6TH TAMIL தமிழ்நாட்டில் காந்தி

6TH TAMIL தமிழ்நாட்டில் காந்தி6TH TAMIL தமிழ்நாட்டில் காந்தி

 

6TH TAMIL தமிழ்நாட்டில் காந்தி

  • காந்தியடிகள் இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர் என்பதை நாடு நன்கு அறியும். பெண்கள் முன்னேற்றம், சமுதாய மறுமலர்ச்சி, தீண்டாமை ஒழிப்பு முதலியவற்றுக்காகவும் அவர் பாடுபட்டார்.
  • எளிமையை ஓர் அறமாகப் போற்றினார்.
  • இந்தியாவில் அவர் காலடி படாத இடமே இல்லை.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

காந்தியும் பாரதியாரும்

  • காந்தியடிகள் சென்னை வந்த ஆண்டு = 1919.
  • காந்தியடிகள் 1919 இல் சென்னை வந்ததன் காரணம் = ரௌலட் சட்டத்தை எதிர்த்து போராட
  • ரௌலட் சட்ட எதிர்ப்பு கருத்தாய்வு கூட்டம் யாருடைய வீட்டில் நடைபெற்றது = இராஜாஜி வீட்டில்.
  • இராஜாஜி வீட்டில் காந்தியடிகளை சந்திக்க வந்தவர் = பாரதியார்.
  • தான் ஏற்பாடு செய்துள்ள பொதுக்கூட்டத்திற்கு தலைமை தாங்க காந்தியடிகளை கேட்டுக் கொண்டார் பாரதியார்.
  • வேறு பனி இருப்பதால் தன்னால் கலந்துக் கொள்ள முடியாது எனத் தெரிவித்தார் காந்தி.
  • இராஜாஜி, காந்தியடிகளிடம் பாரதியாரை பற்றி “இவர் தான் தமிழ்நாட்டுக் கவிஞர்” என்று கூறினார்.
  • “பாரதியாரை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்” என்று ராஜாஜியிடம் கூறினார் காந்தியடிகள்.
தமிழ்நாட்டில் காந்தி
6TH TAMIL தமிழ்நாட்டில் காந்தி

காந்தியின் தோற்றத்தில் மாற்றம் ஏற்படக் காரணம்

  • 1921 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் காந்தியடிகள் மதுரைக்கு வந்த பொழுது மக்களின் ஆடைகளைக் கண்டு, அன்று முதல் தானும் ஒரு வேட்டியும் துண்டும் மட்டும் அணியப் போவதாக முடிவு செய்து அதன் படி நடந்தார்.
  • காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் = மதுரை.

கானாடுகாத்தான்              

  • காந்தியடிகள் காரைக்குடிக்கு வந்த பொழுது கானாடுகாத்தான் என்னும் ஊரில் உள்ள அன்பர் ஒருவரில் இல்லத்தில் தங்கினார்.
  • ஆடம்பரமாக இருந்த அவ்வீட்டின் உரிமையாளரிடம் “வீட்டை அழகு செய்ய செலவிட்ட தொகையில் ஒரு பகுதியை என்னிடம் கொடுத்து இருந்தால் இதை விட அழகாக செய்து இருப்பேன்” என்று கூறினார்.
  • காந்தியடிகள் மீண்டும் அவ்வீட்டிற்கு வந்த பொழுது, வீட்டில் இருந்து வெளிநாட்டு அலங்காரப் பொருட்கள் எதுவும் அங்கு இல்லை.

மதுரை மீனாட்சியம்மன் கோவில்

  • காந்தியடிகள் மதுரைக்கு வந்த பொழுது, சிலர் அவரை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருமாறு அழைத்தனர்.
  • மீனாட்சியம்மன் கோவிலில் அனைவர்க்கும் அனுமதி உண்டா எனக் கேட்டார் காந்தியடிகள். இல்லை எனத் தெரிவித்தனர் அவர்கள்.
  • கோவிலில் அனைவர்க்கும் அனுமதி அளித்தால் மட்டுமே வருவேன் எனக்கூறி மறுத்து விட்டார்.
  • சில காலங்களுக்கு பிறகு கோவிலில் அனைவர்க்கும் அனுமதி உண்டு என அறிவிக்கப்பட்ட பொழுது தான் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்தார் காந்தியடிகள்.
தமிழ்நாட்டில் காந்தி
6TH TAMIL தமிழ்நாட்டில் காந்தி

தமிழும் காந்தியும்

  • காந்தியடிகள் எங்கிருந்த பொழுது தமிழை கற்கத் துவங்கினார் = தென் ஆப்ரிக்காவில் இருந்த பொழுது.
  • ஜி.யு.போப் எழுதிய தமிழ்க்கையேடு தம்மைக் கவர்ந்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
  • காந்தியடிகளை பெரிதும் கவர்ந்த நூல் = திருக்குறள்.
தமிழ்நாட்டில் காந்தி
6TH TAMIL தமிழ்நாட்டில் காந்தி

இலக்கிய மாநாடு

  • காந்தியடிகள் தலைமை தாங்கிய இலக்கிய மாநாடு நடைபெற்ற ஆண்டு = 1937.
  • காந்தியடிகள் தலைமை தாங்கிய இலக்கிய மாநாடு நடைபெற்ற இடம் = சென்னை.
  • காந்தியடிகள் தலைமை தாங்கிய இலக்கிய மாநாட்டிற்கு வரவேற்புக்குழுத் தலைவராக இருந்தவர் = உ.வே.சாமிநாதர்.
  • உ.வே.சாமிநாதரின் உரையைக் கேட்ட காந்தியடிகள் மகிழ்ந்தார். “இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று கூறினார் காந்தியடிகள்.
  • காந்தியடிகள் உ.வே.சா அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்.

 

 

 

Leave a Reply