11TH TAMIL பகுபத உறுப்புகள்
11TH TAMIL பகுபத உறுப்புகள்
- தமிழில் ‘சொல்’ என்பதற்கு வழங்கப்படும் மற்றொரு பெயர் = பதம்.
- இலக்கண வகையில் சொற்கள் நான்கு வகைப்படும் = பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல், இடைச்சொல்
பகுபதங்கள் யாவை?
- பகுபதங்கள் = பெயர்ச்சொல், வினைச்சொல்
- பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் பிரித்துப் பொருள் தரும் நிலையில் இருத்தலால் இவற்றைப் பகுபதங்கள் என்பர்
பகாபதங்கள் யாவை?
- பகாபதங்கள் = உரிச்சொல், இடைச்சொல்
- இடைச்சொற்கள் உரிச்சொற்கள் பகாப்பதத்திற்குரியவை ஆகும். இவற்றை பிரித்து பொருள் அறிய இயலாது.
வினைபகுபதச் சொற்கள்
- பெயர்ப்பகுபதச் சொற்களைக் காட்டிலும் வினைப்பகுபதச் சொற்களே வழக்கில் மிகுதியாக உள்ளன.
பகுபத உறுப்புகள் யாவை?
- சொற்களைப் பொருள் நோக்கிலும் பிரித்து எழுதுவர்.
- ஒவ்வொரு சொல்லிலும் உள்ள உறுப்புகள் எவையெவை என்ற வகையிலும் பிரித்து எழுதுவர்.
- அவ்வாறு பிரித்து எழுதும் உறுப்புகளைப் பகுபத உறுப்புகள் என்பர்.
பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?
- பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும். அவை,
- பகுதி
- விகுதி
- இடைநிலை
- சந்தி
- சாரியை
- விகாரம்
பகுதி விகுதி இடைநிலை
- ஒரு வினைப்பகுபதத்தில் அடிப்படை உறுப்புகள் = பகுதி, விகுதி ஆகும்.
- சில சொற்களில் பகுபத உறுப்புகள் ஒன்றோ இரண்டோ குறைந்தும் வரும்.
- சில சொற்கள் ஆறு உறுப்புகள் பெற்றும் வரும்.
- ஒரு பகுபதத்தில் பகுதி, விகுதி, இடைநிலை என்பவையே பொருள் தரும் உறுப்புகளாகும்.
- பகுதி பெரும்பாலும் சொற்பொருளையும் விகுதி, இடைநிலை ஆகியன இலக்கணப் பொருண்மைகளையும் தருகின்றன.
- இவை மூன்றும் இணையும்போது ஏற்படும் புணர்ச்சி மாற்றங்களே சந்தி, சாரியை, விகாரம் ஆகும்.
பகுதி என்றால் என்ன
- ஒரு சொல்லின் அடிச்சொல்லே = பகுதி ஆகும்.
- பகுதி என்பதன் வேறு பெயர் = முதனிலை.
- விகுதி பெறாத ஏவல் வினையாக வருவது = பகுதி
- மேலும் பகுதி விகுதி எனப் பிரிக்க இயலாததாய் இருக்கும்.
- பாடினான் என்னும் வினைமுற்றை, பாடு + இன் + ஆன் எனப் பிரிக்கலாம். இதில் ‘பாடு’ என்பது பகுதியாகவும் விகுதி பெறாத ஏவல் வினையாகவும் வருகிறது.
- இது போலவே படி, ஆடு, செய், எழுது, நட, ஓடு போன்றவை பகுதியாகவும் விகுதி பெறாத ஏவல் வினையாகவும் இருக்கின்றன.
- அறிஞர் என்னும் பெயர்ச்சொல்லை அறி + ஞ் + அர் எனப் பிரிக்கலாம். இதில் ‘அறி’ என்பது பகுதியாகவும் விகுதி பெறாத ஏவல் வினையாகவும் வருகிறது.
- பகுதி சில சொற்களில் ஒற்று இரட்டித்துக் காலம் காட்டும்.
விகுதி என்றால் என்ன
- ஒரு வினைமுற்றுச் சொல்லின் இறுதியில் நின்று திணை, பால், எண், இடம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் உறுப்பு விகுதி எனப்படும்.
- கொடுத்தான் – கொடு + த் + த் + ஆன்
- படித்தாள் – படி +த் + த் + ஆள்
- நடந்தது – நட + த்(ந்) + த் + அ + து
- இவற்றுள் ஆன், ஆள், து என்பவை விகுதிகளாகும்.
- ‘ஆன்’ என்னும் விகுதி உயர்திணை, ஆண்பால், ஒருமை, படர்க்கை இடம் என்பனவற்றையும் ‘ஆள்’ என்னும் விகுதி உயர்திணை, பெண்பால், ஒருமை, படர்க்கை இடம் என்பனவற்றையும் ‘து’ என்னும் விகுதி அஃறிணை ஒன்றன்பால், படர்க்கை இடம் என்பனவற்றையும் வெளிப்படுத்துகின்றன.
- வியங்கோள், தொழிற்பெயர், பெயரெச்சம், வினையெச்சம் போன்ற பல்வேறு இலக்கணப் பொருண்மைகளை உணர்த்தவும் விகுதி பயன்படுகிறது.
- எழுதுக – எழுது + க
- உரைத்த – உரை + த் + த் + அ
- செய்தல் – செய் + தல்
- படித்து – படி + த் + த் + உ
இடைநிலை என்றால் என்ன
- பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் தோன்றும் உறுப்புக்கு இடைநிலை என்று பெயர்.
- வினை பகுபதத்தில் இடைநிலை இரண்டு வகைப்படும் = கால இடைநிலை, எதிர்மறை இடைநிலை
- பெயர் பகுபதத்தில் ஒரு வகைப்படும் = பெயர் இடைநிலை
கால இடைநிலை
- ஒரு வினைப் பகுபதத்தில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து காலம் காட்டும் உறுப்பு = கால இடைநிலை (அல்லது) காலம் காட்டும் இடைநிலை என்பர்.
- காலத்தை காட்டும் பகுபத உறுப்பு = இடைநிலை
கால இடைநிலை வகைகள்
- காலம் காட்டும் இடைநிலைகள் 3 வகைப்படும். அவை = இறந்தகால இடைநிலைகள், நிகழ்கால இடைநிலைகள் மற்றும் எதிர்கால இடைநிலைகள் ஆகும்.
- இறந்த இடைநிலைகள் = த், ட், ற், இன்
- நிகழ்கால இடைநிலைகள் = கிறு, கின்று, ஆநின்று
- எதிர்கால இடைநிலைகள் = ப், வ்
எதிர்மறை இடைநிலை என்றால் என்ன
- எதிர்மறை வினைச்சொற்களில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து எதிர்மறையை உணர்த்தும் இடைநிலை, எதிர்மறை இடைநிலை ஆகும்.
- ஆ என்னும் எதிர்மறை இடைநிலைக்கு அடுத்து உயிர்மெய் வரின் கெடாமல் வரும்.
- உயிரெழுத்து வரின் தன் பொருளை நிறுவிக் கெட்டு வரும்.
- ஓடாது – ஓடு + ஆ + து
- காணலன் – காண் + அல் + அன்
- பேசான் – பேசு +(ஆ) + ஆன்
- எழுதிலன் – எழுது + இல் + அன்
பெயர் இடைநிலை என்றால் என்ன
- ஓர் ஆக்கப்பெயர்ச்சொல்லில் பெயர்ப்பகுதியை விகுதியோடு இணைப்பதற்கு வரும் இடைநிலை, பெயர் இடைநிலை ஆகும்.
- பெயர் இடைநிலையாக வரும் மெய்கள் = ச், ஞ், ந், த், வ்
- தமிழச்சி – தமிழ் + அ +ச்+ச் + இ
- இளைஞர் – இளை + ஞ் + அர்
- ஓட்டுநர் – ஓட்டு + ந் + அர்
- ஒருத்தி – ஒரு + த் + த் + இ
- மூவர் – மூன்று + வ் + அர்
சந்தி என்றால் என்ன
- சந்தி என்பதன் பொருள் = புணர்ச்சி ஆகும்.
- சந்தி என்பதற்குப் புணர்ச்சி என்று பெயர்.
- பகுதி, விகுதி, இடைநிலை ஆகிய பகுபத உறுப்புகள் புணரும்போது இடையில் தோன்றும் உறுப்பு, சந்தி எனப்படும்.
- சந்தி, பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வருவது பெருவழக்காகும்.
- புணர்ச்சியின்போது ஏற்படும் விகாரங்களான தோன்றல், திரிதல், கெடுதலைச் சந்தி என்றும் சொல்வர்.
- ஓர் எழுத்துத் தோன்றுதலைச் சந்தி என்றும், மற்றைய திரிதலையும் கெடுதலையும் விகாரம் என்றும் வழங்குவர்.
- பெரும்பாலும் த், ப், க் என்னும் மூன்று எழுத்துகளுள் ஒன்று சந்தியாக வரும்.
- உடம்படுமெய்கள் (ய், வ்) சந்தியாக வருவதுண்டு.
- அசைத்தான் – அசை+த் + த் + ஆன்
- படிக்கிறார் – படி + க் + கிறு + ஆர்
- காப்பார் – கா + ப்+ப்+ ஆர்
- வணங்கிய – வணங்கு + இ(ன்) + ய் + அ
எழுத்துப்பேறு என்றால் என்ன
- பகுபத உறுப்புகளில் அடங்காமல் ஏழாவது உறுப்பாக வரும் புறத்துறுப்பு எழுத்துப்பேறு எனப்படும்.
- சாரியை வரவேண்டிய இடத்தில் புள்ளி பெற்ற எழுத்து உயிர் ஏற இடமளித்து வந்தால் அதனை எழுத்துப்பேறு எனக் குறிப்பிடல் வேண்டும்.
- விகுதி தனியே வராமல் துணையாகப் பெற்று வரும் எழுத்தே எழுத்துப்பேறு ஆகும்.
- எழுத்துப்பேறு காலம் காட்டாது.
- பாடுதி – பாடு + த் + இ
- மொழியாதான் – மொழி + ய் + ஆ + த் + ஆன்
- இச்சொற்களில் ‘இ’ என்னும் முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதிக்கு முன்னும் ‘ஆ’ என்னும் எதிர்மறை இடைநிலைக்குப் பின்னும் வரும் ‘த் என்பது எழுத்துப்பேறாகும்.
சாரியை என்றால் என்ன
- பகுதியோடு இடைநிலையும் இடைநிலையோடு விகுதியும் பொருத்தமாகச் சார்ந்து இயைய வரும் உறுப்பு, சாரியை ஆகும்.
- பெரும்பாலும் சாரியை இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும்.
- பார்த்தனன் – பார் + த் + த் + அன் + அன்
- இச்சொல்லில் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும் ‘அன்’ என்பதே சாரியையாகும்.
- சந்தி வரவேண்டிய இடத்தில் உயிர்மெய் எழுத்து வந்தால் அதனைச் சாரியை என்று குறிப்பிடல் வேண்டும்.
- தருகுவென் – தா(தரு) + கு + வ் + என்
- இச்சொல்லில் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும்’கு’ என்பதே சாரியையாகும்.
- சாரியைக்குப் பொருள் இல்லை.
- அன் என்பது விகுதியாக வரும்போது அன் என்பதே சாரியையாக வரும்.
- ஆன், ஆள், ஆர் ஆகிய விகுதிகள் வரும்போது அன் சாரியையாக வராது.
விகாரம் என்றால் என்ன
- பகுதி விகுதி இடைநிலை ஆகியவை புணரும்போது அவற்றின் வடிவத்தில் ஏற்படும் மாற்றம், விகாரம் எனப்படும்.
- ஓர் எழுத்து மற்றோர் எழுத்தாகத் திரிந்தும் கெட்டும் நெடில் குறிலாகவும் மாற்றம் பெறும்.
- இத்தகைய மாற்றமே விகாரம் எனப்படும்.
- நின்றான் – நில்(ன்) + p + ஆன் – ‘நில்’ என்னும் பகுதியில், ‘ல்’ ‘ ன்’ ஆகத் திரிந்தது.
- வணங்கிய – வணங்கு + இ (ன்) + ய் + அ – இ(ன்) என்னும் இடைநிலையில் னகரம் கெட்டது.
- கண்டான் – காண் (கண்) + ட் + ஆன் – காண் என்னும் பகுதி கண் எனக் குறுகியது.
- எழுதினோர் – எழுது + இன் + ஓர்(ஆர்) – ஆர் என்னும் விகுதி ஓர் என நின்றது.
பகுபத உறுப்புகள் அட்டவணை
இறந்தகால இடைநிலைகள் |
த், ட், ற், இன் |
நிகழ்கால இடைநிலைகள் |
கிறு, கின்று, ஆநின்று |
எதிர்கால இடைநிலைகள் |
ப்,வ் |
எதிர்மறை இடைநிலைகள் |
ஆ, அல், இல் |
தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகள் |
என், ஏன், அல், அன் கு, டு, து, று |
தன்மைப் பன்மை வினைமுற்று விகுதிகள் |
எம், ஏம், அம், ஆம், ஓம், கும், டும், தும், றும் |
முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதிகள் |
ஐ. ஆய், இ |
முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதிகள் |
இர், ஈர், மின் |
படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதிகள் |
அன், ஆன் |
படர்க்கைப் பெண்பால் வினைமுற்று விகுதிகள் |
அள், ஆள் |
படர்க்கைப் பலர்பால் வினைமுற்று விகுதிகள் |
அர், ஆர், ப, மார், கள் |
படர்க்கை ஒன்றன்பால் வினைமுற்று விகுதிகள் |
து, று, டு |
படர்க்கைப் பலவின்பால் வினைமுற்று விகுதிகள் |
அ, ஆ |
வியங்கோள் வினைமுற்று விகுதிகள் |
க, இய, இயர் |
தெரிநிலைப் பெயரெச்ச விகுதிகள் |
அ, உம் |
தெரிநிலை வினையெச்ச விகுதிகள் |
உ, இ |
ஒட்டுநிலை மொழி
- தமிழ் ஓர் ஒட்டுநிலை மொழி.
- ஓரெழுத்து ஒருமொழிச் சொற்கள் இருப்பினும் தமிழில் உள்ள எல்லா எழுத்துகளும் சொல்லாவதில்லை.
- ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகள் சேர்ந்தே சொல்லாகின்றன.
- அவ்வாறு சொற்கள் புதிது புதிதாகத் தோன்றுவதற்கு ஒரு மொழியியல் நுட்ப அடிப்படை உள்ளது.
மொழியின் அடிப்படை வேர்ச்சொல்
- பகுதி ஒருமொழியின் அடிப்படையான வேர்ச்சொல்லாகும்.
- புதிய சொல்லாக்கத்திற்கு வேர்ச்சொற்களின் வருகை அவற்றின் சேர்க்கை பற்றிய மொழியியல் நுட்ப அறிவு இன்றியமையாதது.
- இதன்மூலம் துறைதோறும் புதிய கலைச்சொற்களை உருவாக்க முடியும்.
விகுதியின் சிறப்பு
- திணை, பால், எண், இடம் உணர்த்தும் சிறப்புள்ள மொழி தமிழ்மொழி.
- இச்சிறப்புக்குக் காரணம் சொல்லின் விகுதி ஆகும்.
- இவ்வாறு வேறு வேறு உறுப்புகளை இணைத்துச் சொற்களை உருவாக்க முடியும்.
- இச்சொற்களை வேண்டும்போது பிரித்துக் கொள்ளலாம்; மறுபடியும் சேர்த்துக் கொள்ளலாம். பிரித்தாலும் சேர்த்தாலும் பொருள் மாறாது.
- யுகத்தின் பாடல்
- பேச்சுமொழியும் கவிதைமொழியும்
- நன்னூல் பாயிரம்
- ஆறாம் திணை
- இலக்கணம் – மொழி மதல், இறுதி எழுத்துகள்
- சான்றோர் சித்திரம் – மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
- இயற்கை வேளாண்மை
- ஏதிலிக்குருவிகள்
- காவியம்
- திருமலை முருகன் பள்ளு
- ஐங்குறுநூறு
- யானை டாக்டர்
- இலக்கணம் – புணர்ச்சி விதிகள்
- 11TH TAMIL பகுபத உறுப்புகள்
- 11TH TAMIL பகுபத உறுப்புகள்
- 11TH TAMIL பகுபத உறுப்புகள்
- 11TH TAMIL பகுபத உறுப்புகள்
- 11TH TAMIL பகுபத உறுப்புகள்
- 11TH TAMIL பகுபத உறுப்புகள்
- 11TH TAMIL பகுபத உறுப்புகள்
- 11TH TAMIL பகுபத உறுப்புகள்
- இலக்கணம் – மெய்ம்மயக்கம்
- சான்றோர் சித்திரம் – ஆபிரகாம் பண்டிதர்
- மலை இடப்பெயர்கள் – ஓர் ஆய்வு
- காவடிச்சிந்து
- குறுந்தொகை
- புறநானூறு
- வாடிவாசல்