7TH TAMIL இலக்கியவகைச் சொற்கள்
7TH TAMIL இலக்கியவகைச் சொற்கள்
- ஒர் எழுத்து தனித்தும் ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துக்கள் தொடர்ந்தும் வந்து பொருள் தருவது = சொல் எனப்படும்.
- சொல்லின் வேறு பெயர்கள் = பதம், கிளவி, மொழி
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
இலக்கண முறைப்படி சொற்கள் எத்தனை வகைப்படும்
- இலக்கண முறைப்படி சொற்கள் நான்கு வகைப்படும். அவை,
- பெயர்ச்சொல்
- வினைச்சொல்
- இடைச்சொல்
- உரிச்சொல்
இலக்கிய வகை சொற்கள் எத்தனை வகைப்படும்
- இலக்கிய வகை சொற்கள் நான்கு வகைப்படும். அவை,
- இயற்சொல்
- திரிசொல்
- திசைச்சொல்
- வடசொல்
இயற்சொல் என்றால் என்ன
- எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்.
- எ.கா:
- கடல், கப்பல், எழுதினான், படித்தான்.
- இவற்றின் பொருள் இயல்பாகவே எளிதில் விளங்குகிறது.
இயற்சொல் எத்தனை வகைப்படும்
- இயற்சொல் நான்கு வகைப்படும். அவை,
- பெயர் இயற்சொல் = மண், பொன்
- வினை இயற்சொல் = நடந்தான், வந்தான்
- இடை இயற்சொல் = அவனை, அவனால்
- உரி இயற்சொல் = மாநகர்
திரிசொல் என்றால் என்ன
- கற்றோர்க்கு மட்டுமே விளங்குபவையாகவும் இலக்கியங்களில் மட்டுமே பயின்று வருபவையாகவும் அமையும் சொற்கள் திரிசொற்கள் எனப்படும்.
- எ.கா:
- வங்கூழ் = காற்று
- அழுவம் = கடல்
- சாற்றினான் = சொன்னான்
- உறுபயன் = மிகுந்த பயன்
திரிசொல் எத்தனை வகைப்படும்
- சொற்கள் வகையில் திரிசொல் நான்கு வகைப்படும். அவை,
- பெயர்த் திரிசொல் = அழுவம், வங்கம்
- வினைத் திரிசொல் = இயம்பினான், பயின்றாள்
- இடைத் திரிசொல் = அன்ன, மான
- உரித் திரிசொல் = கூர், கழி
- பொருள் வகையில் திரிசொல் இரண்டு வகைப்படும். அவை,
- ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள்
- வங்கம், அம்பி, நாவாய் – என்பன கப்பல் என்னும் ஒரே பொருளைத் தருவதால் ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள் என்பர்.
- பல பொருள் குறித்த ஒரு திரிசொல்
- இதழ் என்னும் சொல் பூவின் இதழ், உதடு, கண் இமை, பனையேடு, நாளிதழ் ஆகிய பல பொருள்களைத் தருவதால் பல பொருள் குறித்த ஒரு திரிசொல் என்பர்.
- ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள்
திசைச்சொல் என்றால் என்ன
- வடமொழி தவிர, பிற மொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் திசைச்சொற்கள் எனப்படும்.
- எ.கா:
- சாவி, சன்னல், பண்டிகை, இரயில்
- முற்காலத்தில் பாண்டிநாட்டைத் தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வழங்கிய கேணி(கிணறு), பெற்றம் (பசு) போன்ற சொற்களையும் திசைச்சொற்கள் என்றே வழங்கினர்.
வடசொல் என்றால் என்ன
- வடமொழியிலிருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் வடசொற்கள் எனப்படும்.
- எ.கா:
- வருடம், மாதம், கமலம், விடம், சக்கரம்
- இச்சொற்கள் தமிழில் வழக்கில் இருந்தாலும் இவை தமிழ்ச்சொற்கள் அல்ல. இவை வடமொழி எனப்படும் சமஸ்கிருத மொழிச்சொற்கள் ஆகும்.
வடசொல் எத்தனை வகைப்படும்
- வடசொல் இரண்டு வகைப்படும். அவை,
- தற்சமம்
- தற்பவம்
தற்சமம் என்றால் என்ன
- கமலம், அலங்காரம் என வடமொழியில் இருப்பது போன்றே தமிழில் எழுதுவதைத் தற்சமம் என்பர்.
தற்பவம் என்றால் என்ன
- லக்ஷ்மி என்பதை இலக்குமி என்றும், விஷம் என்பதை விடம் என்றும் தமிழ் எழுத்துகளால் மாற்றி எழுதுவதைச் தற்பவம் என்பர்.
- எங்கள் தமிழ்
- ஒன்றல்ல இரண்டல்ல
- பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
- சொலவடைகள்
- குற்றியலுகரம் குற்றியலிகரம்
- காடு
- அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
- விலங்குகள் உலகம்
- இந்திய வனமகன்
- நால்வகைக் குறுக்கங்கள்
- திருக்குறள்
- புலி தங்கிய குகை
- பாஞ்சை வளம்
- தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ முத்துராமலிங்கத்தேவர்
- கப்பலோட்டிய தமிழர்
- வழக்கு