TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 22, 2021

Table of Contents

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 22, 2021
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – JULY 22, 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 22, 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

25 வல்லுனர்களை கொண்ட “ஐ.நா வரி குழு”:

  • 2௦21 – 25 ஆம் ஆண்டு வரைக்கான “ஐ.நா வரி குழுவில்” உலகம் முழுவதும் உள்ள முக்கிய 25 திறன்மிகு வல்லுனர்களை சேர்த்துள்ளனர் / Rasmi Ranjan Das, a Joint Secretary, Ministry of Finance, has been appointed as a member of the UN tax committee for 2021-25 term among 25 global tax experts across the world.
  • இக்குழுவில் இந்திய நிதி அமைச்சகத்தின் இணை செயலாளர், “ரஸ்மி ரஞ்சன் தாஸ்” சேர்க்கப்பட்டுள்ளார்.
  • இக்குழுவை வரி விஷயங்களில் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பான ஐ.நா. நிபுணர்களின் குழு என்று முறையாக அறியப்படுகிறது / Formally known as the UN Committee of Experts on International Cooperation in Tax Matters

15௦௦௦ ஆண்டுகள் பழமையான வைரஸ் கண்டுபிடிப்பு:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • விஞ்ஞானிகள் குழு திபெத்திய பனிப்பாறைகளில் கிட்டத்தட்ட 15,000 ஆண்டுகளாக உறைந்திருக்கும் பண்டைய வைரஸ்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • சீனாவின் திபெத்திய பீடபூமியில் இருந்து எடுக்கப்பட்ட இரண்டு பனி மாதிரிகளில் விஞ்ஞானிகள் வைரஸ்களைக் கண்டுபிடித்தனர். இந்த வைரஸ்களில் பெரும்பாலானவை இன்றுவரை பட்டியலிடப்பட்டுள்ள எந்த வைரஸ்களையும் போலல்லாது உள்ளன.

1௦௦௦ ஆண்டுகளில் இல்லாத அளவு சீனாவில் மழை:

  • சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தில் 1௦௦௦ ஆண்டுகளில் இல்லாத மழை, ஒரே நாளில் பெய்துள்ளது.
  • அம்மாகாணத்தின் “செங்க்சாவ் நகரத்தின்” ஆண்டு சராசரி மழை அளவு 640.8 மி.மீ ஆகும். ஆனால் ஒரே நாளில் 617.1 மி.மீ மழை பெய்தது.

ஆகாஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை:

  • இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் உருவாக்கப்பட்ட “புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணை” வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது / The Defence Research and Development Organisation (DRDO) successfully tested the New Generation Akash Missile (AKASH-NG) a Surface to Air missile
  • AKASH-NG ஏவுகணை, ஓடிசாவின் கடற்கரை பகுதியில் சோதனை செய்யப்பட்டது
  • இதன் வேகம் 2.5 மாக் ஆகும்.

நாசாவின் NEA-SCOUT செயற்கைகோள் விண்கலம்:

  • அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தனது புதிய விண்கலமான NEA-SCOUT (NEAR EARTH ASTEROID SCOUT) தேவையான அனைத்து சோதனைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும், விண்வெளி வெளியீட்டு முறைமை (SLS – SPACE LAUNCH SYSTEM) ராக்கெட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
  • NEA-SCOUT விண்கலத்தின் மறு பெயர், “CubeSat” ஆகும். இது நாசாவின் மேம்பட்ட ஆய்வு அமைப்புகள் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு மினி விண்கலம் ஆகும்.

இந்தியாவில் முதல் பறவை காய்ச்சல் மரணம் டெல்லியில் பதிவாகியுள்ளது:

  • டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) 2021 ஜூலை 20 அன்று நாட்டில் முதல் பறவை காய்ச்சல் இறப்பைப் பதிவு செய்தது. எச் 5 என் 1 ஏவியன் இன்ஃப்ளூயன்ஸாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 12 வயது சிறுவன் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • H5N1 என்பது மிகவும் பாதிப்பான ஆசிய ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா (H5N1) வைரஸ் ஆகும்

விண்வெளிக்கு சென்று திரும்பிய அமேசான் அதிபர்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • உலகப் புகழ்பெற்ற அமேசான் நிறுவனத்தின் அதிபர் “ஜெப் பெசோஸ்”, தனது “நியு செபர்ட்” என்ற விண்கலம் மூலம் விண்வெளிக்கு சென்று திரும்பி வந்தார் / Billionaire Jeff Bezos has made a short journey to space, in the first crewed flight of his rocket ship, New Shepard
  • அவர் விண்வெளியில் 1௦ நிமிடம் 1௦ நொடிகள் இருந்தார். இவரின் விண்வெளி நிறுவனம், “புளு ஆரிஜின்” (BLUE ORIGIN) ஆகும்

உலக பல்கலைக்கழக உச்சிமாநாடு:

  • உலக பல்கலைக்கழக உச்சி மாநாடு (WORLD UNIVERSITIES SUMMIT), ஹரியானாவின் சோனிபட் நகரில் உள்ள ஜிண்டால் க்ளோபல் பலகலைக்கழகத்தில் நடைபெற்றது
  • இதில் சிறப்பு விருந்தினராக தோனிக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துக்கொண்டு உரையாற்றினார்.

பெரு நாட்டின் புதிய அதிபர்:

  • உலகின் 2-வது பெரிய தாமிர உற்பத்தி நாடான, பெருவில் நடைபெற்ற தேர்தலில் “பெட்ரோ காஸ்டிலோ” வெற்றி பெற்று அதிபராக பதவி ஏற்க உள்ளார்.
  • இவர் பள்ளி ஆசிரியராக இருந்து அரசியலுக்கு வந்தவர் ஆவார்.

கேடட் உலக சாம்பியன்சிப் 2௦21:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • ஹங்கேரி நாட்டின் புடாஸ்பட் நகரில் நடைபெற்ற “கேடட் உலக சாம்பியன்சிப் 2௦21” (CADET WORLD CHAMPIONSHIP 2021) மல்யுத்த போட்டியில், இந்தியாவை சேர்ந்த “அமன் குலியா” மற்றும் “சாகர் ஜக்லான்” ஆகியோர் உலக சாம்பியன்சிப் பட்டத்தை வென்றனர்.
  • 48 கிலோ எடைப்பிரிவில் அமன் குலானும், 80 கிலோ எடை பிரிவில் சாகர் ஜக்லானும் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

ஹைதி நாட்டின் புதிய பிரதமர்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • ஹைதி நாட்டின் புதிய பிரதமராக “ஏரியல் ஹென்றி” தேர்வு செய்யப்பட்டுள்ளார் / Ariel Henry has formally assumed the post of Prime Minister of Haiti.
  • சமிபத்தில் ஹைதி நாட்டின் அதிபர் ஜோவினில் மாயிஸ் படுகொலை செய்யப்பட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கை குறியீட்டில் இடம்பெற்ற ஒரே இந்திய மையம்:

  • பொருள் அறிவியலில் உலக அளவில் சிறப்பாக செயல்படும் உலகின் முன்னணி 5௦ மையங்களின் பட்டியலை பிரபல “இயற்கை குறியீட்டு” அமைப்பு வெளியிட்டுள்ளது / advances in materials science by the prestigious Nature Index
  • இதில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய மையம், பெங்களூருவில் உள்ள “மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக்கான ஜவஹர்லால் நேரு மையம்” (The Jawaharlal Nehru Centre For Advanced Scientific Research (JNCASR)) ஆகும்.

இந்த ஆண்டின் சிறந்த இந்திய கால்பந்து வீரர்கள்:

  • 2௦2௦ – 2௦21 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவித்துள்ளது, அகில இந்திய கால்பந்து கழகம்.
    1. இந்த ஆண்டின் சிறந்த ஆண் கால்பந்து வீரர் = சண்டிகரை சேர்ந்த சந்தேஷ் ஜின்கன்
    2. இந்த ஆண்டின் சிறந்த பெண் கால்பந்து வீராங்கனை = மணிப்பூரை சேர்ந்த பாலாதேவி

97-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் ஒரு பகுதியை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்:

  • கூட்டுறவு சங்கங்கள் தொடர்பான 97-வது இந்திய அரசியலமைப்பு சட்டத்திருத்த விதியில் சில பகுதிகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
  • 2013 ஆம் ஆண்டில், குஜராத் உயர்நீதிமன்றம் 97 வது சட்டத்திருத்தத்தின் சில விதிமுறைகளை நிறுத்தியது, கூட்டுறவு சங்கங்கள் தொடர்பான சட்டங்களை பாராளுமன்றம் இயற்ற முடியாது என்று கூறியது. ஏனெனில் அவை மாநில பட்டியலில் உள்ளது எனக் கூறியது.
  • இதை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது.
  • உச்ச நீதிமன்றம் குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பை இறுதி செய்தது. மெல்லும் 97-வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அரசியலமைப்பின் 368(2) விதியின் படி, மாநில சட்டமன்றங்களில் குறைந்த பட்சம் ஒரு பகுதியினரால் ஒப்பதல் அளிக்கப்பட வேண்டும் எனக்கூறியதி. மேலும் இது மாநிலப் பட்டியல் சார்ந்தது என்பதால், மாதிய அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

பிச்சைகாரர்களுக்காக அரசின் “ஸ்மைல்” திட்டம்:

  • பிச்சைக்காரர்களின் நல்வாழ்வை மேம்படுத்த விரிவான நடவடிக்கைகளை உள்ளடக்கிய “ஸ்மைல்” (SMILE – Support for Marginalized Individuals for Livelihood and Enterprise) திட்டத்தை அரசாங்கம் வகுத்துள்ளது.
  • இத்திட்டம் பிச்சை எடுப்பவர்களின் புனர்வாழ்வு, மருத்துவ வசதிகள், ஆலோசனை, அடிப்படை ஆவணங்கள், கல்வி, திறன் மேம்பாடு, பொருளாதார இணைப்புகள் மற்றும் பலவற்றில் அதிக கவனம் செலுத்துகிறது.

தெர்மோஎலக்ட்ரிக் சாதனங்களுக்கான புதிய பொருள்:

  • அதிக வெப்பநிலையில் நிலையானதாக இருக்கும் தெர்மோஎலக்ட்ரிக் சாதனங்களுக்கான புதிய குறைந்த விலை மின் தொடர்புப் பொருளை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர் / Researchers havedeveloped a new low-cost electrical contact material for thermoelectric devices that is stable at high temperature
  • தெர்மோஎலக்ட்ரிக் பொருள் அதன் இரு பக்கங்களுக்கிடையிலான வெப்பநிலை வேறுபாட்டைப் பயன்படுத்தி மின்சாரத்தை உருவாக்க முடியும் / The thermoelectric material can generate electricity by using a temperature difference between its two sides.
  • தூள் உலோகம் மற்றும் புதிய பொருட்களுக்கான சர்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தின் (ARCI – International Advanced Research Centre for Powder Metallurgy & New Materials) ஆராய்ச்சியாளர்கள், ஈயம் டெல்லுரைடு (lead telluride (PbTe)) மற்றும் மெக்னீசியம் ஸ்டானைட் சிலிஸைடு (Mg2Si1-xSnx) கலவைகளைப் பயன்படுத்தி வெப்ப மின் தொகுதிகளை வடிவமைத்து உருவாக்கியுள்ளனர்.

சிக்கில் ஆர்.பாஸ்கரன் காலமானார்:

  • தமிழ்நாட்டில், புகழ்பெற்ற கர்நாடக கிளாசிக்கல் வயலின் கலைஞர் ‘கலைமாமணி’ சிக்கில் ஆர் பாஸ்கரன் 2௦ ஜூலை 2021 இல் காலமானார்.
  • 5௦ ஆண்டு கால இசைப் பயணத்தில் பல்வேறு விருதுகள், கவுரவங்கள் பெற்றுள்ளார். அகில இந்திய வானொலியின் ‘ஏ’ தரக் கலைஞராக இருந்தவர் இவர்.

இந்தியாவின் முதல் மெத்தை மறுசுழற்சி பிரச்சாரம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • IPUA & ISPF இன் வழிகாட்டுதலின் கீழ் இந்தியாவின் முதல் மெத்தை மறுசுழற்சி பிரச்சாரம் (India’s first Mattress recycling campaign) போபாலில் இருந்து தொடங்குகிறது, இது மெத்தை வட்ட பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை சேமிப்பதற்கும் கணிசமாக உதவும்.
  • IPUA – Indian polyurethane Association
  • ISPF – Indian Sleep Product Federation

தமிழகத்தில் 1௦ ஆண்டுகளில் 217.78% வளர்ச்சி அடைந்துள்ள “அறியப்படாத மதம்”:

  • லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், கடந்த 1௦ ஆண்டுகளில், தமிழகத்தில் “குறிப்பிட்ட மதம்” சாராத மக்களின் வளர்ச்சி 217.78% என தெரிவிக்கப்பட்டுள்ளது
  • 2௦௦1 முதல் 2௦11 வரையிலான காலத்தில் தமிழகத்தில்,
    1. புத்த மதத்தினரின் எண்ணிக்கை 1௦7 % ஆக உயர்ந்துள்ளது
    2. சீக்கிய மதத்தினரின் எண்ணிக்கை 52.97% அதிகரித்துள்ளது
    3. முஸ்லிம் மதத்தினரின் எண்ணிக்கை 21.86 % அதிகரித்துள்ளது
    4. கிறித்துவ மதத்தினரின் எண்ணிக்கை 16.73 % அதிகரித்துள்ளது
    5. இந்து மதத்தினரின் எண்ணிக்கை 14.92 % அதிகரித்துள்ளது
    6. ஜெயின் மதத்தினரின் எண்ணிக்கை 7.௦9 % அதிகரித்துள்ளது

கவுரவ பெல்லோஷிப் விருதினை பெறும் முதல் இந்தியர்:

  • கிரேட் பிரிட்டன் மற்றும் அயர்லாந்தின் அறுவை சிகிச்சை நிபுணர்களின் சங்கத்தின் (ASGBI – Association of Surgeons of Great Britain & Ireland) கவுரவ பெல்லோஷிப் (HONARARY FELLOWSHIP) விருதினை பெறும் முதல் இந்தியர் என்ற சிறப்பை, ஹைதராபாத் நகரை சேர்ந்த மருத்துவரான பி.ரகுராம் என்பவர் பெற்றுள்ளார்.
  • பத்மஸ்ரீ விருதினை பெற்றுள்ள இவர், மார்பக புற்றுநோய்க்கான கிம்ஸ்-உஷாலக்ஷ்மி மையத்தின் நிருவாக இயக்குனர் ஆவார்.

குஜராத்தின் முதல் முறையாக பெண்களுக்கான “பாலிகா பஞ்சாயத்து” நடைபெற்றது:

  • குஜராத் மாவட்டத்தின் கட்ச் மாவட்டத்தில், “குனாரியா கிராமத்தில்” முதல் முறையாக பாலிகா பஞ்சாயத்து (BALIKA PANCHAYAT) நடைபெற்றது.
  • இந்த தனித்துவமான பஞ்சாயத்துக்கான தேர்தலில் 10 முதல் 21 வயது வரையிலான இளம் பெண்கள் போட்டியிட்டனர்
  • இந்த தேர்தல் பெண்களுக்காக பெண்களால் நடத்தப்பட்டது.

11 வது மெகாங்-கங்கா ஒத்துழைப்புக் கூட்டம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • 11 வது மெகாங்-கங்கா ஒத்துழைப்புக் கூட்டம் (11th Mekong-Ganga Cooperation meeting), காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார்.
  • மெகாங்-கங்கா ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகள் = 6 (இந்தியா, மியான்மர், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாம்)

லித்துவுனியாவில் முதல் முறையாக அலுவலகம் துவங்கிய தைவான்:

  • தைவான் அரசு, முதல் முறையாக தனது நாடு அலுவளுகதை, ஐரோப்பிய கண்டத்தில் லித்துவுனியா நாட்டில் “தைவான்” பெயரிலேயே திறந்துள்ளது / Using the name “Taiwan,” Taiwan’s government will set up its first office in Europe, in the Baltic nation of Lithuania
  • சீனா, தைவானை சொந்தன் கொண்டாடி வரும் வேளையில், தைவான் தனி சுதந்திர நாடு என்பதை வெளிக்காட்டவும், பிற நாடுகளின் ராஜாங்க உறவுகளை உருவாக்கவும் இந்நடவடிக்கையை தைவான் அரசு எடுத்துள்ளது

யுனஸ்கோவின் “வரலாற்று நகர்ப்புற இயற்கை திட்டம்”:

  • மத்திய பிரதேச மாநிலத்தில், ஓர்ச்சா மற்றும் குவாலியர் நகரங்களை யுனெஸ்கோ தனது ‘வரலாற்று நகர்ப்புற இயற்கை திட்டத்தின்’ கீழ் தேர்வு செய்துள்ளது. இந்த திட்டம் 2011 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது / In the state of Madhya Pradesh, the cities of Orchha and Gwalior have been selected by UNESCO under its ‘Historic Urban Landscape Project.’ This project was started in the year 2011
  • இந்த திட்டத்தில் இந்திய நகரங்களான வாரணாசி, அஜ்மீர் உள்ளிட்ட தெற்காசியாவின் ஆறு நகரங்கள் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளன.. குவாலியர் மற்றும் ஓர்ச்சா ஆகியவை தெற்காசியாவின் 7 மற்றும் 8 வது நகரங்களாக சேர்க்கப்பட்டுள்ளன / Six cities of South Asia, including Indian cities of Varanasi and Ajmer are already involved in this project. Gwalior and Orchha have been included as the 7th and 8th cities of South Asia.

உலக பலவீனமான எக்ஸ் குரோமோசோம் நோய் விழிப்புணர்வு தினம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • உலகம் முழுவதும் ஜூலை 22 ஆம் தேதி, “மார்டின் பெல் சிண்ட்ரோம் நோய் விழிப்புணர்வு தினம்” (World Martin Bell Syndrome Awareness Day) அல்லது “உலக பலவீனமான எக்ஸ் குரோமோசோம் விழிப்புணர்வு தினம்” (World Freagile X Awareness Day) எனப்படும் மரபணு கோளாறு நோய் தினம், கடைபிடிக்கப்படுகிறது
  • இந்த நோய் ஒரு மரபணு கோளாறு ஆகும், இதில் மன அழுத்தம் உள்ளது. 1969 இல் குரோமோசோம் எக்ஸ் (டிஸ்டல் தோலில் உள்ள பலவீனம்) இந்த நோய்க்குரிய மாற்றங்கள் வெளிப்படுத்தப்பட்டன. 1991 இல் விஞ்ஞானிகள் இந்த நோயை உருவாக்கும் ஒரு மரபணுவை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

உலகின் முதல் முப்பரிமான முறையிலான எஃகு பாதசாரி பாலம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • உலகின் முதல் முப்பரிமான முறையிலான எஃகு பாதசாரி பாலம், நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் கட்டப்பட்டுள்ளது / Amsterdam, has unveiled the world’s first 3D-printed steel pedestrian bridge
  • இதன் திறப்பு விழாவில், நெதர்லாந்து நாட்டின் ராணி “மேக்சிமா” கலந்துக் கொண்டார்.

உலகின் மிகப்பெரிய வானொலி தொலைநோக்கியின் கட்டுமானம் இரண்டு கண்டங்களில் தொடங்குகிறது:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகின் மிகப்பெரிய வானொலி தொலைநோக்கி அமைப்பின் கட்டுமானம் தொடங்கப்பட்டுள்ளது.. தென்னாப்பிரிக்காவில் அதன் 200 பெரிய டிஷ் ரிசீவர்களும், மேற்கு ஆஸ்திரேலியாவைச் சுற்றி 1,30,000 சிறிய ஆண்டெனாக்களும் கொண்ட ஸ்கொயர் கிலோமீட்டர் அரே அப்சர்வேட்டரி (SKOA – Square Kilometer Array Observatory), பிரபஞ்ச ஆய்வை இலக்காகக் கொண்ட எந்த தொலைநோக்கிகளையும் விட பத்து மடங்கு சக்திவாய்ந்ததாக இருக்கும்.

உலகின் ஆழமான நீச்சல் குளம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • உலகின் ஆழமான நீச்சல் குளம், துபாயில் துவங்கப்பட்டுள்ளது. 196 அடி ஆழத்தில், இந்த குளம் புதிய டீப் டைவ் துபாய் ஈர்ப்பின் (Deep Dive Dubai attraction) ஒரு பகுதியாகும்.
  • அறிக்கையின்படி, கின்னஸ் உலக சாதனை அமைப்பு இந்த குளத்தை ‘டைவிங்கிற்கான உலகின் ஆழமான நீச்சல் குளம்’ (world’s deepest swimming pool) என்று சான்றளித்தன

மிஸ் இந்தியா யுஎஸ்ஏ 2021 அழகி:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • மிஸ் இந்தியா யுஎஸ்ஏ 2021 அழகியாக, அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்த “வைதேகி தோன்க்ரே” தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் / Vaidehi Dongre of Michigan has won the title of ‘Miss India USA 2021’
  • 2-வது இடத்தை “அர்ஷி லலாணி” என்பாரும், 3-வது இடத்தை “மீரா கசாரி” என்பவரும் பிடித்தனர்.

இந்திய தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம்:

  • 1947 ஜூலை 22-ல் நடைபெற்ற இந்திய அரசியல் நிர்ணய சபையில் கூட்டத்தில் இதனை இந்திய தேசியக் கொடியாக ஏற்க்கபட்டு, 1947 ஆகஸ்ட் 14-ம் தேதி, தேசியக் கொடியாக அறிவிக்கப்பட்டது. ஜூலை 22ம் தேதியே, இந்திய தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளளப்பட்ட தினம் / NATIONAL FLAG ADOPTION DAY
  • தேசிய கொடியானது, “சுயராஜ்ஜியக்” கொடியில் இருந்து உருவாக்கப்பட்டது. இந்திய தேசியக் கோடியை வடிவமைத்தவர் = பிங்கிலி வெங்கையா

தேசிய நினைவுச் சின்னமாக “ஆதிச்சநல்லூர்” அறிவிப்பு:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • ”இந்தியாவில் 21 நினைவுச்சின்னங்கள் மட்டுமே தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்கப்பட தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆதிச்சநல்லூரும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது” என மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
  • தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ளது ஆதிச்சநல்லூர். ’உலகில் நாகரிகம் தோன்றிய முதல் இடம் ஆதிச்சநல்லூர்தான்’ என பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது சிந்து சமவெளிக்கும் முந்தைய நாகரிகம் என வங்க தேசத்து அறிஞர் ’பானர்ஜி’ குறிப்பிட்டுள்ளார். இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள், ’மெசபடோமியா’ பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகளை ஒத்துள்ளதாகவும், சில ஆய்வுகள் கூறுகின்றன. இங்கு முதன்முதலாக 1876-ல் அகழாய்வு நடந்துள்ளது

தேசிய புத்துணர்ச்சி தினம்:

  • தேசிய புத்துணர்ச்சி தினம் (NATIONAL REFRESHMENT DAY, 4TH THURSDAY OF JULY), ஒவ்வொரு ஆண்டின் ஜூலை மாதத்தின் 4-வது வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி வந்துள்ளது.
  • மக்கள் தங்கள் பிஸியான கால அட்டவணையில் இருந்து நேரத்தை எடுத்து தங்களை அனுபவிக்க முடியும் என்பதை நினைவூட்டுவதற்காக இத்தினம் கொண்டாடப்படுகிறது.

சமூக ஊடக கொடுப்பனவு தினம்:

  • ஜூலை 15 அனைத்தும் சமூக ஊடக கொடுப்பனவு தினமாக (SOCIAL MEDIA GIVING DAY IN USA) அனுசரிக்கப்படுகிறது, இது அமெரிக்காவின் பல மாநிலங்களில் ஒரு சமூக ஊடக விடுமுறையாகும்
  • நாளின் நோக்கம் சமூக ஊடகங்களை அறக்கட்டளைகளுக்கு உதவுவதற்கான ஒரு தளமாக ஊக்குவிப்பதும், நிதி திரட்டலின் முக்கியத்துவம் குறித்து பொது நனவை நன்கொடையாக வழங்குவதற்கும் அதிகரிப்பதற்கும் உதவுகிறது.

பை தோராய தினம்:

TNPSC CURRENT AFFAIRS IN TAMIL

  • பை தோராயமான நாள் 2021 (PI APPROXIMATION DAY) – இது ஜூலை 22 அன்று அனுசரிக்கப்படுகிறது, இது சாதாரண பை நாள் என்றும் அழைக்கப்படுகிறது
  • நாள் கணித மாறிலி pi (π) க்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு வட்டத்தின் சுற்றளவுக்கும் அந்த வட்டத்தின் விட்டம் விகிதம் பை ஆகும்.
  • தசம வடிவத்தில், பை (π) இன் மதிப்பு 3.14 ஆகும். π சின்னத்தை 1706 இல் பிரிட்டிஷ் கணிதவியலாளர் வில்லியம் ஜோன்ஸ் இந்த விகிதத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக வடிவமைத்தார், பின்னர் அதை சுவிஸ் கணிதவியலாளர் லியோன்ஹார்ட் யூலர் பிரபலப்படுத்தினார்.
  • ஜூலை 22 பை தோராயமான நாளாக அனுசரிக்கப்படுகிறது
  • மார்ச் 14 பை நாள் (PI DAY, MARCH 14)

சந்திராயன் 2 ஏவப்பட்ட தினம், ஜூலை 22:

  • 2௦19 ஆம் ஆண்டு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து, ஜூலை 22 ஆம் தேதி, சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
  • நிலவை ஆராய்வதற்காக இந்தியாவின் 2-வது திட்டம் இதுவாகும்.

உலக மூளை தினம்:

  • உலக மூளை தினம் (WORLD BRAIN DAY), ஆண்டு தோறும் ஜூலை 22 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
  • மூளையின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது
  • இந்த ஆண்டின் கரு = Stop Multiple Sclerosis

 

Leave a Reply