சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் நளவெண்பா

நளவெண்பா

சொற்பொருள்:

  • ஆழி – கடல்
  • விசும்பு – வானம்
  • செற்றான் – வென்றான்
  • அரவு – பாம்பு
  • பிள்ளைக்குருகு – நாரைக்குஞ்சு
  • வள்ளை – ஒருவகை நீர்க்கொடி
  • கடா – எருமை
  • வெளவி – கவ்வி
  • சங்கின் பிள்ளை – சங்கின்குஞ்சுகள்
  • கொடி – பவளக்கொடி
  • கோடு – கொம்பு
  • கழி – உப்பங்கழி
  • திரை – அலை
  • மேதி – எருமை
  • கள் – தேன்
  • புள் – அன்னம்
  • சேடி – தோழி
  • ஈரிருவர் – நால்வர்
  • கடிமாலை – மணமாலை
  • தார் – மாலை
  • காசினி – நிலம்
  • வெள்கி – நாணி
  • மல்லல் – வளம்
  • மடநாகு – இளைய பசு
  • மழவிடை – இளங்காளை
  • மறுகு – அரசவீதி

ஆசிரியர் குறிப்பு:

  • பெயர் – புகழேந்திப் புலவர்
  • பிறந்த ஊர் – களத்தூர்
  • சிறப்பு – வரகுண பாண்டியனின் அவைப் புலவர்
  • ஆதரித்த வள்ளல் – சந்திரன் சுவர்க்கி
  • காலம் – பனிரெண்டாம் நூற்றாண்டு
  • இவரை “வெண்பாவிற் புகழேந்தி” என சிறப்பிப்பர்.

நூல் குறிப்பு:

  • நளவெண்பா என்பது, நளனது வரலாற்றை வெண்பாக்களால் கூறும் நூலென விரிந்து பொருள் தரும்.
  • இந்நூல் சுயம்வர காண்டம், கலித்தொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் என மூன்று காண்டங்களைக் கொண்டது.
  • இதில் 431 வெண்பாக்கள் உள்ளன.

Leave a Reply