11TH TAMIL மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

11TH TAMIL மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

11TH TAMIL மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

  • நூல்களையோ, இதழ்களையோ வெளியிடும்போது பிழையின்றி அச்சிடவேண்டும்.
  • எழுத்துப்பிழைகள், தொடர்ப்பிழைகள், மயங்கொலிப் பிழைகள், ஒருமை பன்மைப் பிழைகள் ஆகியவை நிறைந்த செய்திகள், படிப்போர்க்குத் தவறான கருத்தை அளித்து, குழப்பத்தில் ஆழ்த்திவிடும்.
  • எனவே, நூல்கள் அல்லது இதழ்களை அச்சிடுவதற்கு முன்னர் அச்சுப்படி திருத்துபவர் அப்பணியின்போது பிழைகளைத் திருத்துவதற்குப் பின்பற்றும் முறைகளையும் திருத்தக் குறியீடுகளையும் அறிந்திருத்தல் வேண்டும்.

அச்சுப்படி திருத்துபவரின் பணிகள்

  • மூலப்ப டியில் (Original Copy) உள்ளபடியே செய்திகள் அச்சாகியுள்ளனவா? என்று ஒவ்வொரு வரியையும் படித்துக் கவனித்தல் வேண்டும்.
  • செய்தியின் உள்ளடக்கம், புள்ளிவிவரங்கள், எண்க ள், அட்டவணைகள் முதலியன விடுபட்டுள்ளனவா என்பதை மூலப்படியோடு ஒப்பிட்டுக் கவனித்தல் இன்றியமையாதது. ஏனெனில், புள்ளி விவரங்கள் மாறினால் செய்தியின் பொருளில் முரண்பாடு ஏற்படும்.
  • அச்சுப்படி திருத்துவோர் செய்தியின் உருவையோ உள்ளடக்கத்தையோ மாற்றுதல் கூடாது.
  • பிழை ஏற்பட்ட சொல்லின்மீது எழுதுதல் கூடாது. ஒரு வரியின் இடப்பக்கப் பாதியில் பிழை இருந்தால் இடப்பக்க ஓரமும் வலப்பக்கப் பாதியில் பிழை இருந்தால் வலப்பக்க ஓரமும் திருத்தம் தருதல் அச்சிடுவோர்க்குப் பயனுடையதாக அமையும்.
  • பிழைகளை ஓரம்வரை கோடிழுத்துக் காட்டும்போது, மேலும் கீழும் உள்ள வரிகள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
  • ஒரு வரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிழைகள் இருந்தால் பிழைகளைக் குறிக்கும் கோடுகளைத் தெளிவாகக் காட்டல் வேண்டும்.
  • ஒரு சொல்லில் பிழைகள் பல இருந்தால் அச்சொல்லையே நீக்கிவிட்டுச் சரியான சொல்லைத் தெளிவாகப் பக்க ஓரத்தில் தருதல் வேண்டும்.
  • எண்ணின் (Number) இடையில் பிழையிருந்தால் அந்தத் தொகையை முழுவதுமாகப் பிழையின்றி எழுதிக்காட்டுதல் நல்லது.
  • அச்சுப்படியில் இருக்கும் வண்ணத்திற்கு மாறான வண்ணமுடைய மையால் திருத்துதல் வேண்டும். இது பிழைகளைத் தெளிவாகக் கண்டறிய உதவும்.

குறியீடுகள் இடுதல்

  • அச்சுப்படியில் இருக்கும் பிழைகளைத் திருத்த உலக அளவில் பொதுவான திருத்தக் குறியீடுகள் என்று சில உண்டு.
  • அத்தகைய திருத்தக் குறியீடுகளை அச்சுப்படி திருத்துவோர் முதலில் படித்தறிதல் வேண்டும்.
  • பிழையிருக்கும் இடத்தில் ஒரு சிறு கோட்டினால் குறித்து, அந்த வரிக்கு நேராகப் பக்கத்தின் ஓரப்பகுதியில் (Margin) குறியீடுகளைப் பொருத்தமாக இட்டுப் பிழையின் திருத்தத்தைக் குறிப்பிடுதல் வேண்டும்.
  • ஒரே வரியில் பல தவறுகள் வந்தால் அவற்றை வரிசைப்படி பக்க ஓரத்தில் சிறு சாய்வான கோடிட்டுத் திருத்தத்தைக் குறிப்பிடுதல் வேண்டும்.
    • எ.கா
    • பாரதியார் கேளிச்சித்திரத்தை விகடச்சித்திம் என்று குரிப்பார். /லி /ர /றி

திருத்தக் குறியீடுகளின் வகைகள்

  • திருத்தக் குறியீடுகள் ஐந்து வகைகளாகப் பிரிப்பர்
    1. பொதுவானவை (General)
    2. நிறுத்தக்குறியீடுகள் தொடர்பானவை (Punctuations)
    3. இடைவெளி தரவேண்டியவை (Spacing)
    4. இணைக்க வேண்டியவை (Alignment)
    5. எழுத்து வடிவம் (Type/Font)

பொதுவானவை

11TH TAMIL மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்
11TH TAMIL மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

குறியீடு

குறியீட்டுப் பொருள்
Dt

அச்சடித்திருக்கும் சொல்லையோ எழுத்தையோ நீக்குக

Ʌ

சொல்லையோ எழுத்தையோ இந்தக் குறிப்பிட்ட இடத்தில் சேர்த்துக் கொள்க
[

புதிய பத்தி (New Paragraph) தொடங்குக.

நிறுத்தக் குறியீடுகள்

11TH TAMIL மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்
11TH TAMIL மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

, /

கால் புள்ளியை சேர்க்கவும்
; /

அரைப் புள்ளியை சேர்க்கவும்

. /

முற்றுப்புள்ளி இடவும்
? /

வினாக்குறி அடையாளம் இடவும்

! /

வியப்புக்குறி சேர்க்கவும்
: /

முக்காற்புள்ளி சேர்க்கவும்

இடைவெளி தரவேண்டியவை

11TH TAMIL மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள் சொற்களை அல்லது எழுத்துக்களைச் சேர்க்கவும். இடைவெளி விட வேண்டாம்.
#

பத்திகளுக்கிடையில் வரிகளுக்கிடையில் சொற்களுக்கிடையில் இடைவெளி தருக

இணைக்க வேண்டியவை

11TH TAMIL மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்
11TH TAMIL மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்

எழுத்து வடிவம்

Unbold

வழக்கமான எழுத்தில் மாற்றுக
Bold

தடித்த எழுத்தில் மாற்றுக

Trs

சொற்கள், எழுத்துக்களை இடம் மாற்றுக
I.c.

எழுத்துருவை சிறியதாக மாற்றுக

திருத்தக்குறியீடுகளின் தமிழ்ப் பெயர்கள்

ஆங்கில பெயர்

குறியீடு தமிழ்ப்பெயர்
Apostrophe

எழுத்துக்குறை

Semicolon

; அரைப்புள்ளி
Colon :

முக்காற்புள்ளி

Colondash

: – வரலாற்றுக்குறி
Ditto mark ,,

மேற்படிக்குறி

Dash

இடைக்கோடு
Bar /

வெட்டுக்கோடு

Brackets

( ) பிறைக்கோடு
Double Brackets { }

இரட்டை பிறைக்கோடு

Large Brackets

[ ]

பகர அடைப்பு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *