரின் மகளும், உதய்புர் மன்னரின் மனைவியுமான மீராபாய் கி.பி.1498ல் பிறந்தார்.
 • கிருஷ்ணரின் பக்தையான இவர் பக்தியியக்கத்தின் முக்கிய ஷணாக விளங்கினார். பஜன் வகையிலமைந்த இவரது பாடல்கள் இராஜஸ்தான் பகுதியில் புகழ்பெற்றவையாகும்.
 • இக்காலக்கட்டத்தில் பல துறவிகள் மகாராட்டிர பகுதியில் உருவாயினர். ஞானதேவர், நாமதேவர், ஏக்நாத், துக்காராம், துளசிதாசர், ராமதாசர் ஆகியோர் அதில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
 • ஞானதேவர் பகவத்கீதைக்கு எழுதிய உரை நூலானது ஞானேஸ்வரி எனப்பட்டது.
 • ஏக்நாத் சாதிமுறையை எதிர்த்தார்.
 • குருராமதாசர், தசபோதா என்ற நூலையும், துளசிதாசர், இராமசரிதமானஸ் என்ற நூலையும் எழுதினர்.
 • பாரசீகத்தில் தொடங்கப்பட்ட சூஃபி இயக்கம் என்கின்ற இஸ்லாமிய சீர்திருத்த இயக்கம் கி.பி. 12ம் நூற்றாண்டில் இந்தியாவிலும் பரவியது.
 • முகமது நபியே உண்மையானவர் அவரது கோட்பாடுகளே முழுமையானது என்று சூஃபி இயக்கம் கருதியது.
 • சூஃபி இயக்கத்தினர் தம்மை பல குழுக்களாக வகுத்து கொண்டனர். குழு தலைவர் அரபி மொழியில் nயூக் என்றும் பாரசீக மொழியில் பீர் அல்லது முர்ஷித் என்றும் அழைக்கப்பட்டனர்.
 • இக்குழுக்கள் சில்சிலா என்ற 12 தொகுப்புகளாக செயல்பட்டனர். ‘சில்சிலா’ என்றால் தொடர் சங்கிலி என்று பொருள்.
 • சூஃப் என்றால் முரட்டு கம்பளி ஆடையை அணிந்து, எளிமையை வெளிப்படுத்தும் துறவி என்பது பொருள்.
 • இந்திய சூஃபி இயக்கத்துறவிகளில் குறிப்பிடத்தக்கவர்கள் குவாஜா மொய்ன்-உத்-தீன்-சிஸ்டி, பாபா ஃப்ரித், நிஜாம்- உத்-தீன் அவுலியா ஆகியோராவர்.
 • குவாஜா மொய்ன்-உத்;-தீன்-சிஸ்டி கி.பி.1192ல் இந்தியாவுக்கு வந்து அஜ்மீரில் தங்கியிருந்தார். மக்கள் இவரை ஏழைகளின் காப்பாளர் என்ற பொருளில் ‘கரிப்நவாஜ்’ என்று அன்புடன் அழைத்தனர்.
 • குவாஜா மொய்ன்-உத்தீன்-சிஸ்டியின் சீடர் பாபாஃப்ரித் ஆவார். இவர் பஞ்சாபி மொழியில் பல பாடல்களை எழுதினார். டெல்லி சுல்தானாக விளங்கிய பால்பன், பாபாஃபரித்தின் பக்தர் ஆவார்.
 • நிஜாம்-உத்-தீன்-அவுலியா ஒரு புகழ் பெற்ற இஸ்லாமியத் துறவியாவார். இவரை கடவுளின் அன்பைப் பெற்றவர் என்று பொருள்படும் மெஹபூம்-இ-இலாஹி என புகழ்ந்தனர்.
 • கி.பி. 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாகூர் ஆண்டவர், மீரான் சாகிப் என்றும் குவாதிர் வாலி என்றும் மக்களால் புகழப்பட்டார். தமிழகத்திலுள்ள, நாகூரில் இவரின் கல்லறை உள்ளது.
 • நாகூரில் நடைபெறும் கந்ஷரி உருஸ் என்னும் விழாவில் அனைத்து மதத்தினரும் பங்கேற்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
 • nயூக் அல்லது துறவியின் கல்லறையானது (தர்கா) அவரைப் பின்பற்றுவோரது வழிபாட்டு தலமாக விளங்குகிறது.
 • சூஃபி இயக்கங்கள், மதவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மக்களை பிரித்து எளிமைப்படுத்தின.
 • 18 சூஃபி இயக்கத்துறவிகள், கடவுள் ஒருவரே என்றும், மக்கள் அனைவரும் அவரது பிள்ளைகள் என்றும் போதித்தனர்.
 • பக்தி, சூஃபி இயக்கத்துறவிகளால், இந்தி, பஞ்சாபி, வங்காளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய வட்டார மொழிகளின் இலக்கியங்கள் மேலும் வளர்ச்சியடைந்தன.
 • இடைக்காலத்தில் தோன்றிய பக்தி இயக்கமானது இந்தியா முழுவதும் பரவியது.
 • சங்கராச்சாரியார் கேரளாவில் காலடி என்ற இடத்தில் பிறந்தார்.
 • குருநானக் நிறுவிய மதம் சீக்கியமதம் துளசிதாசர் எழுதிய நூல் இராசரிதமானஸ் சூஃபி இயக்கம் ஆரம்பமான இடம் பாரசீகம்

Leave a Comment

Your email address will not be published.