6TH TAMIL தமிழர் பெருவிழா

6TH TAMIL தமிழர் பெருவிழா

6TH TAMIL தமிழர் பெருவிழா

6TH TAMIL தமிழர் பெருவிழா

  • விரும்பிக் கொண்டாடுவது விழா எனப்படும்.
  • உறவுகள் ஒன்றுகூடிக் கொண்டாடும் விழாக்கள் மனத்திற்கு மகிழ்வைத்தரும்; மனிதரிடையே ஒற்றுமையை வளர்க்கும்.
  • தமிழரின் நாகரிகம், வீரம் ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வகையில் பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
  • விழாக்கள் நமது பண்பாட்டை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கின்றன.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

தமிழர் திருநாள்

  • இயற்கையை வணங்குதல் தமிழர் மரபு.
  • தமிழர் கொண்டாடும் பல விழாக்கள் இயற்கையைப் போற்றும் வகையிலேயே அமைந்து இருக்கின்றன.
  • அவற்றுள் சிறப்பானது பொங்கல் விழா ஆகும்.
  • இது தமிழர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது.
  • கதிரவனுக்கு நன்றி கூறிச் சிறப்புச் செய்யும் விழா பொங்கல் விழா.
6TH TAMIL தமிழர் பெருவிழா
6TH TAMIL தமிழர் பெருவிழா

அறுவடைத் திருவிழா

  • உழவர்கள் ஆடித்திங்களில் விதைப்பர்.
  • தைத்திங்களில் அறுவடை செய்து பயன் அடைவர்.
  • தைத்திங்களின் முதல் நாளில் பொங்கலிட்டு வழிபடுவர்.
  • எனவே, இத்திருவிழாவை அறுவடைத்திருவிழா என்றும் அழைப்பர்.

உழவர் திருநாள்

  • உழவர்கள் இயற்கைக்கும் தம்முடன் உழைத்த கால்நடைகளுக்கும் இந்நாளில் நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர்.
  • எனவே, இவ்விழாவை உழவர் திருநாள் என்றும் கூறுவர்.

போகித்திருநாள்

  • ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்” (நன்னூல் நூற்பா-462) என்பது ஆன்றோர் மொழி.
  • வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் (போக்கி) போகித் திருநாள்.
  • இது மார்கழி மாதத்தின் இறுதி நாள் ஆகும்.

போகிப்பண்டிகை இந்திர விழாவாகக் கொண்டாடப்பட்டது

  • வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக்கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப்பண்டிகை இந்திரவிழாவாகக் கொண்டாடப்பட்டது.

பொங்கல் திருநாள்

  • தை மாதத்தின் முதல் நாள் = பொங்கல் திருநாள்.
  • “பொங்கல்” என்பதன் பொருள் = பொங்கிப்பெருகி வருவது.

மாட்டுப் பொங்கல்

  • மாடுகள் உழவர்களின் செல்வமாக அறியப்படுகிறது.
  • “மாடு” என்னும் சொல்லுக்கு “செல்வம்” என்ற பொருளும் உண்டு.
6TH TAMIL தமிழர் பெருவிழா
6TH TAMIL தமிழர் பெருவிழா

திருவள்ளுவர் ஆண்டு

  • திருவள்ளுவர் கி.மு (பொ.ஆ.மு) 31இல் பிறந்தவர்.
  • எனவே, திருவள்ளுவராண்டைக் கணக்கிட நடைமுறை ஆண்டுடன் 31ஐக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
    • (எ.கா.) 2018 + 31 = 2049
  • தை முதல் நாள் = திருவள்ளுவர் ஆண்டு துவங்குகிறது.
  • தை இரண்டாம் நாள் = திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.

அறுவடைத் திருநாள்

  • அறுவடைத் திருநாள் ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மகரசங்கராந்தி என்னும் பெயரில் கொண்டாடப்படுகிறது.
  • பஞ்சாப் மாநிலத்தில் லோரி என்று கொண்டாடப்படுகிறது.
  • குஜராத், இராஜஸ்தான் மாநிலங்களில் உத்தராயன் என்று கொண்டாடப்படுகிறது.

 

 

 

 

 

Leave a Reply