6TH TAMIL வேலுநாச்சியார்

6TH TAMIL வேலுநாச்சியார்

6TH TAMIL வேலுநாச்சியார்

6TH TAMIL வேலுநாச்சியார்

  • வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர் சிறிது சிறிதாக நமது நாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர்.
  • அவர்களை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர்கள் பலர்.
  • அவர்களுள் வெற்றி பெற்றவர்கள் சிலரே.
  • வீரமும் அதனால் விளையும் வெற்றியும் போருக்கு முக்கியமானவை. சூழ்நிலைக் கேற்பச் செயல்பட்டுப் பெறும் வெற்றியே சிறந்தது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

 

வேலுநாச்சியார்

  • இராமநாதபுர மன்னர் செல்லமுத்துவின் மகள் = வேலுநாச்சியார்.
  • வேலுநாச்சியாரின் தாய் மொழி = தமிழ்.
  • வேலுநாச்சியார் அறிந்த மொழிகள் = ஆங்கிலம், பிரெஞ்ச், உருது.
  • வேலுநாச்சியாரை மணந்தவர் = சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர்.

காளையார்கோவில் போர்

  • காளையார் கோவில் போரில் ஆங்கிலேயர்கள் முத்துவடுகநாதரை கொன்று சிவகங்கையை கைப்பற்றினர்.
  • வேலுநாச்சியார் ஆங்கிலேயரை வென்று சிவகங்கையை மீட்க உறுதி பூண்டார்.
  • திண்டுக்கல் கோட்டையில் தங்கி ஒரு படையைத் திரட்டிப் பயிற்சி அளித்தார்.
6TH TAMIL வேலுநாச்சியார்
6TH TAMIL வேலுநாச்சியார்

திண்டுக்கல் கோட்டை

  • சிவகங்கையை இழந்து எட்டு ஆண்டுகளுக்கு பிறகு திண்டுக்கல் கோட்டையில் வேலுநாச்சியார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
  • இதில் அமைச்சர் தாண்டவராயர், தளபதிகள் பெரிய மருது, சின்ன மருது மற்றும் குறுநில மன்னர்கள் சிலர் கலந்துக்கொண்டனர்.

ஐதர்அலி

  • வேலுநாச்சியாருக்கு ஆதரவாக போரிட மைசூர் மன்னர் ஐதர்அலி, தனது 5000 குதிரைப்படை வீரர்களை அனுப்பி வைத்தார்.
  • ஐதர்அலியிடம் உதவி கேட்க சென்ற பொழுது, அவரிடம் உருது மொழியில் பேசி வேலுநாச்சியார் உதவி கேட்டிருந்தார்.

பெண்கள் படைத்தளபதி குயிலி

  • வேலுநாச்சியார் தனது கணவர் இறந்த காளையார்கோவில் பகுதியை மீட்க முடிவு செய்து ஆண்கள் படையை மருது சகோதரர்கள் தலைமையிலும், பெண்கள் படையை குயிலி தலைமையிலும் அனுப்பி வைத்தார்.
  • ஆங்கிலேயர்களை தோற்கடித்து காளையார்கோவில் பகுதியைக் கைப்பற்றினார் வேலுநாச்சியார்.

சிவகங்கை கோட்டை

  • விசயத்தசமி திருநாள் அன்று பெண்கள் மட்டுமே கோட்டைக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர் என்பதால் அன்று சிவகங்கை கோட்டையை தாக்க முடிவு செய்தார் வேலுநாச்சியார்.

உடையாள்

  • ஆங்கிலேயர்கள் “உடையாள்” என்னும் பெண்ணிடம் வேலுநாச்சியார் உள்ள இருப்பிடம் பற்றி தகவல் கேட்க, அவர் கூறு மறுத்து விட்டார்.
  • அதனால் ஆங்கிலேயர்கள் அவளை கொன்றுவிட்டனர்.
  • இச்செய்தியை கேட்ட வேலுநாச்சியார் “உடையாள்” நினைவாக நடுகல் ஒன்றினை நிறுவினார்.
6TH TAMIL வேலுநாச்சியார்
6TH TAMIL வேலுநாச்சியார்

சிவகங்கையை மீட்டல்

  • குயிலி தனது பெண்கள் படையுடன் மாறுவேடத்தில் சிவகங்கை கோட்டைக்குள் நுழைந்து அங்கிருந்த ஆயுதக் கிடங்கிற்கு தீ வைத்தார்.
  • பின்னர் வேலுநாச்சியார் தனது படையுடன் உள்ளே சென்று ஆங்கிலேயர்களை வென்று சிவகங்கை கோட்டையை மீட்டார்.
  • குயிலி தனது உடலில் தீ வைத்துக் கொண்டு ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கிற்குள் சென்று அக்கிடங்கை அழித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

வேலுநாச்சியார்

  • வேலுநாச்சியாரின் காலம் 1730-1796
  • வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு 1780.
  • ஜான்சிராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர் வேலு நாச்சியார்.

 

 

 

Leave a Reply