TODAY CURRENT AFFAIRS 20/12/2022

Table of Contents

TODAY CURRENT AFFAIRS 20/12/2022

TODAY CURRENT AFFAIRS 20/12/2022 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 20 டிசம்பர் 2022 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

தாய்லாந்து படகுப்போட்டியில் தங்கம் வென்றார் நேத்ரா குமணன்

  • தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய பெண்கள் சாம்பியன்ஷிப் 2022 லேசர் பாய்மரப்படகு போட்டியில் தங்கம் வென்றார் தமிழகத்தின் சென்னையை சேர்ந்த நேத்ரா குமணன்.
  • இவருக்கு தமிழக அரசின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள்

  • தமிழக அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 38 பேருக்கு “தமிழ்ச் செம்மல்” விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மதுரை உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது = கனடா நாட்டை சேர்ந்த முனைவர் பாலசுந்தரம்
  • மதுரை உலகத் தமிழ்ச் சங்க இலக்கண விருது = மலேசியாவை சேர்ந்த முனைவர் மனோன்மணி தேவி
  • மதுரை உலகத் தமிழ்ச் சங்க மொழியியல் விருது = தென் கொரியாவை சேர்ந்த முனைவர் ஆரோக்கியராஜ்

தமிழக பெண் காவலருக்கு தேசிய குற்ற ஆவண காப்பக விருது

TODAY CURRENT AFFAIRS 20/12/2022

  • தமிழகத்தின் திருநெல்வேலியை சேர்ந்த பெண் காவலரான தங்கமலர்மதி அவர்களுக்கு தேசிய குற்ற ஆவண காப்பக விருது வழங்கப்பட்டுள்ளது.
  • காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளின் தரவுகளை ஆராய்ந்து, அடையாளம் காணப்படாத 19 பிரேதங்களின் அடையாளம் கண்டறிந்தமைக்காக, திருநெல்வேலி குற்ற ஆவண காப்பக தலைமை பெண் காவலர் தங்கமலர் மதிக்கு, தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் விருது வழங்கப்பட்டது.

கடந்த 25 ஆண்டுகளில் கூகுளில் அதிக தேடலில் முதலிடம் பிடித்தது, கத்தார் கால்பந்து உலகக்கோப்பை இறுதி போட்டி

  • கடந்த 25 ஆண்டுகால கூகுள் தேடலில் பிபா கால்பந்து உலகக் கோப்பை 2022 தொடரின் இறுதிப் போட்டி குறித்த தேடல் தான் முதல் இடத்தை பிடித்துள்ளது என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
  • இறுதி போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது.

கத்தார் உலகக்கோப்பை போட்டியின் 64 ஆட்டங்களையும் நேரில் சென்று பார்த்து புதிய உலக சாதனை படைத்த நபர்

  • இங்கிலாந்தை சேர்ந்த தியோ ஆக்டேன் என்ற நபர் கத்தாரில் நடைபெற்ற 22வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 64 ஆட்டங்களையும் நேரில் சென்று பார்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
  • உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை எவரும் இத்தகைய சாதனை புரிந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அர்னாலா – இந்தியக் கடற்படையின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர்க் கப்பல்

TODAY CURRENT AFFAIRS 20/12/2022

  • இந்தியக் கடற்படையின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர்க் கப்பல் “அர்னாலா”, சென்னை காட்டுப்பள்ளி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கடற்படையில் சேர்க்கப்பட்டது.
  • இது “ASW SWC PROJECT” திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட முதல் கப்பல் ஆகும்.
  • ASW SWC = Anti Submarine Warfare Shallow Water Craft
  • 6m ASW SWC கப்பல்கள் 900 டன்களின் இடப்பெயர்ச்சி மற்றும் அதிகபட்ச வேகம் 25 முடிச்சுகள் மற்றும் 1800 NM தாங்கும் திறன் கொண்டது.

ஐந்தாவது ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் ‘வாகீர்’ இந்திய கடற்படையில் சேர்ப்பு

  • “திட்டம் 75” (PROJECT 75) கீழ் உருவாக்க திட்டமிடப்பட்ட 6 நீர்மூழ்கிக் கப்பல்களில் 5 வது நீர்மூழ்கி கப்பலான “யார்டு 11879” எனப்படும் “வாகீர்” கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது // The fifth submarine of Project 75, INS Vagir, Kalvari class submarine, Yard 11879, has been inducted into the Indian Navy. It is the fifth of the six Scorpene-style submarines under Project
  • இது கல்வாரி வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல் ஆகும். இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள், ஃபிரான்ஸின் M/s கடற்படைக் குழுவின் ஒத்துழைப்புடன், Mazagon Dock Shipbuilders Limited (MDL) மும்பையில் கட்டப்பட்டது.

சர்வதேச மனித ஒற்றுமை தினம்

TODAY CURRENT AFFAIRS 20/12/2022

  • சர்வதேச மனித ஒற்றுமை தினம் (International Human Solidarity Day) = டிசம்பர் 20
  • வேற்றுமையில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 20ஆம் தேதி சர்வதேச மனித ஒற்றுமை தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்திய சமூக முன்னேற்ற குறியீடு 2022

  • பிரதமரின் சமூக பொருளாதார ஆலோசனை கவுன்சில் வெளியிட்டுள்ள சமூக முன்னேற்ற குறியீட்டில் (SOCIAL PROGRESS INDEX) தனிநபர் உரிமைகள், தனிநபர் சுதந்திரம் உள்ளிட்டவை அடங்கிய “வாய்ப்புகள்” (OPPORTUNITIES) அளவீட்டில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
  • ஒட்டுமொத்த சமூக முன்னேற்ற குறியீட்டில் “புதுச்சேரி” முதல் இடத்தை பிடித்துள்ளது.
  • ஒட்டுமொத்த சமூக முன்னேற்ற குறியீட்டில் “தமிழகம் 6 வது இடத்தை” பிடித்துள்ளது. தமிழகம் ஒட்டுமொத்த பிரிவில் 63.33 புள்ளிகள் பெற்றுள்ளது.
  • கடைசி இடத்தில “ஜார்க்கண்ட்” உள்ளது.

கூட்டுப் பயணப் படை (JEF) உச்சி மாநாடு

TODAY CURRENT AFFAIRS 20/12/2022

  • 3வது கூட்டுப் பயணப் படை (JEF) உச்சி மாநாடு, லாட்வியா நாட்டின் ரிகாவில் நடைபெற்றது // Latvia hosted the 3rd summit meeting of the Joint Expeditionary Force (JEF) on 19 December 2022 in Riga, Latvia.
  • இங்கிலாந்தின் ஆதரவுடன் லாட்வியாவின் பிரதமர் கிரிஸ்ஜானிஸ் கரீன்ஸின் முன்முயற்சியின் பேரில் உச்சிமாநாடு கூட்டப்பட்டுள்ளது.

2032 ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரியாக சிண்டி ஹூக் நியமனம்

  • 2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரியாக சிண்டி ஹூக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) என்பது ஒரு இலாப நோக்கற்ற சுயாதீன சர்வதேச அமைப்பாகும்.

 

 

 

  • TODAY CURRENT AFFAIRS 19/12/2022
  • TODAY CURRENT AFFAIRS 18/12/2022
  • TODAY CURRENT AFFAIRS 17/12/2022
  • TODAY CURRENT AFFAIRS 16/12/2022
  • TODAY CURRENT AFFAIRS 15/12/2022
  • TODAY CURRENT AFFAIRS 14/12/2022
  • TODAY CURRENT AFFAIRS 13/12/2022
  • TODAY CURRENT AFFAIRS 12/12/2022
  • TODAY CURRENT AFFAIRS 11/12/2022

Leave a Reply