பொது தமிழ் பகுதி ஆ எட்டுத்தொகை

எட்டுத்தொகை

 • நற்றிணை
 • குறுந்தொகை
 • ஐங்குறுநூறு
 • பதிற்றுப்பத்து
 • பரிபாடல்
 • கலித்தொகை
 • அகநானூறு
 • புறநானூறு

நற்றிணை

நற்றிணையின் உருவம்:

 • திணை = அகத்திணை
 • பாவகை = ஆசிரியப்பா
 • பாடல்கள் = 400
 • புலவர்கள் = 175
 • அடி எல்லை = 9-12

தொகுப்பு:

 • தொகுத்தவர் = தெரியவில்லை
 • தொகுப்பிதவர் = பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி

வேறுபெயர்கள்:

 • நற்றிணை நானூறு
 • தூதின் வழிகாட்டி

நூல் பெயர்க்காரணம்:

 • நல் + திணை = நற்றிணை
 • திணை = நிலம், குடி, ஒழுக்கம்
 • நற்றிணை என்பதற்கு “நல்ல ஒழுக்கலாறு” என்று பொருள்.
 • திணை என்ற பெயர் பெற்ற ஒரே நூல் நற்றிணை மட்டுமே.

உரை, பதிப்பு;

 • நற்றினைக்கு முதலில் உரை எழுதியவர் = பின்னந்தூர் நாராயணசாமி
 • நற்றிணையை முதலில் பதிப்பித்தவர் = பின்னந்தூர் நாராயணசாமி

கடவுள் வாழ்த்து:

 • இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
 • இந்நூலின் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் = திருமால்

நற்றிணையில் தொடரால் பெயர் பெற்றவர்கள்:

மலையனார் தனிமகனார் தும்பிசேர்கீரனார் வண்ணப்புறச் சுந்தரத்தனார் மடல் பாடிய மாதங்கீரனார்

நற்றிணை குறிப்பிடும் அரசர்கள்:

அதியமான் அஞ்சி காரி
அழிசி குட்டுவன்
ஆய் சேந்தன்
உதியன் நன்னன்
ஓரி பாண்டியன் நெடுஞ்செழியன்

கிடைக்காதவை:

 • 234ஆம் பாடல் கிடைக்கவில்லை.
 • “சான்றோர் வருந்திய வருத்தமும்” எனத் தொடங்கும் இறையனார் களவியல் உரை மேற்கோள் பாடல் அது என்பர்.

பொதுவான குறிப்புகள்:

 • வௌவால்களும் கனவு காணும் என்ற அறிவியல் உண்மை கூறப்பட்டுள்ளது.
 • பிற்காலத்தில் சிறந்து விளங்கிய தூது என்ற இலக்கியத்திற்கு வழிகாட்டியாக குருகு, நாரை ஆகியவற்றை தூது விடும் பண்பு இதில் கூறப்பட்டுள்ளது.
 • எனவே நற்றிணையை “தூதின் வழிகாட்டி” என்பர்.

முக்கிய அடிகள்:

 • விளையா டாயமோடு வெண்மணல் அழுத்தி
  மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
  நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்பப்
  நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
 • முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பினும்
  நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்
 • நீரின்றி அமையா உலகம் போலத்
  தம்மின்றி அமையா நம்நயந்து அருளி – (கபிலர்)
 • இளமையிற் சிறந்த வளமையும் இல்லை
 • சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவில்
 • ஒருமுலை இழந்த திருமா உண்ணி
 • நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
  வெல்வம் அன்று

குறுந்தொகை

குறுந்தொகையின் உருவம்:

 • திணை = அகத்திணை
 • பாவகை = ஆசிரியப்பா
 • பாடல்கள் = 400
 • புலவர்கள் = 205
 • அடி எல்லை = 4-8

பெயர்க்காரணம்:

 • குறுமை+தொகை = குறுந்தொகை
 • குறுகிய அடிகளை உடையதால் குறுந்தொகை எனப்பட்டது.

வேறு பெயர்கள்:

 • நல்ல குறுந்தொகை
 • குறுந்தொகை நானூறு(இறையனார் களவியல் உரை கூறுகிறது)

தொகுப்பு:

 • தொகுத்தவர் = பூரிக்கோ
 • தொகுப்பிதவர் = தெரியவில்லை

உரை, பதிப்பு:

 • இந்நூலின் 380 பாடல்களுக்கு பேராசிரியர் உரை எழுதியுள்ளார். 20 பாடல்களுக்கு நச்சினார்கினியர் உரை எழுதியுள்ளார். இத் தகவலை சீவக சிந்தாமணி சிறப்பாயிரத்தில் நச்சினார்கினியர் கூறியுள்ளார். ஆனால் இவை தற்போது கிடைக்கவில்லை.
 • நூலை முதலில் வெளியிட்டவர் = சௌரிபெருமாள் அரங்கனார்
 • நூலை முதலில் பதிப்பித்தவர் = சி.வை.தாமோதரம் பிள்ளை

கடவுள் வாழ்த்து:

 • இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
 • இந்நூலில் குறிக்கப்படும் கடவுள் = முருகன்

குறுந்தொகையில் தொடரால் பெயர் பெற்றோர் = 18 பேர்:

அணிலோடு முன்றிலார் விட்ட குதிரையார்
குப்பைக் கோழியார் மீனெறி தூண்டிலார்
காக்கைப்பாடினியார் வெள்ளிவீதியார்

குறுந்தொகையில் வடமொழிப் பெயர்கள்:

உருத்திரன் சாண்டிலியன்
உலோச்சணன் பௌத்திரன்

குறுந்தொகை குறிப்பிடும் அரசர்கள்:

சோழன் கரிகாலன் குட்டுவன்
பசும்பூண் பாண்டியன் பாரி
ஓரி நள்ளி

குறுந்தொகை பாடிய பெண்பாற் புலவர்கள் = 13 பேர்:

ஔவையார் வெள்ளிவீதியார்
வெண்பூதியார் ஆதிமந்தி

பொதுவான குறிப்புகள்:

 • எட்டுத்தொகை நூல்களுள் முதன் முதலில் தொகுக்கப்பட்ட நூல் இதுவே.
 • பரணர் பாடல்களில் வரலாற்று குறிப்புகள் அதிகம் காணப்படும்.
 • வரலாற்று புலவர்கள் எனப்படுபவர்கள் = பரணர், மாமூலனார்
 • உரை ஆசிரியர்களால் மிகுதியாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகையே.
 • குறுந்தொகையின் 236 பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன
 • திருவிளையாடல் புராணத்தில் தருமி வரலாற்றுக்கு ஊற்றாக விளங்கியது “கொங்குதேர் வாழ்க்கை’ என்னும் குறுந்தொகை பாடலே.
 • இந்நூலில் 307, 391ஆம் பாடல்கள் மட்டும் ஒன்பது அடிகள் கொண்டவை.

முக்கிய அடிகள்:

 • நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று
  நீரினும் ஆரளவின்றே  – (தேவகுலத்தார்)
 • வினையே ஆடவர்க்கு உயிரே; வாணுதல்
  மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே  – (பாலை பாடிய பெருங்கடுங்கோ)
 • யாயும் ஞாயும் யாராகியரோ
  எந்தையும் நுந்தையும் எம்முறைகேளிர்
  நீயும் யானும் எவ்வழி அறிதும்
  செம்புலப் பெயல்நீர் போல
  அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே – (செம்புலப்பெயல் நீரார்)
 • கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
  காமம் செப்பாது கண்டது மொழிமோ
  பயலியது கெழீஇய நட்பின் மயிலியல்
  செறியெயிற் றரிவை கூந்தலின்
  நறியவும் உளவோ நீ அறியும் பூவே

 

ஐங்குறுநூறு

ஐங்குறுநூற்றின் உருவம்:

 • திணை = அகத்திணை
 • பாவகை = ஆசிரியப்பா
 • பாடல்கள் = 500
 • பாடியோர் = 5
 • அடி எல்லை = 3-6

பெயர்க்காரணம்:

 • ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு
 • குறுகிய அடிகளை கொண்டு ஐநூறு பாடல்களை கொண்டதால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது.

தொகுப்பு:

 • தொகுத்தவர் = புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
 • தொகுப்பித்தவர் = யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை

உரை, பதிப்பு:

 • முதலில் பதிப்பித்தவர் = உ.வே.சாமிநாதர்
 • முதலில் உரை எழுதியவர் = ஔவை சு. துரைசாமிப்பிள்ளை

கடவுள் வாழ்த்து:

 • இந்நூலில் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
 • இந்நூலில் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் = சிவபெருமான்

நூல் பகுப்பு:

 • ஐங்குறுநூற்றில் ஒவ்வொரு தினைக்கும் நூறு நூறு பாடல்கள் என்னும் வீதத்தில் நூல் பகுக்கப்பட்டுள்ளது.
 • ஒவ்வொரு நூறும் பத்து பத்து பாடல்கள் எனப் பத்து பிரிவுகளாக பகுக்கப்பட்டுள்ளது.
 • ஒவ்வொரு பத்து பாடல்களின் தலைப்பும் “பத்து” என முடிகிறது.
 • குரங்குப்பத்து, எருமைப்பத்து, குயிற்பத்து போன்ற தலைப்புகள் உள்ளன.

பாடியோர்:

 • இந்நூலை இயற்றியவர்கள் பற்றிப் பழம்பெரும் பாடல் ஒன்று கூறுகிறது.
மருதமோ ரம்போகி, நெய்தலம் மூவன்
கருதும் குறிஞ்சி கபிலன் – கருதிய
பாலை ஓதலாந்தை பனிமுல்லை பேயனே
நூலை ஓது ஐங்குறு நூறு
 • மருதம் திணை பாடல்கள் பாடியவர் = ஓரம்போகி
 • நெய்தல் திணை பாடல்கள் பாடியவர் = அம்மூவன்
 • குறிஞ்சி திணை பாடல்கள் பாடியவர் = கபிலர்
 • பாலை திணை பாடல்கள் பாடியவர் = ஓதலாந்தை
 • முல்லை திணை பாடல்கள் பாடியவர் = பேயனார்

நூலில் கூறப்படும் அரசர்கள்:

கடுமான் குட்டுவன்
ஆதன் அவினி
கொற்கை கோமான் மத்தி

நூலில் கூறப்படும் ஊர்கள்:

தொண்டி தேனூர்
கழார்(காவிரி) கொற்கை

கிடைக்காதவை:

 • ஐங்குறுநூற்றில் உள்ள ஐநூறு பாடல்களில் 129, 130 ஆகிய இரண்டு பாடல்கள் மறைந்து போனதால் 498 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

பொதுவான குறிப்புகள்:

 • தொகை நூல்களில் மருதத்தினையை முதலாவதாக கொண்டு அமைக்கப்பட்ட நூல் இதுவே.
 • தாய்முகம் நோக்கியே ஆமைக் குட்டிகள் வளரும் என்ற உண்மையையும், முதலைகள் தம் குட்டிகளையே கொன்று தின்று விடும் என்ற உண்மையையும் கூறப்பட்டுள்ளது.
 • அம்மூவனார் இயற்றிய நெய்தல் திணையில் இடம்பெற்றுள்ள தொண்டிப்பத்து, அந்தாதி முறையில் அமைந்துள்ளது.
 • சங்க இலக்கியத்தில் உள்ளுறையும் இறைச்சியும் மிகுதியாக இடம் பெற்றுள்ள நூல் ஐங்குறுநூறு.
 • இந்திர விழா குறித்து கூறும் தொகை நூல் இதுவே.
 • தொல்காப்பியர் குறிப்பிடும் அம்மை என்ற வனப்பு இதில் விரவி வந்துள்ளது.

முக்கிய அடிகள்:

 • அன்னாய் வாழி வேண்டன்னை நம்படப்பைத்
  தேன் மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு
  உவலைக் கூவல் கீழ
  மானுண்டு எஞ்சிய கலுழி நீரே – (கபிலர்)
 • நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
  விளைக வயலே  வருக இரவலர்
  என வேட்டோய் யாயே – (ஓரம்போகியார்)
 • பூத்த கரும்பில் காய்ந்த நெல்லிற்
  கழனி யூரன்
 • வாழி ஆதன் வாழி அவினி

 

பதிற்றுப்பத்து

 • சேர அரசர்களைப் பற்றி மட்டுமே பாடும் இலக்கியம்.
 • பத்து சேர அரசர்களுக்குப் பத்து பாடல்கள் வீதம் நூறு பாடல்களைப் கொண்ட நூல் இது.

பதிற்றுப்பத்தின் உருவம்:

 • திணை = பாடாண் திணை (புறத்திணை)
 • பாவகை = ஆசிரியப்பா
 • பாடல்கள் = 100( கிடைத்தவை80)
 • புலவர்கள் = 10(அறிந்த புலவர்8)
 • அடி எல்லை = 8-57

பெயர் காரணம்:

 • பத்து + பத்து = பதிற்றுப்பத்து
 • பத்து + இன் + இற்று + பத்து = பதிற்றுப்பத்து
 • பத்து + பத்து சேர்ந்தால் பதிற்றுப்பத்து ஆகும் என்று தொல்காப்பியம் வெளிப்படையாக கூறவில்லை. நன்னூல் கூறுகிறது.

வேறுபெயர்:

 • இரும்புக்கடலை

தொகுப்பு:

 • இந்நூலை தொகுத்தவர், தொகுப்பிதவர் பெயர் தெரியவில்லை.

உரை:

 • பழைய உரை ஒன்று உள்ளது.
 • பழைய உரைக்கு உ.வே.சா வின் குறிப்புரை

பதிற்றுப்பத்தில் புலவர்களும் பரிசும்:

பத்துக்கள் பாடிய புலவர் அரசன் பரிசு
முதல் பத்து உதியஞ் சேரலாதன்
இரண்டாம் பத்து குமட்டுர் கண்ணனார் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இறையிலி நிலமாக உம்பற்காடு, ஐநூறு ஊர்கள்
மூன்றாம் பத்து பாலைக் கௌதமனார் பல்யானை செல்கெழு குட்டுவன் பத்து வேள்விகள் செய்ய உதவி, மனைவியுடன் விண்ணுலகம் புகச் செய்தான்
நான்காம் பத்து காப்பியாற்றுக் காப்பியனார் களங்காய் சென்னி நார்முடிச்சேரல் நாற்பது நூறாயிரம் பொன், சேரநாட்டில் ஒரு பகுதி
ஐந்தாம் பத்து பரணர் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் உம்பற்காட்டு வருவாய், அரசன் மகா குட்டுவ சேரல்
ஆறாம் பத்து காக்கைப்பாடினியார் நச்சொள்ளையார் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஒன்பது துலாம் பொன், நூறாயிரம் பொற்காசுகள்
ஏழாம் பத்து கபிலர் செல்வக்கடுங்கோ வாழியாதன் நூறாயிரம் பொன், நன்றா என்ற குன்றிலிருந்து கண்ணுக்கு எட்டிய தொலைவுப் பகுதி
எட்டாம் பத்து அரிசில்கிழார் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை ஒன்பது நூறாயிரம் பொன், அரசுக்கட்டில்
ஒன்பதாம் பத்து பெருங்குன்றூர் கிழார் இளஞ்சேரல் இரும்பொறை 32000 பொன், ஊர், மனை, ஏர், பிற அருங்கலங்கள் பன்னூறாயிரம்
பத்தாம் பத்து யானைகட்சேய் மாந்தரால் சேரல் இரும்பொறை

பொதுவான குறிப்புகள்:

 • இந்நூல் பாடாண் திணை என்னும் ஒரே தினைப் பாடலால் ஆனது.
 • இந்நூலின் முதல் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை.
 • ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் துறை, வண்ணம், தூக்கு(இசை) ஆகியன குறிக்கப்பட்டுள்ளன.
 • வழக்கின் இல்லாத பழஞ்சொற்களை மிகுதியாகப் பெற்றுள்ளதால் இந்நூல் “இரும்புக்கடலை” என அழைகப்படுகிறது.
 • பதிற்றுப்பத்து முதல் மூன்று நூற்றாண்டுகளில் ஆண்ட சேர வேந்தர் பரம்பரைச் செய்திகளைத் தெரிவிக்கிறது.
 • சங்க நூல்களில் அனைத்துப் பாடலும் பாடல் தொடரால் பெயர் பெற்ற ஒரே நூல் பதிற்றுப்பத்து மட்டுமே.
 • பதிற்றுப்பத்தும் இசையோடு பாடப்பட்ட நூல்.(இசையோடு பரிபாடலும் பாடப்பட்டது)
 • நான்காம் பத்து அந்தாதி தொடையில் அமைந்துள்ளது.
 • பகைவரது பெண்டிரின் கூந்தலை அறிந்து கயிறாகத் திரித்து யானைகளைக் கட்டி இழுப்பது போன்ற செய்திகள் ஐந்தாம் பத்தில் உள்ளது.
 • “பிற்காலத்தில் கல்வெட்டுகளில் இடம் பெற்ற மெயகீர்த்திகளின் போக்கு பதிகங்களில் காணப்படுகிறது” என்கிறார் தமிழண்ணல்

முக்கிய அடிகள்:

 • ஈத்தது இரங்கான் ஈத்தொறும் மகிழான்
  ஈத்தொறு மாவள்ளியன்
  மாரி பொய்க்குவது ஆயினும்
 • சேரலாதன் பொய்யலன் நசையே
  வாரார் ஆயினும், இரவலர் வேண்டித்
 • தேரில் தந்து, அவர்க்கு ஆர்பதன் நல்கும்
  நசையால் வாய்மொழி இசைசால் தோன்றல்

பரிபாடல்

பரிபாடலின் உருவம்:

 • திணை = அகமும் புறமும்
 • பாவகை = பரிபாட்டு
 • பாடல்கள் = 70( கிடைத்தவை 22 )
 • புலவர் = 13
 • அடி எல்லை = 25-400

பெயர்க்காரணம்;

 • பரிந்து வரும் இசையால் ஆன பாடல்கள்.
 • வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களுக்கும் பலவகையான் அடிகளுக்கும் பரிந்து இடம் கொடுக்கும் தன்மை உடையது பரிபாட்டு ஆகும்.
 • தொல்காப்பியர் காலம் வரை கலிப்பாவும், பரிபட்டும் வழக்கில் இருந்தது.
நாடக வழக்கிலும் உலகியல் வழக்கிலும்
பாடல் சான்ற புலன்நெறி வழக்கம்
கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும்
உரிய தாகும் என்மனார் புலவர்.

வேறு பெயர்கள்:

 • பரிபாட்டு
 • ஓங்கு பரிபாடல்
 • இசைப்பாட்டு
 • பொருட்கலவை நூல்
 • தமிழின் முதல் இசைபாடல் நூல்

தொகுப்பு:

 • இந்நூலை தொகுத்தவர் தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.

உரை, பதிப்பு:

 • பரிமேலழகர் உரை உள்ளது.
 • நூலை முதலில் பதிப்பித்தவர் = உ.வே.சா

பாடல் பகிர்வு முறை:

திருமாற்கு இருநான்கு; செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டு காடுகாட்கு ஒன்று; – மருவினிய
வையை இரு பத்தாறு; மாமதுரை நான்கென்ப
செய்ய பரிபாடல் திறம்

 

தெய்வம்

பழம்பாடலின் படி

தற்போது இருப்பவை

திருமாலுக்கு

8

6

செவ்வேள்(முருகன்)

31

8

காடுகாள்(காளி)

1

0

வையை

26

8

மதுரை

4

0

மொத்தம்

70

22

பரிப்பாடல் கூறும் என்னுப்பெயர்கள்:

எண் என்னுப்பெயர்கள்
0 பாழ்
1/2 பாகு
9 தொண்டு

பொதுவான குறிப்புகள்;

 • தொல்காப்பிய விதிப்பை பரிபாட்டு வகையில் அமைந்த ஒரே தொகை நூல் பரிபாடல் மட்டுமே.
 • தெய்வங்கள் அடிப்படையில் பகுப்பு முறை அமைந்த ஒரே தொகை நூல் இதுவே.
 • பாண்டிய நாட்டை மட்டுமே கூறுகிறது.
 • பாண்டிய நாட்டை மட்டும் கூறும் நூல்கள் = பரிபாடல், கலித்தொகை
 • இந்நூல் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கினையும் கூறுகிறது.
 • “கின்று” என்னும் காலம் காட்டும் இடைநிலை முதலில் பரிபாடலில் தான் வருகிறது.
 • இந்நூல் உலகின் தோற்றம் குறித்து கூறுகிறது.
 • இந்நூல் இசையோடு பாடப்பட்டது.

மு.வ கூற்று:

 • சங்க காலத்திற்குப் பிறகு பரிபாடல் என்ற செய்யுள் வடிவம் போற்றப்படாமல் போயிற்று.
 • விருதப்பாட்டு வளர்ந்த பிறகு கலிப்பாவும், பரிபாட்டும் போற்றப்படவில்லை

முக்கிய அடிகள்:

 • மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
  பூவொடு புரையுந் சீறார் பூவின்
  இதழகத்து அனைய தெருவம், இதழகத்து
  அரும் பொகுட்டு அனைத்தே அண்ணல் கோயில்
 • தீயினுள் தெறல் நீ! பூவினுள் நாற்றம் நீ!
  கல்லினுள் மணியும் நீ! சொல்லினுள் வாய்மை நீ!

 

கலித்தொகை

கலித்தொகையின் உருவம்:

 • திணை = அகத்திணை
 • பாவகை = கலிப்பா
 • பாடல்கள் = 150
 • அடி எல்லை = 11-80
 • பாடியோர் = 5

பெயர்க்காரணம்:

 • கலிப்பா வகையால் பாடப்பெற்ற ஒரே தொகை நூல் இதுவே.

கலிதொகையின் சிறப்பு:

திருத்தகு மாமுனி சிந்தாமணி கம்பன்
விருத்தத் கவி வளமும் வேண்டோம் – திருக்குறளோ
கொங்குவேள் மாக்கதையும் கொள்ளோம், நனி ஆர்வேம்
பொங்கு கலி இன்பப் பொருள்

என்றும் பழம் பெரும் புலவர்களால் பாராட்டப் பெற்றது.

வேறு பெயர்கள்:

 • கலி
 • குறுங்கலி
 • கற்றறிந்தோர் ஏத்தும் கலி
 • கல்விவலார் கண்ட கலி
 • அகப்பாடல் இலக்கியம்

உரை, பதிப்பு:

 • நூல் முழுமைக்கும் நச்சினார்கினியர் உரை உள்ளது.
 • நூலை முதலில் பதிப்பித்தவர் = சி.வை.தாமோதரம்பிள்ளை

கடவுள் வாழ்த்து:

 • இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
 • இந்நூலில் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் = சிவபெருமான்

பாடியோர்:

பெருங்கடுங்கோன் பாலை; கபிலன் குறிஞ்சி;
மருதனிள நாகன் மருதம்; – அருஞ்சோழன்
நல்லுருந்திரன் முல்லை; நல்லந்துவன் நெய்தல்
கல்விவலார் கண்ட கலி
 • பாலை திணை பாடல்கள் பாடியவர்     = பெருங்கடுங்கோ (36 பாடல்கள்)
 • மருதம் திணை பாடல்கள் பாடியவர்    = மருதன் இளநாகனார் (36 பாடல்கள்)
 • நெய்தல் திணை பாடல்கள் பாடியவர்   = நல்லந்துவனார் (33 பாடல்கள்)
 • குறிஞ்சி திணை பாடல்கள் பாடியவர்   = கபிலர் (29 பாடல்கள்)
 • முல்லை திணை பாடல்கள் பாடியவர்   = சோழன் நல்லுருந்திரன் (17 பாடல்கள்)

தொகுப்பு:

 • இந்நூலை தொகுத்தவர் நல்லந்துவனார்.
 • தொகுப்பிதவர் பெயர் தெரியவில்லை.
 • நூலின் முதலில் உள்ள கடவுள் வாழ்த்தையும் இறுதியில் உள்ள நெய்தற் களியையும் நல்லந்துவனாரே பாடி நூல் முழுவதையும் தொகுத்தார் என்பார் நச்சினார்கினியர்.

பொதுவான குறிப்புகள்:

 • தொல்காப்பிய விதிப்படி கலிப்பாவால் அகத்திணையை பாடும் ஒரே எட்டுத்தொகை நூல் கலித்தொகை மட்டுமே.
 • பா வகையால் பெயர் பெற்ற நூல்கள் = கலித்தொகை, பரிபாடல்
 • கலித்தொகையின் பாடல்கள் ஓரங்க நாடக அமைப்பை பெற்றுள்ளது.
 • பெண்கள் பிறந்த வீட்டுக்கு உரியவர் அல்லர் என கலித்தொகை கூறுகிறது.
 • பாலை தினையை முதலாவதாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது
 • நூல் முழுவதுமே பாண்டியர்களை பற்றிய குறிப்பே உள்ளது.
 • பிற சங்க நூல்களில் கூறப்படாத, “கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல்” போன்றவற்றை கூறியுள்ளது.
 • கலித்தொகையை நல்லந்துவனார் மட்டுமே பாடினார் எனக்கூரியவர் சி.வை.தாமோதரம்பிள்ளை
 • ஏறு தழுவுதல் பற்றி கூறும் ஒரே சங்க நூல் கலித்தொகை மட்டுமே
 • பெருந்திணை, கைக்கிளை பாடல்கள் இடம்பெற்றுள்ள ஒரே சங்க நூல் கலித்தொகை மட்டுமே.
 • காமக் கிழத்தி பேசுவதாக அமைந்த ஒரே சங்க நூல் கலித்தொகை.
 • மகாபாரத கதையை மிகுதியாக கூறும் நூல் இதுவே.

முக்கிய அடிகள்:

 • ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்
  போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
  பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
  அன்பெனப்படுவது தன்கிளை செறா அமை
  அறிவேனப்படுவது பேதையர் சொல் நோன்றல்
  செரிவேனப்படுவது கூறியது மறா அமை
 • காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல்
  யாழ்வரைத் தங்கியாங்கு
 • பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை
  மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும்

 

அகநானூறு

அகநானூற்றின் உருவம்:

 • திணை = அகத்திணை
 • பாவகை = ஆசிரியப்பா
 • பாடல்கள் = 400
 • பாடியோர் = 145
 • அடி எல்லை = 13-31

பெயர்க்காரணம்:

 • அகம் + நான்கு + நூறு = அகநானூறு
 • அகத்திணை பற்றிய நானூறு பாடல்கள் கொண்டுள்ளதால் அகநானூறு எனப் பெயர் பெற்றது.

வேறு பெயர்கள்:

 • அகம்
 • அகப்பாட்டு
 • நெடுந்தொகை
 • நெடுந்தொகை நானூறு
 • நெடும்பாட்டு
 • பெருந்தொகை நானூறு

தொகுப்பு:

 • தொகுத்தவர் = உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மனார்
 • தொகுப்பித்தவர் = பாண்டியன் உக்கிர பெருவழுதி

உரை, பதிப்பு:

 • நூலிற்கு முதலில் உரை எழுதியவர் = நா.மு.வேங்கடசாமி நாட்டார்
 • நூலை முதலில் பதிப்பித்தவர் = வே. இராசகோபால் ஐயர்

நூலின் மூவகை பாகுபாடுகள்:

 • 1-120 = களிற்றியானை நிரை
 • 121-300 = மனிமிடைப்பவளம்
 • 301-400 = நித்திலக்கோவை

தினைப் பாகுபாடு:

 • 1,3,5,7,9 என வருவன = பாலைத்திணை( 200 பாடல்கள்)
 • 2,8,12,18 என வருவன = குறிஞ்சித்திணை( 80 பாடல்கள்)
 • 4,14,24 என வருவன = முல்லைத்திணை( 40 பாடல்கள்)
 • 6,16,26 என வருவன = மருதத்திணை( 40 பாடல்கள்)
 • 10,20,30 என வருவன = நெய்தல் திணை( 40 பாடல்கள்)
ஒன்றுமூன்று ஐந்துஏழ்ஒன் பான்பாலை; ஓதாது
நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை; அன்றியே
ஆறாம் மருதம்; அணிநெய்தல் ஐயிரண்டு
கூறாதவை குறிஞ்சிக் கூற்றுபாலைவியம் எல்லாம்; பத்தாம் பனிநெய்தல்
நாலு நளிமுல்லை; நாடுங்கால் மேலையோர்
தேரும் இரண்டொட்டு இவைகுறிஞ்சி; செந்தமிழின்
ஆறு மருதம் அகம்

அகநானூறு குறிப்பிடும் அரசர்கள்:

அதியமான் எழினி
சோழன் கரிகாலன் பாண்டியன் நெடுஞ்செழியன்
உதியஞ் சேரலாதன் ஆதிமந்தி

கடவுள் வாழ்த்து:

 • இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
 • இந்நூலில் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் = சிவபெருமான்

பொதுவான குறிப்புகள்:

 • சோழர்களின் குடவோலைத் தேர்தல் முறையை பற்றி கூறுகிறது.
 • சங்க இலக்கியங்களுள் வரலாற்று செய்திகளை அதிகமாக கூறும் நூல் அகநானூறு.
 • பண்டைய தமிழ் மக்களின் திருமண விழ நடைபெறும் விதம் பற்றி கூறுகிறது.
 • அலெக்சாண்டரின் படையெடுப்புக்கு அஞ்சி நந்தர்கள் தமது செல்வங்களை எல்லாம் கங்கையாற்றின் அடியில் புதைத்து வைத்த செய்தி 20,25ஆம் பாடல்களில் கூறப்பட்டுள்ளது.

பாடல் அடிகள்:

 • இம்மை உலகத்து இசையோடும் விளங்கி
  மறுமை யுலகமும் மறுவின்றி எய்துப
  செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
  சிறுவர்ப் பயந்த செம்ம
 • நாவோடு நவிலா நகைபடு தீஞ்சசொல்
  யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வன்
 • யவனர் தந்த வினைமாண் நன்கலம்
  பொன்னோடு வந்து கறியோடு பெயரும்
 • செந்தார்ப் பைங்கிளி முன்கை ஏந்தி
  இன்றுவரல் உரைமோ சென்றிசினோர் திறத்தென
  இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென
  மழலை இன்சொல் பயிற்றும்

புறநானூறு

புறநானூற்றின் உருவம்:

 • திணை   = புறத்திணை
 • பாவகை   = ஆசிரியப்பா
 • பாடல்கள் = 400
 • புலவர்கள் = 157
 • அடி எல்லை = 4-40

பெயர்க்காரணம்:

 • புறம் + நான்கு + நூறு = புறநானூறு
 • நூலின் பெயரிலேயே புறம் என்று புறத்திணைப் பாகுபாடு புலப்பட உள்ள நூல் இது மட்டுமே.
 • புறத்திணை சார்ந்த நானூறு பாடல்கள் கொண்டதால் புறநானூறு எனப் பெயர் பெற்றது.

வேறு பெயர்கள்:

 • புறம்
 • புறப்பாட்டு
 • புறம்பு நானூறு
 • தமிழர் வரலாற்று பெட்டகம்
 • தமிழர் களஞ்சியம்
 • திருக்குறளின் முன்னோடி.
 • தமிழ்க் கருவூலம்

தொகுப்பு:

 • இந்நூலை தொகுத்தவர் தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.

உரை, பதிப்பு:

 • முதல் 266 பாடல்களுக்கு பழைய உரை உள்ளது.
 • 267-400 பாடல்களுக்கு உ.வே.சா உரை உள்ளது.
 • நூலினை முதலில் பதிப்பித்தவர் = உ.வே.சா

கடவுள் வாழ்த்து:

 • இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
 • இந்நூலில் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் = சிவபெருமான்

புறநானூறு பாடிய பெண்பாற் புலவர்கள் = 15 பேர்:

ஔவையார் பாரி மகளிர்
வெண்ணிக் குயத்தியார் ஒக்கூர் மாசாத்தியார்
காவற்பெண்டு பெருங்கோப் பெண்டு

பொதுவான குறிப்புகள்:

 • புறநானூற்றில் 11 திணைகளும், 65 துறைகளும் கூறப்பட்டுள்ளன.
 • புறநானூற்றில் கூறப்படாத திணை = உழிஞைத் திணை.
 • 244,282,289,323,355,361 ஆகிய என்னுடைய பாடல்களுக்கு தினைப் பெயர் தெரியவில்லை.
 • ஆசிரியபாவால் அமைந்திருந்தாலும் வஞ்சி அடிகளும் உள்ளது.
 • பெண்களின் வீரத்தைக் கூறும் துறை மூதின் முல்லை
 • கரிகாலன் போர் செய்த இடம் = வெண்ணிப் பரந்தலை
 • பாண்டியன் நெடுஞ்செழியன் போர் செய்த இடம் = தலையானங்கானம்
 • சோழர்கள் மௌரியர்களைத் தோற்கடித இடம் = வல்லம்
 • புறநானூற்றில் மிக அதிக பாடலை பாடியவர் = ஔவையார்.
 • ஜி.யு.போப் அவர்களை கவர்ந்த நூல் புறநானூறு. இந்நூலின் சில பாடல்களை அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
 • 15 பாண்டியர்கள், 18 சோழர்கள், 18 சேரர்கள், 18 வேளிர்களைப் பற்றி கூறுகிறது புறநானூறு.
 • புறநானூறில் 10 வகை ஆடைகள், 28 வகை அணிகலன்கள், 30 வகை படைக்கருவிகள், 67 வகை உணவுகள் கூறப்பட்டுள்ளன.
 • மேல் சாதி கீழ் சாதிப் பாகுபாடு இருப்பினும் அதனை கல்வி நீக்கும் என கூறுகிறது.

முக்கிய அடிகள்:

 • செல்வத்துப் பயனே ஈதல்
 • துய்ப்போம் எனினே தப்புந பலவே
 • யாதும் ஊரே யாவரும் கேளிர்
 • உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
 • உண்பது நாழி உடுப்பது இரண்டே
 • ஈயென இறத்தல் இழிந்தன்று, அதனெதிர்
  ஈயோன் என்றல் அதனினும் இழிந்தன்று
 • நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
  மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்
 • நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
  அல்லது செய்தல் ஓம்புமின்

 

Leave a Comment

Your email address will not be published.