6TH TAMIL நால்வகைச் சொற்கள்

6TH TAMIL நால்வகைச் சொற்கள்

6TH TAMIL நால்வகைச் சொற்கள்

6TH TAMIL நால்வகைச் சொற்கள்

  • தமிழில் சில எழுத்துகள் தனித்து நின்று பொருள் தரும்.
  • ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும்.
  • இவ்வாறு பொருள் தருபவை சொல் எனப்படும்.
  • எ.கா:
    • பூ, கா, மை, கல், கடல், தங்கம்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

இலக்கண அடிப்படையில் சொற்கள் எத்தனை வகைப்படும்

  • இலக்கண அடிப்படையில் சொற்கள் நான்கு வகைப்படும். அவை,
    • பெயர்ச்சொல்
    • வினைச்சொல்
    • இடைச்சொல்
    • உரிச்சொல்
6TH TAMIL நால்வகைச் சொற்கள்
6TH TAMIL நால்வகைச் சொற்கள்

பெயர்ச்சொல் என்றால் என்ன

  • ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.
  • எ.கா.
    • பாரதி, பள்ளி, காலை, கண், நன்மை, ஓடுதல்.

வினைச்சொல் என்றால் என்ன

  • வினை என்னும் சொல்லுக்குச் செயல் என்பது பொருள். செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.
  • எ.கா.
    • வா, போ, எழுது, விளையாடு.

இடைச்சொல் என்றால் என்ன

  • பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் இடைச்சொல் ஆகும்.
  • இது தனித்து இயங்காது.
  • எ.கா:
    • உம் – தந்தையும் தாயும்
    • மற்று – மற்றொருவர்
    • ஐ – திருக்குறளை

உரிச்சொல் என்றால் என்ன

  • பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது உரிச்சொல் ஆகும்
  • எ.கா;
    • மா – மாநகரம்
    • சால – சாலச்சிறந்தது

 

 

Leave a Reply