6TH TAMIL வேலுநாச்சியார்
6TH TAMIL வேலுநாச்சியார்
- வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர் சிறிது சிறிதாக நமது நாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர்.
- அவர்களை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர்கள் பலர்.
- அவர்களுள் வெற்றி பெற்றவர்கள் சிலரே.
- வீரமும் அதனால் விளையும் வெற்றியும் போருக்கு முக்கியமானவை. சூழ்நிலைக் கேற்பச் செயல்பட்டுப் பெறும் வெற்றியே சிறந்தது.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
வேலுநாச்சியார்
- இராமநாதபுர மன்னர் செல்லமுத்துவின் மகள் = வேலுநாச்சியார்.
- வேலுநாச்சியாரின் தாய் மொழி = தமிழ்.
- வேலுநாச்சியார் அறிந்த மொழிகள் = ஆங்கிலம், பிரெஞ்ச், உருது.
- வேலுநாச்சியாரை மணந்தவர் = சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர்.
காளையார்கோவில் போர்
- காளையார் கோவில் போரில் ஆங்கிலேயர்கள் முத்துவடுகநாதரை கொன்று சிவகங்கையை கைப்பற்றினர்.
- வேலுநாச்சியார் ஆங்கிலேயரை வென்று சிவகங்கையை மீட்க உறுதி பூண்டார்.
- திண்டுக்கல் கோட்டையில் தங்கி ஒரு படையைத் திரட்டிப் பயிற்சி அளித்தார்.
திண்டுக்கல் கோட்டை
- சிவகங்கையை இழந்து எட்டு ஆண்டுகளுக்கு பிறகு திண்டுக்கல் கோட்டையில் வேலுநாச்சியார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
- இதில் அமைச்சர் தாண்டவராயர், தளபதிகள் பெரிய மருது, சின்ன மருது மற்றும் குறுநில மன்னர்கள் சிலர் கலந்துக்கொண்டனர்.
ஐதர்அலி
- வேலுநாச்சியாருக்கு ஆதரவாக போரிட மைசூர் மன்னர் ஐதர்அலி, தனது 5000 குதிரைப்படை வீரர்களை அனுப்பி வைத்தார்.
- ஐதர்அலியிடம் உதவி கேட்க சென்ற பொழுது, அவரிடம் உருது மொழியில் பேசி வேலுநாச்சியார் உதவி கேட்டிருந்தார்.
பெண்கள் படைத்தளபதி குயிலி
- வேலுநாச்சியார் தனது கணவர் இறந்த காளையார்கோவில் பகுதியை மீட்க முடிவு செய்து ஆண்கள் படையை மருது சகோதரர்கள் தலைமையிலும், பெண்கள் படையை குயிலி தலைமையிலும் அனுப்பி வைத்தார்.
- ஆங்கிலேயர்களை தோற்கடித்து காளையார்கோவில் பகுதியைக் கைப்பற்றினார் வேலுநாச்சியார்.
சிவகங்கை கோட்டை
- விசயத்தசமி திருநாள் அன்று பெண்கள் மட்டுமே கோட்டைக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர் என்பதால் அன்று சிவகங்கை கோட்டையை தாக்க முடிவு செய்தார் வேலுநாச்சியார்.
உடையாள்
- ஆங்கிலேயர்கள் “உடையாள்” என்னும் பெண்ணிடம் வேலுநாச்சியார் உள்ள இருப்பிடம் பற்றி தகவல் கேட்க, அவர் கூறு மறுத்து விட்டார்.
- அதனால் ஆங்கிலேயர்கள் அவளை கொன்றுவிட்டனர்.
- இச்செய்தியை கேட்ட வேலுநாச்சியார் “உடையாள்” நினைவாக நடுகல் ஒன்றினை நிறுவினார்.
சிவகங்கையை மீட்டல்
- குயிலி தனது பெண்கள் படையுடன் மாறுவேடத்தில் சிவகங்கை கோட்டைக்குள் நுழைந்து அங்கிருந்த ஆயுதக் கிடங்கிற்கு தீ வைத்தார்.
- பின்னர் வேலுநாச்சியார் தனது படையுடன் உள்ளே சென்று ஆங்கிலேயர்களை வென்று சிவகங்கை கோட்டையை மீட்டார்.
- குயிலி தனது உடலில் தீ வைத்துக் கொண்டு ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கிற்குள் சென்று அக்கிடங்கை அழித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
வேலுநாச்சியார்
- வேலுநாச்சியாரின் காலம் 1730-1796
- வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு 1780.
- ஜான்சிராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர் வேலு நாச்சியார்.
- தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும்
- சிலப்பதிகாரம்
- காணி நிலம்
- சிறகின் ஓசை
- முதலெழுத்தும் சார்பெழுத்தும்
- திருக்குறள்
- அறிவியல் ஆத்திச்சூடி
- கணியனின் நண்பன்
- ஒளி பிறந்தது
- மொழி முதல் இறுதி எழுத்துகள்
- மூதுரை
- துன்பம் வெல்லும் கல்வி
- கல்விக்கண் திறந்தவர்
- நூலகம் நோக்கி
- இன எழுத்துகள்
- ஆசாரக்கோவை
- கண்மணியே கண்ணுறங்கு