7TH TAMIL வாழ்விக்கும் கல்வி
7TH TAMIL வாழ்விக்கும் கல்வி
- உலகில் பலவகையான செல்வங்கள் உள்ளன.
- அவற்றுள் அழியாத செல்வம் கல்விச் செல்வம் ஆகும்.
- பிற செல்வங்கள் அனைத்தும் அழியும் தன்மையுடையன
- கல்வி கற்பதற்குக் கால எல்லை இல்லை.
- கல்வியின் இன்றியமையாமை, கற்க வேண்டிய நூல்கள், கற்கும் கால அளவு ஆகியவற்றைக் குறித்து அறிந்து கொள்வோம்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
காலமறிதல்
- உலகில் மிகவும் அருமையானது = காலம்.
- காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம் = காலமறிதல்.
- திருவள்ளுவர் “காலமறிதல், கல்வி” ஆகிய இரண்டு முக்கிய அதிகாரங்களையும் எழுதியுள்ளார்.
அழியாச்செல்வம்
- உலகில் அழியாத செல்வம் = கல்வி ஆகும்.
- “கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை” என்று கூறியவர் = திருவள்ளுவர்.
ஒளி விளக்கு
- கல்வி ஒர் ஒளி விளக்கு.
- இருக்கும் இடத்தை ஒளிமையமாக ஆக்குவது = கல்வி.
- பலருக்கும் ஒளி தருவது தான் கல்வி.
- கல்வி இல்லாத நாடு “விளக்கில்லாத வீடு” ஆகும்.
கற்றவரும் கல்லாதவரும்
- கல்வியறிவு இல்லாதவர்களைத் திருவள்ளுவர் போல் குறை கூறியவர் வேறு எவரும் இல்லை.
- “விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்” என்று கூறுகிறார் திருவள்ளுவர்.
- கல்வியறிவு இல்லாதவனை விலங்கு என்கிறார் திருவள்ளுவர்.
- நல்ல செயலை மனிதன் தானாகச் செய்ய வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
- இன்னொருவர் வந்து சொல்ல வேண்டும் என்று காத்திருக்கக் கூடாது.
- நன்றின்பால் உய்ப்பது அறிவு என்று வள்ளுவர் கூறுகிறார்.
- அந்த அறிவைப் பெற உதவுவது கல்வி.
கல்வியும் பள்ளியும்
- நமது எதிர்காலத்தை உருவாக்கும் பள்ளிக்குக் கோயில் என்று பெயர் வைத்தார் பாரதியார்.
- “பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்; எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்” என்கிறார் = பாரதியார்.
- “பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்” என்று பாடியவர் = பாரதியார்.
திருக்குறளார் வீ. முனிசாமி ஆசிரியர் குறிப்பு
- திருக்குறள் வகுப்புகள் நடத்தியும் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளைப் பரப்பும் பணி செய்தவர் திருக்குறளார் வீ. முனிசாமி.
- “திருக்குறளார்” என்று அழைக்கப்படுபவர் = வீ. முனிசாமி
- நகைச்சுவை ததும்பும் தமது பேச்சால் மக்களைக் கவர்ந்தவர் இவர்.
- வள்ளுவர் உள்ளம், வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
- திருக்குறளார் வீ. முனிசாமி அவர்களின் புகழ் பெற்ற நூல் = “உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம்”.
- திருக்குறளார் வீ. முனிசாமி அவர்களின் மற்றொரு நூல் = சிந்தனைக் களஞ்சியம்.
- எங்கள் தமிழ்
- ஒன்றல்ல இரண்டல்ல
- பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
- சொலவடைகள்
- குற்றியலுகரம் குற்றியலிகரம்
- காடு
- அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
- விலங்குகள் உலகம்
- இந்திய வனமகன்
- நால்வகைக் குறுக்கங்கள்
- திருக்குறள்
- புலி தங்கிய குகை
- பாஞ்சை வளம்
- தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ முத்துராமலிங்கத்தேவர்
- கப்பலோட்டிய தமிழர்
- வழக்கு