10TH TAMIL அணி

10TH TAMIL அணி

10TH TAMIL அணி

10TH TAMIL அணி

  • மக்களுக்கு அழகு சேர்ப்பது அணிகலன்கள்.
  • அது போல், செய்யுள்களுக்கு அழகு செய்து சுவையை உண்டாக்குவான அணிகள் ஆகும்.

தற்குறிப்பேற்ற அணி என்றால் என்ன

10TH TAMIL அணி
10TH TAMIL அணி
  • இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.
  • எ.கா

போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி

‘வாரல்’ என்பனபோல் மறித்துக்கை காட்ட

  • பாடலின் பொருள் = கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது வரவேண்டாம் எனத் தடுப்பதுபோல, கை காட்டியது என்பது பொருள்.
  • அணிப்பொருத்தம்
    • கோவலனும், கண்ணகியும் மதுரை மாநகருக்குள் சென்றபோது மதிலின் மேலிருந்த கொடிகள் காற்றில் இயற்கையாக அசைந்தன.
    • ஆனால் இளங்கோவடிகள், கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுவான் எனக்கருதி அக்கொடிகள் கையை அசைத்து, ‘இம்மதுரைக்குள் வரவேண்டா’ என்று தெரிவிப்பது போலக் காற்றில் அசைவதாகத் தம் குறிப்பைக் கொடியின் மீது ஏற்றிக் கூறுகிறார்.
    • இவ்வாறு இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

தீவக அணி என்றால் என்ன

  • “தீவகம்” என்னும் சொல்லின் பொருள் = விளக்கு.
  • ஓர் அறையில், ஓர் இடத்தில் வைக்கப்பட்ட விளக்கானது அவ்வறையில் பல இடங்களிலும் உள்ள பொருள்களுக்கு வெளிச்சம் தந்து விளக்குதல் போல, செய்யுளின் ஓரிடத்தில்நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவதால் இவ்வணி தீவக அணி எனப்பட்டது.

தீவக அணி வகைகள்

  • தீவக அணி மூன்று வகைப்படும். அவை,
    • முதல்நிலைத் தீவகம்
    • இடைநிலைத் தீவகம்
    • கடைநிலைத் தீவகம்

தீவக அணி

10TH TAMIL அணி
10TH TAMIL அணி

சேந்தன வேந்தன் திருநெடுங்கண், தெவ்வேந்தர்

ஏந்து தடந்தோள், இழிகுருதி – பாய்ந்து

திசைஅனைத்தும், வீரச் சிலைபொழிந்த அம்பும்,

மிசைஅனைத்தும் புள்குலமும் வீழ்ந்து

  • “சேந்தன” என்பதன் பொருள் = சிவந்தன.
  • “தெவ்” என்பதன் பொருள் = பகைமை.
  • “சிலை” என்பதன் பொருள் = வில்.
  • “மிசை” என்பதன் பொருள் = மேலே
  • “புள்” என்பதன் பொருள் = பறவை.
    • இப்பாடலில் அரசனுடைய கண்கள் கோபத்தால் சிவந்தன; அவை சிவந்த அளவில் பகை மன்னர்களுடைய பெரிய தோள்கள்சிவந்தன; குருதி பாய்ந்து திசைகள் அனைத்தும் சிவந்தன; வலிய வில்லால் எய்யப்பட்ட அம்புகளும் சிவந்தன; குருதி மேலே வீழ்தலால் பறவைக் கூட்டங்கள் யாவும் சிவந்தன.
  • வேந்தன் கண் சேந்தன
  • தெவ்வேந்தர் தோள் சேந்தன
  • குருதி பாய்ந்து திசை அனைத்தும் சேந்தன
  • அம்பும் சேந்தன
  • புள் குலம் வீழ்ந்து
  • மிசைஅனைத்தும் சேந்தன
    • இவ்வாறாக முதலில் நிற்கும் ‘சேந்தன’ (சிவந்தன) என்ற சொல் பாடலில் வருகின்ற கண்கள், தோள்கள், திசைகள், அம்புகள், பறவைகள் ஆகிய அனைத்தோடும் பொருந்திப் பொருள் தருகிறது.
    • அதனால் இது தீவக அணி ஆயிற்று.

நிரல்நிறை அணி என்றால் என்ன

10TH TAMIL அணி
10TH TAMIL அணி
  • “நிரல்” என்பதன் பொருள் = வரிசை.
  • “நிறை” என்பதன் பொருள் = நிறுத்துதல்.
  • சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல்நிறை அணி எனப்படும்.
    • எ.கா:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

  • இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.
  • இக்குறளில் அன்பும் அறனும் என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பும் பயனும் என்ற சொற்களை முறைபடக் கூறியுள்ளமையால் இது நிரல் நிறை அணி
  • ஆகும்.

தன்மை அணி என்றால் என்ன

  • எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத் தன்மையினைக் கேட்பவர்களின் மனம் மகிழுமாறு உரிய சொற்களை அமைத்துப் பாடுவது தன்மையணியாகும்.
  • இதனைத் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர்.

தன்மை அணி எத்தனை வகைப்படும்

  • தன்மை அணி நான்கு வகைப்படும்.
    • பொருள் தன்மையணி
    • குணத் தன்மையணி
    • சாதித் தன்மையணி
    • தொழிற் தன்மையணி

தன்மை அணி

10TH TAMIL அணி
10TH TAMIL அணி

மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்

கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் – வையைக் கோன்

கண்டளவே தோற்றான், அக்காரிகைதன் சொற்செவியில்

உண்டளவே தோற்றான் உயிர்.

  • உடம்பு முழுக்கத் தூசியும் விரித்த கருமையான தலைமுடியும் கையில் ஒற்றைச் சிலம்போடு வந்த தோற்றமும் அவளது கண்ணீரும் கண்ட அளவிலேயே வையை நதி பாயும் கூடல் நகரத்து அரசனான பாண்டியன் தோற்றான். அவளது சொல், தன் செவியில் கேட்டவுடன் உயிரை நீத்தான்.
  • அணிப்பொருத்தம் = கண்ணகியின் துயர் நிறைந்த தோற்றத்தினை இயல்பாக உரிய சொற்களின் மூலம் கூறியமையால் இது தன்மை நவிற்சியணி எனப்படும்.

 

Leave a Reply