11TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துக்கள்

11TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துக்கள்

11TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துக்கள்

  • சொற்கள் எழுத்தொலிகளால் ஆனவை.
  • சொற்களின் புணர்ச்சியில், முதற்சொல்லின் இறுதி எழுதும் வரும் சொல்லின் முதல் எழுத்துமே சந்திக்கின்றன.

மொழி முதல் எழுத்துகள்

மொழி முதல் எழுத்துக்கள்

உயிர் எழுத்துக்கள்

12

மெய் எழுத்துக்கள்

10

மொத்தம்

22

11TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துக்கள்
11TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துக்கள்
  • மொழி முதல் எழுத்துகள் = 22 ஆகும். அவை,
    1. உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும்.
    2. மெய் எழுத்துக்கள் = தனிமெய் வடிவில் சொல்லுக்கு முதலில் வருவதில்லை. அவை உயிரெழுத்துக்களோடு சேர்ந்து உயிர்மெய் வடிவிலேயே மொழிக்கு முதலில் வருகின்றன.
    3. மெய்களில் க, ங, ச, ஞ, த, ந, ப, ம, ய, வ என்னும் பத்து வரிசைகள் உயிர்மெய் வடிவங்களாகச் சொல்லின் முதலில் வரும். (“ஙனம்” என்னும் சொல்லில் மட்டுமே “ங” வரும்)
    4. ட. ண, ர, ல, ழ, ள, ற, ன என்னும் எட்டு வரிசைகள் சொல்லின் முதலில் வருவதில்லை.
    5. ஆய்த எழுத்து சொல்லின் முதலில் வராது

மெய் எழுத்து ங்

  • “ங்” என்னும் மெல்லின மெய் “விதம்” எனப் பொருள் தரும் “ஙனம்” என்னும் சொல்லில் மட்டுமு முதலில் வரும்.
  • இந்தச் சொல்லும் தனியாக வராது.
  • “அ, இ, உ” என்ற சுட்டெழுத்துகளுடனும் “எ, யா” என்னும் வினா எழுத்துகளுடனும் இணைந்து அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், யாங்ஙனம், எங்ஙனம் என்று வரும்.
  • தற்காலத் தமிழில் இவற்றின் பயன்பாடு அரிதாகவே உள்ளது.
  • “உங்ஙனம்” என்பது தற்போது தமிழகத்தில் வழக்கில் இல்லை. ஆனால், தமிழ் இலக்கியங்களில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
  • இன்றும் இலங்கை தமிழர்கள் உங்கு, உங்ஙனம் போன்ற சொற்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

மொழி இறுதி எழுத்துகள்

மொழி இறுதி எழுத்துகள்

உயிரெழுத்து

12

மெய்யெழுத்து

11

குற்றியலுகரம்

1

மொத்தம்

24

11TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துக்கள்
11TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துக்கள்
  • மொழி இறுதி எழுத்துகள் = 24 ஆகும். அவை,
    1. உயிர் எழுத்துக்கள் 12 ம் சொல்லின் இறுதியில் வரும்.
    2. மெய்களில் ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் 11 எழுத்துக்களும் சொல்லின் இறுதியில் வரும்.
    3. க், ச், ட், த், ப், ற் என்ற வல்லின மெய் ஆறும், ங் எனும் மெல்லின மெய் ஒன்றும் சொல்லில் இறுதியில் வருவதில்லை.
    4. பழைய இலக்கண நூலார் மொழி இறுதிக் குற்றியலுகர எழுத்தையும் சேர்த்துக் கொள்வர்.
    5. ஞ், ந், வ் மூன்றும் பழைய இலக்கிய வழக்கில் சொல்லின் இறுதி எழுத்தாக வந்துள்ளன. ஆயினும், இன்றைய வழக்கில் இவை சொல்லுக்கு இறுதி எழுத்தாக வருவதில்லை.

புணர்ச்சி என்றால் என்ன

  • நாம் பேசும் போது சில சொற்களை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி ஒருசொல் போலவே பேசுகிறோம்.
  • எழுதும் போதும் அவ்வாறே எழுதுகிறோம்.
  • எ.கா
    1. தமிழ் + அரசி = தமிழரசி
    2. நாடு + பண் = நாட்டுப்பண்
  • இவற்றில் முதலில் உள்ள “தமிழ், நாடு” ஆகிய சொற்களை “நிலைமொழி” என்பர்.
  • இவற்றில் “அரசி, பண்” ஆகிய சொற்களை “வருமொழி” என்பர்.
  • இவ்வாறு நிலைமொழியும் வருமொழியும் இணைவதைப் “புணர்ச்சி” என்பர்.
  • நிலைமொழியின் இறுதி எழுத்தும், இறுதி எழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் புணர்ச்சிக்கு உரியன ஆகும்.

உயிரீரு மெய்யீறு விளக்கம்

11TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துக்கள்

  • நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர்மெய்யாக இருந்தாலும் அதன் இறுதியில் நிற்கும் வடிவம் உயிர் என்பதால் அது “உயிரீரு” எனப்படும்.
  • நிலைமொழியின் இறுதி எழுத்து மெய்யாக இருந்தால் அது “மெய்யீறு” எனப்படும்.

உயிர்முதல், மெய்ம்முதல் விளக்கம்

11TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துக்கள்

  • வருமொழியின் முதலெழுத்து உயிரெழுத்தாக இருந்தால் அது ‘உயிர்முதல்’ எனப்படும்.
  • வருமொழியின் முதலெழுத்து உயிர்மெய்யாக இருந்தாலும் அதன் முதலில் நிற்கும் வடிவம் மெய் என்பதால் அது ‘மெய்ம்முதல்’ எனப்படும்.

எழுத்துக்களின் அடிப்படையில் புணர்ச்சி

11TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துக்கள்
11TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துக்கள்
  • சொற்புணர்ச்சியில் நிலைமொழி இறுதி எழுத்தாகவும் வருமொழி முதலெழுத்தாகவும் எழுத்துகள் சந்திக்கும் முறையை நான்கு விதமாகப் பிரிக்கலாம்.

சொற்களின் அடிப்படையில் புணர்ச்சி

11TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துக்கள்
11TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துக்கள்
  • இலக்கண வகையால் சொற்கள் நான்கு வகைப்படும்.
  • இவற்றுள் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பெயரையும் வினையையும் சார்ந்தே வருகின்றன.
  • இவ்விரு சொற்களும் நிலைமொழியாகவும் வருமொழியாகவும் வந்தாலும் அவற்றின் புணர்ச்சி, எழுத்துக்களின் புணர்ச்சியே ஆகும்.

புணர்ச்சி என்பது யாது

  • புணர்ச்சி என்பது எழுத்துக்களின் சந்திப்பாகவும் சொற்களின் சந்திப்பாகவும் அமைகிறது.
  • எழுத்துக்களும் சொற்களும், ஒலிக்கூறுகளாகவும் பொருள் கூறுகளாகவும் சந்திக்கும் நிகழ்வே புணர்ச்சி ஆகும்.

குற்றியலுகர ஈறு

11TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துக்கள்
11TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துக்கள்
  • சார்பெழுத்துகளுள் ஆய்தம் சொல்லின் முதலிலோ இறுதியிலோ வராது.
  • குற்றியலுகரமும் (நுந்தை தவிர) குற்றியலிகரமும் இக்காலத்தில் சொல்லின் முதலில் வாரா.
  • ஆயினும், குற்றியலுகரத்தின் ஆறு வகைகளும் சொல்லின் இறுதியில் வருகின்றன.
  • குற்றியலுகர ஈற்றுடன் வரும் நிலைமொழி, குற்றியலுகர ஈறு அல்லது குற்றியலுகர நிலைமொழி எனப்படும்

குறிப்பு

  • குற்றியலுகரத்தின் வகைகள் = ஆறு
  • இலக்கண வகையில் சொற்களின் வகைகள் = நான்கு
  • மொழி முதல் எழுத்துக்கள் = 22
  • மொழி இறுதி எழுத்துக்கள் = 24.

 

 

 

 

Leave a Reply