TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS 19/12/2022

Table of Contents

TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS 19/12/2022

TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS 19/12/2022 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 19 டிசம்பர் 2022 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

25 விமான நிலையங்களை 2022 முதல் 2025-ஆம் ஆண்டு வரை குத்தகைக்கு விடப்பட்டுள்ளது

  • இந்திய விமான நிலைய ஆணையத்தின் 25 விமான நிலையங்கள் 2022 முதல் 2025 வரை குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.
  • இதில் தமிழகத்தில் இருந்து நான்கு விமான நிலையங்கள் அடங்கும் = சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி.

லடாக் G20 நிகழ்வை 2023 இல் நடத்த உள்ளது

  • ஏப்ரல் 2023 இல் லடாக் G20 நிகழ்வை நடத்தும்.
  • 32 வெவ்வேறு பணிநிலைகளில் 50க்கும் மேற்பட்ட நகரங்களில் 200க்கும் மேற்பட்ட கூட்டங்களை இந்தியா நடத்துகிறது.
  • பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இந்திய பிரசிடென்சியின் G20 கருப்பொருளான ‘வசுதைவ குடும்பகம்’ அல்லது ‘ஒரே பூமி ஒரு குடும்பம் ஒரு எதிர்காலம்’ என்ற தலைப்பில் நிகழ்சிகளை நடத்த உள்ளன.

எரிபொருள் நுகர்வில் இந்தியா 3 வது இடம்

  • உலக அளவில் எரிபொருள் நுகர்வில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது எனவும், பெட்ரோகெமிக்கல் துறையின் மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

750 ஆளில்லா விமானங்கள் பங்கேற்ற “ட்ரோன் ஷோ”

TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS 19/12/2022

  • உத்திரப்பிரதேசத்தின் கோரக்பூரில் 1925 ககோரி ரயில் நடவடிக்கையில் பங்கேற்ற சுதந்திரப் போராளிகளுக்கு மரியாதை செலுத்துவதற்காக 750 ஆளில்லா விமானங்கள் பங்கேற்ற “ட்ரோன் ஷோ” நிகழ்ச்சி நடைபெற்றது.
  • நிகழ்ச்சியில் பாராளுமன்றத்தின் உருவத்தை ட்ரோன்கள் விளக்குகளால் உருவாக்கி காட்டின.
  • ட்ரோன் காட்சியானது ‘ககோரி பலிதான் திவாஸ்’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருந்தது, மேலும் இது பண்டிட் ராம் பிரசாத் பிஸ்மில், அஷ்பகுல்லா கான், தாக்கூர் ரோஷன் சிங் மற்றும் ராஜேந்தர் லஹிரி உள்ளிட்டோரை கவுரவித்தது.

வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டிற்கு பணம் அனுப்புதலில் 27 ஆண்டுகளில் 23 முறை இந்தியா முதலிடம்

  • உலக வங்கி சமீபத்தில் மதிப்பிட்டுள்ளபடி, இந்தியாவிற்கு அனுப்பும் பணம் ஆண்டு இறுதிக்குள் 100 பில்லியன் டாலரை எட்டும்.
  • இந்த மைல்கல்லை எட்டிய முதல் நாடு, இந்தியா ஆகும்.
  • 1995 மற்றும் 2021 க்கு இடையில், இந்தியா 23 ஆண்டுகளாக உலகம் முழுவதும் அதிக பணம் அனுப்புகிறது என்று உலக வங்கியின் தரவு காட்டுகிறது.
  • 1998, 2004, 2005 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே அது முதல் இடத்தைப் பிடிக்கவில்லை.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த “நம்ம பள்ளி” திட்டம் துவக்கம்

  • தமிழக அரசுப் பள்ளிகளில் கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழக அரசின் சார்பில் “நம்ம பள்ளி” என்ற இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.
  • இதன் தலைவர் = டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர் வேணுகோபால் ஸ்ரீனிவாசன்
  • இதன் தூதர் = விஸ்வநாதன் ஆனந்த்
  • பெரு நிறுவனங்களின் “சமூக பொறுப்புணர்வு நிதி” (CSR = CORPORATE SOCIAL RESPONSILITY)மூலம் நிதியை பெற இந்த இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.

நிலவை ஆய்வு செய்ய யுஏஇ அனுப்பிய ரோவரில் சென்னை நிறுவனத்தின் பாகங்கள்

  • ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) முதன் முதலாக நிலவில் ஆராய்சிகளை மேற்கொள்ள “ரஷித் ரோவர்” என்ற விண்கலத்தை அனுப்பியது.
  • இந்த விண்கலத்தில் பயன்படுத்தப்பட்ட 90% பாகங்கள் சென்னையை சேர்ந்த “எஸ்டி அட்வான்ஸ்ட் காம்போசிட்” என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் தயாரித்து என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் மின்வணிக செயலி “திருமதி கார்ட்”

  • திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகம் சார்பிழ்மகளிர் சுயஉதவிக் குழு பெண்களுக்காக புதிய மின்-வணிக மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்த செயலியின் பெயர் = திருமதி கார்ட்

பிரவின் கண்ணூருக்கு பிரான்ஸ் நாட்டின் “செவாலியர்” விருது

  • பரஞ்ச கலாசாரத்தை பரப்பும் பல்துறை கலைஞரான பிரவின் கண்ணூருக்கு பிரான்ஸ் நாட்டின் “செவாலியர்” விருது வழங்கப்பட்டது.
  • “தி செவாலியர் டெஸ் ஆர்ட்ஸ் எட் லெட்டர் டெக்கரேசன்” என்னும் இவ்விருது தமிழகத்தை சேர்ந்த பிரவின் கண்ணூருக்கு வழங்கப்பட்டது.

மெட்ராஸ் ஐ.ஐ.டிக்கு கூகுள் 1 மில்லியன் டாலர் நிதி உதவி

  • செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கு கூகுள் நிறுவனம் சார்பில் 1 மில்லியன் டாலர் (சுமார் 8.26 கோடி ரூபாய்) நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதன்முறையாக ‘நூலக நண்பர்கள்’ திட்டம்

TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS 19/12/2022

  • பொது நூலகத் துறை சார்பில் “நூலக நண்பர்கள் திட்டம்” (“Friends of Library”) மாநிலத்திலேயே முதன்முறையாக திண்டுக்கல்லில் தொடங்கி வைக்கப்பட்டது.
  • இந்தத் திட்டத்தின் மூலம், அரசு நடத்தும் நூலகங்களுக்குச் செல்ல முடியாதவர்களுக்கு தனிப்பட்ட முறையில் புத்தகங்களை வழங்கும்.
  • நூலகத்தைப் பார்வையிட முடியாத மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் மருத்துவமனை உள்நோயாளிகள் போன்றவர்களுக்கு இந்தத் திட்டம் உதவிகரமாக இருக்கும்.

2022 ஸ்டீபன் எட்பெர்க் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் விருது

  • 2022 ஸ்டீபன் எட்பெர்க் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் விருது = காஸ்பர் ரூட் (ஸ்வீடன்) // Casper Ruud wins 2022 Stefan Edberg Sportsmanship Award.
  • 2004க்குப் பிறகு, ரோஜர் ஃபெடரர் (13 முறை வென்றவர்) அல்லது ரஃபேல் நடால் (கடந்த நான்கு ஆண்டுகள் உட்பட ஐந்து முறை வென்றவர்) ஆகிய இருவருமே இந்த விருதை வெல்லாதது இதுவே முதல் முறை.

கேப் டு ரியோ ரேஸ் 2023

  • கேப் டு ரியோ ரேஸ் 2023 போட்டிகள் பங்குபெற இந்தியாவின் “ஐஎன்எஸ்வி தாரிணி” இந்திய கடற்படை பாய்மரக் கப்பல் கலந்துக் கொள்ள உள்ளது.
  • போட்டி தூரம் = தென்னாப்ரிக்காவின் கேப் டவுனில் இருந்து பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரை அடைய வேண்டும் (சுமார் 30000 கிமீ)

மிச்சல் ஒபாமாவின் புதிய புத்தகம்

  • அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஒபாமாவின் மனைவி மிச்சல் ஒபாமா புதிய புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.
  • புத்தகத்தின் பெயர் = The Light We Carry: Overcoming in Uncertain Times

1971 இந்தியா-பாகிஸ்தான் போர்: லோங்கேவாலாவின் ஹீரோ பைரோன் சிங் ரத்தோர் ஜோத்பூரில் காலமானார்

  • அண்டை நாடுகளான இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 1971 லோங்கேவாலா போரின் போர் வீரரான நாயக் பைரோன் சிங் ரத்தோர், சமீபத்தில் ஜோத்பூரில் தனது 81வது வயதில் காலமானார்.
  • 1997 ஆம் ஆண்டு வெளியான ‘பார்டர்’ திரைப்படத்தில் நடிகர் சுனில் ஷெட்டி இவரை சித்தரிக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
  • 1972 ஆம் ஆண்டு தனது துணிச்சலான செயலுக்காக சேனா பதக்கம் பெற்றார்.

பூமியின் நீரை ஆய்வு செய்வதற்காக நாசா “SWOT” விண்கலத்தை ஏவியது

  • அமெரிக்காவின் நாசா மற்றும் பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான சிஎன்இஎஸ் ஆகியவை இணைந்து 16 டிசம்பர் 2022 அன்று பூமியின் மேற்பரப்பில் உள்ள அனைத்து நீரையும் கண்காணிக்க மேற்பரப்பு நீர் மற்றும் பெருங்கடல் நிலப்பரப்பு (SWOT) விண்கலத்தை ஏவின.
  • SWOT = Surface Water and Ocean Topography

2030 ஆம் ஆண்டுக்குள் 30% நில, கடல் பகுதிகளை காக்க ஐ.நா மாநாட்டில் தீர்மானம்

  • பல்லுயிர்ப் பெருக்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை பாதுகாப்பதற்கான இலக்கை 30% அதிகரிக்கவும், 2030 ஆண்டுக்குள் 20000 கோடி அமெரிக்க டாலர் நிதியை திரட்டவும் ஐ.நா மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • கனடாவின் மாண்ட்ரியல் நகரில் COP15 நிகழ்ச்சி நடைபெற்றது.
  • 2030 ஆம் ஆண்டுக்குள் 30% நில, கடல் பகுதிகளை காக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கோவா விடுதலை நாள்

TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS 19/12/2022

  • கோவா விடுதலை நாள் (Goa Liberation Day) = டிசம்பர் 19
  • போர்ச்சுகீசிய ஆட்சியில் இருந்த கோவாவை இந்திய ஆயுதப் படைகள் இணைத்ததன் நினைவாக கோவா விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது.
  • கோவா, டாமன் மற்றும் டையூ ஆகிய மூன்று போர்ச்சுகீசிய பிரதேசங்களை விடுவிக்க “ஆபரேஷன் விஜய்” மேற்கொள்ளப்பட்டது.
  • இந்திய அரசாங்கம் டிசம்பர் 1 முதல் இராணுவ நடவடிக்கை எடுக்க விரும்பியது, ஆனால் அது டிசம்பர் 18, 1961 இல் தொடங்கி டிசம்பர் 19, 1961 அன்று முடிவடைந்த 36 மணிநேர இராணுவ நடவடிக்கையாக நிகழ்ந்தது.

நல்லாட்சி வாரம் 2022

TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS 19/12/2022

  • மத்திய அரசு டிசம்பர் 19 முதல் டிசம்பர் 25, 2022 வரை நல்லாட்சி வாரத்தைக் (Good Governance Week 2022) கொண்டாடுகிறது.
  • முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி நல்லாட்சி தினமாக கொண்டாடப்படுகிறது.

அறிவியல் வெளியீடுகளில் இந்தியா 7வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது

  • அறிவியல் கட்டுரைகளை வெளியிடுவதில் இந்தியா உலக அளவில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்தியா உலகளாவிய நிலை 2010ல் 7வது இடத்தில் இருந்து 2020ல் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
  • முதல் இரண்டு இடம் = சீனா, அமேரிக்கா

உலகளாவிய உணவு பாதுகாப்பு குறியீடு

  • உலகளாவிய உணவு பாதுகாப்பு குறியீட்டில் (Global Food Security Index) இந்தியா 58.9 மதிப்பெண்களுடன் அல்ஜீரியாவுடன் 68வது இடத்தில் உள்ளது.
  • 2021 இல் இந்தியா 71வது இடத்தில் இருந்தது.
  • முதல் மூன்று இடங்கள் = பின்லாந்து, ஐயர்லாந்து, நார்வே

PETA இந்தியாவின் 2022 ஆம் ஆண்டின் சிறந்த நபர்

  • PETA இந்தியாவின் 2022 ஆம் ஆண்டின் சிறந்த நபர் = சோனாக்ஷி சின்ஹா // Sonakshi Sinha was named PETA India’s Person of the Year
  • கடந்த ஆண்டு, ஆலியா பட் PETA இந்தியாவின் ‘ஆண்டின் சிறந்த நபராக’ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அணுசக்தி ஒழுங்காற்று வாரிய புதிய தலைவராக தினேஷ் குமார் சுக்லா நியமனம்

  • அணுசக்தி ஒழுங்காற்று வாரியத் (AERB ) தலைவராக மூத்த அணு விஞ்ஞானி தினேஷ் குமார் சுக்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்
  • AERB = ATOMIC ENERGY REGULATORY BOARD

 

  • TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS 18/12/2022
  • TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS 17/12/2022
  • TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS 16/12/2022
  • TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS 15/12/2022
  • TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS 14/12/2022
  • TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS 13/12/2022
  • TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS 12/12/2022
  • TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS 11/12/2022
  • TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS 10/12/2022
  • TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS 9/12/2022
  • TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS 8/12/2022
  • TNPSC DAILY TAMIL CURRENT AFFAIRS 7/12/2022

Leave a Reply