9TH TAMIL பெரியபுராணம்

9TH TAMIL பெரியபுராணம்

9TH TAMIL பெரியபுராணம்

9TH TAMIL பெரியபுராணம்

  • வரப்புயர நீர் உயரும்.
  • நீர் உயர நெல் உயரும்.
  • நெல் உயர குடி உயரும்.
  • குடி உயர நாடு உயரும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

அருஞ்சொற்பொருள்

  • மா = வண்டு
  • மது = தேன்
  • வாவி = பொய்கை
  • வளர் முதல் = நெற்பயிர்
  • தரளம் = முத்து
  • பணிலம் = சங்கு
  • வரம்பு = வரப்பு
  • கழை = கரும்பு
  • கா = சோலை
  • குழை = சிறு கிளை
  • அரும்பு = மலர் மொட்டு
  • மாடு = பக்கம்
  • நெருங்கு வளை = நெருங்குகின்ற சங்குகள்
  • கோடு = குளக்கரை
  • ஆடும் = நீராடும்
  • மேதி = எருமை
  • துதைந்து எழும் = கலக்கி எழும்
  • கன்னி வாளை = இளமையான வாளை மீன்
  • சூடு = நெல் அரிக்கட்டு
  • சுரிவளை = சங்கு
  • வேரி = தேன்
  • பகடு = எருமைக்கடா
  • பாண்டில் = வட்டம்
  • சிமயம் = மலையுச்சி
  • நாளிகேரம் = தென்னை
  • நரந்தம் = நாரத்தை
  • கோளி = அரசமரம்
  • சாலம் = ஆச்சா மரம் (கடம்ப மரம்)
  • தமாலம் = பச்சிலை மரம்
  • இரும்போந்து = பருத்த பனைமரம்
  • சந்து = சந்தனமரம்
  • நாகம் = நாகமரம்
  • காஞ்சி = ஆற்றுப்பூவரசு
9TH TAMIL பெரியபுராணம்
9TH TAMIL பெரியபுராணம்

இலக்கணக்குறிப்பு

  • கருங்குவளை = பண்புத்தொகை
  • செந்நெல் = பண்புத்தொகை
  • விரிமலர் = வினைத்தொகை
  • தடவரை = உரிச்சொல் தொடர்

பாடலின் பொருள்

  • “கண்டுழவர் பதங்காட்ட களைகளையுங் கடைசியர்கள்” என்ற அடியில் “கடைசியர்கள்” எனப்படுபவர்கள் = உழத்தியர்கள்
  • “நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா” என்ற அடிகளில் “நீர்நாடு” எனக் குறிப்பிடப்படும் நாடு = சோழநாடு.
  • “சாலம்” என்பதன் பொருள் = ஆச்சா மரம் (கடம்ப மரம்)
  • “நீர்நாடு” என சேக்கிழார் குறிப்பிடுவது = சோழ நாடு
  • “திருநாடு” என்று சேக்கிழார் குறிப்பிடுவது = சோழ நாடு.
9TH TAMIL பெரியபுராணம்
9TH TAMIL பெரியபுராணம்

பெரியபுராணம் நூல் குறிப்பு

  • சுந்தரரின் திருத்தொண்டத் தொகை அடியவர் பெருமையைக் கூறுகிறது.
  • “திருத்தொண்டத்தொகை” என்னும் நூலை எழுதியவர் = சுந்தரர்.
  • இதைச் சிறிது விரித்து நம்பியாண்டார் நம்பியால் எழுதப்பட்ட திருத்தொண்டர் திருவந்தாதி ஒவ்வொரு பாடலிலும் அடியார்களின் சிறப்பைக் கூறுவதாக அமைந்துள்ளது.
  • “திருத்தொண்டர் திருவந்தாதி” என்னும் நூலை எழுதியவர் = நம்பியாண்டார் நம்பி.
  • இந்த இரண்டு நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு சேக்கிழாரால் ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வோர் அடியாராக அறுபத்துமூவரின் சிறப்புகளை விளக்கிப் பாடப்பட்டது திருத்தொண்டர் புராணம்.
  • “திருத்தொண்டர் புராணம்” என்னும் நூலின் ஆசிரியர் = சேக்கிழார்.
  • திருத்தொண்டர் புராணம்” நூலின் வேறு பெயர் = பெரிய புராணம்.
  • இதன் பெருமை காரணமாக இது பெரியபுராணம் என்று அழைக்கப்படுகிறது.
  • “திருத்தொண்டத்தொகை” என்னும் நூலை எழுதியவர் = சுந்தரர்.
  • “திருத்தொண்டர் திருவந்தாதி” என்னும் நூலை எழுதியவர் = நம்பியாண்டார் நம்பி.
  • “திருத்தொண்டர் புராணம்” என்னும் நூலின் ஆசிரியர் = சேக்கிழார்.

சேக்கிழார் ஆசிரியர் குறிப்பு

  • கி.பி. 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேக்கிழார், சோழ அரசன் இரண்டாம் குலோத்துங்கன் அவையில் முதலமைச்சராக இருந்தார்.
  • ‘பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ’ என்று இவரை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் பாராட்டுகிறார்.
  • “பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ” என்று சேக்கிழாரை பாராட்டியவர் = மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்.

 

 

9TH TAMIL

Leave a Reply