7TH TAMIL கவின்மிகு கப்பல்

7TH TAMIL கவின்மிகு கப்பல்

7TH TAMIL கவின்மிகு கப்பல்

7TH TAMIL கவின்மிகு கப்பல்

  • கடலும் கப்பலும் கண்ணுக்கு விருந்தாகக் காட்சியளிப்பவை
  • அலைவீசும் கடலில் அசைந்தாடிச் செல்லும் கப்பலைக் காணக் காண உள்ளம் உவகையில் துள்ளும்.
  • அச்சம் தரும் கடலில், அஞ்சாது கப்பலோட்டியவர் நம் தமிழர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

அகநானூறு பாடல்

உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்

புலவுத்திரைப் பெருங்கடல் நீர்இடைப் போழ

இரவும் எல்லையும் அசைவுஇன்று ஆகி

விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்ட

கோடுஉயர் திணிமணல் அகன்துறை நீகான்

மாட ஒள்எரி மருங்குஅறிந்து ஒய்ய

–    மருதன் இளநாகனார்

அருஞ்சொற்பொருள்

  • உரு = அழகு
  • போழ = பிளக்க
  • வங்கூழ் = காற்று
  • நீகான் = நாவாய் ஓட்டுபவன்
  • வங்கம் = கப்பல்
  • எல் = பகல்
  • கோடு உயர் = கரை உயர்ந்த
  • மாட ஒள்ளெரி = கலங்கரை விளக்கம்
7TH TAMIL கவின்மிகு கப்பல்
7TH TAMIL கவின்மிகு கப்பல்

மருதன் இளநாகனார் ஆசிரியர் குறிப்பு

  • மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்.
  • கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள முப்பத்து ஐந்து பாடல்களையும் பாடியவர் இவரே.
  • மருதத்திணை பாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார்.

அகநானூறு நூல் குறிப்பு

  • அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • புலவர் பலரால் பாடப்பட்ட நானூறு பாடல்களைக் கொண்டது.
  • இந்நூலினை நெடுந்தொகை என்றும் அழைப்பர்.
  • இந்நூலின் 255 ஆம் பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.
  • புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது = கடல்.

எட்டுத்தொகை நூல்கள் யாவை

  1. நற்றிணை
  2. குறுந்தொகை
  3. ஐங்குறுநூறு
  4. பதிற்றுப்பத்து
  5. பரிபாடல்
  6. கலித்தொகை
  7. அகநானூறு
  8. புறநானூறு

 

 

 

 

 

Leave a Reply