11TH TAMIL சீறாப்புராணம்
11TH TAMIL சீறாப்புராணம்
- அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்று இலக்கியம் சீறாப்புராணம்.
- இது தமிழ் இலக்கிய மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட தலைசிறந்த இசுலாமிய இலக்கியமாகும்.
- பகையும் வறுமையும் நோயும் தீண்டாப் பொருள்வளம் நிறைந்த மதீனா நகரில் தானத்திலும் தவத்திலும் சிறந்து விளங்கிய மக்கள் தீன் நெறியை வளர்த்த பாங்கினைச் செலவியற் காண்டம் (ஹிஜிறத்துக் காண்டம்) காட்சிப்படுத்துகிறது.
ஹிஜிறத்துக் காண்டம்
- மதீனம் புக்க படலம் இடம்பெற்றுள்ள காண்டம் = ஹிஜிறத்துக் காண்டம்.
- ஹிஜிறத் என்ற அரபுச் சொல்லுக்கு இடம்பெயர்தல் என்பது பொருள்.
- நபிகள் நாயகத்திற்குக் கொடுமைகள் செய்த மக்கள் = குறைசி இன மக்கள்
அருஞ்சொற்பொருள்
- வரை – மலை
- கம்பலை – பேரொலி
- புடவி – உலகம்
- எய்தல் – அடைதல்
- துன்ன – நெருங்கிய
- வாரணம் – யானை
- பூரணம் – நிறைவு
- நல்கல் – அளித்தல்
- வதுவை – திருமணம்
- கோன் – அரசன்
- மறுவிலா – குற்றம் இல்லாத
- தெண்டிரை – தெள்ளிய நீரலை
- விண்டு – திறந்து
- மண்டிய – நிறைந்த
- தீன் – மார்க்கம்.
இலக்கணக்குறிப்பு
- மலிந்த, மண்டிய, பூத்த, பொலிந்த = பெயரெச்சங்கள்
- இடன் = ஈற்றுப் போலி
- பெரும்புகழ், தெண்டிரை = பண்புத்தொகைகள்
- பொன்னகர் = இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- மாநகர், உறுபகை = உரிச்சொல் தொடர்கள்
- தானமும் ஒழுக்கமும், தவமும் ஈகையும் = எண்ணும்மைகள்
சீறாப்புராணம் நூல் குறிப்பு
- இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில் முதன்மையானதாக விளங்குவது சீறாப்புராணம்.
- ‘சீறா’ என்பது சீறத் என்னும் அரபுச் சொல்லின் திரிபு ஆகும்.
- இதற்கு ‘வாழ்க்கை ‘ என்பது பொருள்.
- புராணம் – வரலாறு.
- நபிகள் பெருமானின் வாழ்க்கை வரலாற்றினைக் கூறும் இந்நூலை வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க உமறுப்புலவர் இயற்றினார் என்பர்.
- இந்நூல் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக்காண்டம், ஹிஜிறத்துக் காண்டம் என்னும் மூன்று காண்டங்களையும் 92 படலங்களையும் 5027 விருத்தப் பாடல்களையும் கொண்டது.
- நூலை முடிப்பதற்கு முன்பே உமறுப்புலவர் இயற்கை எய்திய காரணத்தால் ‘பனி அகமது மரைக்காயர்’ இதன் தொடர்ச்சியாக சின்னச்சீறா என்ற நூலைப் படைத்துள்ளார்.
- உமறுப்புலவர் எட்டயபுரத்தின் அரசவைப் புலவர். கடிகை முத்துப் புலவரின் மாணவர்.
- நபிகள் நாயகத்தின் மீது முதுமொழிமாலை என்ற நூலையும் இயற்றியுள்ளார்.
- வள்ளல் சீதக்காதி, அபுல்காசிம் மரைக்காயர் ஆகியோர் இவரை ஆதரித்தனர்.
-
சீறாப்புராணம் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- காவியம்
- திருமலை முருகன் பள்ளு
- ஐங்குறுநூறு
- யானை டாக்டர்
- இலக்கணம் – புணர்ச்சி விதிகள்
- இலக்கணம் – மெய்ம்மயக்கம்
- சான்றோர் சித்திரம் – ஆபிரகாம் பண்டிதர்
- மலை இடப்பெயர்கள் – ஓர் ஆய்வு
- காவடிச்சிந்து
- குறுந்தொகை
- புறநானூறு
- வாடிவாசல்
- இலக்கணம் – பகுபத உறுப்புகள்
- சான்றோர் சித்திரம் – சி.வை.தாமோதரனார்
- சித்திரகவி
- திருக்குறள்
- தமிழக கல்வி வரலாறு