8TH TAMIL சட்டமேதை அம்பேத்கர்
8TH TAMIL சட்டமேதை அம்பேத்கர்
- தன்னலமற்ற தலைவர்கள் பலர் இந்திய விடுதலைக்குப் பாடுபட்டனர்.
- அவர்கள் தமது தொண்டினால் மக்களின் | மனத்தில் நீங்கா இடம் பெற்றனர்
- இந்திய மக்களுக்கு அரசியல் விடுதலையோடு, சமூக விடுதலையும் கிடைக்கும்போதுதான் இந்தியா முழுமையான விடுதலைபெற்ற நாடாக இருக்க முடியும் என்று கருதி உழைத்த தலைவர் = அம்பேத்கர்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்
- விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் = அம்பேத்கர்.
- இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர் = அம்பேத்கர்.
அம்பேத்கர் வாழ்க்கை குறிப்பு
- பிறப்பு = 14.04.1891
- பிறந்த ஊர் = மகாராஷ்டிரா மாநிலத்தின் இரத்தினகிரி மாவட்டத்தில் உள்ள “அம்பவாதே” என்னும் ஊர்.
- அம்பேத்கரின் தந்தை இரானுவப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
- கல்வி பயின்ற இடம் = சதாரா
- அம்பேத்கரின் இயற்பெயர் = பீமாராவ் சக்பால் அம்பவாதேகர்.
- அம்பேத்கரின் ஆசிரியர் = மகாதேவ் அம்பேத்கர்.
- ஆசிரியரின் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை “பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்” என மாற்றிக் கொண்டார்.
கல்வி பயிலல்
- அம்பேத்கரின் குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்த ஆண்டு = 1904.
- அம்பேத்கர் மும்பையில் இருந்த எல்பின்ஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.
- அம்பேத்கர் பள்ளிப் படிப்பை முடித்த ஆண்டு = 1907.
- பரோடா மன்னரின் உதவியுடன் மும்பைப் பல்கலைக்கழகத்தில் படித்து 1912 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார்.
- சிறிதுகாலம் பரோடா மன்னரின் அரண்மனையில் உயர்அலுவலராகவும் பணியாற்றினார்.
அமெரிக்காவில் உயர்கல்வி
- பரோடா மன்னர் = சாயாஜிராவ்.
- பரோடா மன்னர் சாயாஜிராவ் உதவியுடன் உயர்கல்வி கற்க அமெரிக்கா சென்றார்.
- அம்பேத்கர் அமெரிக்காவில் கல்வி பயின்ற பல்கலைக்கழகம் = கொலம்பியா பல்கலைக்கழகம்.
- அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1915 ஆம் ஆண்டு “பண்டைக்கால இந்திய வணிகம்” என்ற ஆய்விற்காக முதுகலைப் பட்டம் பெற்றார்.
இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்
- இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றைப் படைத்தளித்தார்.
- அதைச் சிறுபுத்தகமாகவும் வெளியிட்டார்.
- அச்சில் வெளிவந்த அம்பேத்கரின் முதல் நூல் = இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்.
இந்தியாவின் தேசியப்பங்கு வீதம்
- அம்பேத்கருக்கு “இந்தியாவின் தேசியப்பங்கு வீதம்” என்ற ஆய்வுக்காக, கொலம்பியா பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது.
- அம்பேத்கருக்கு முனைவர் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் = அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம்.
ரூபாய் பற்றிய பிரச்சனை
- பொருளாதாரம் படிப்பதற்காக அம்பேத்கர் சென்ற இடம் = இலண்டன்.
- பொருளாதாரம் படிப்பதற்காக அம்பேத்கர் இலண்டன் சென்ற ஆண்டு = 1920.
- நூலகம் திறக்கும் போது முதல்ஆளாக நுழைந்து மூடும்போது கடைசி ஆளாக வெளியேறுவார் = அம்பேத்கர்.
- 1921 ஆம் ஆண்டு முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றார்.
- 1923 ஆம் ஆண்டு “ரூபாய் பற்றிய பிரச்சனை” என்னும் ஆராய்ச்சிக் கட்டுரைக்காக முனைவர் பட்டமும் பெற்றார்.
- 1923 ஆம் ஆண்டு சட்டப் படிப்பில் பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்.
பதினான்கு பெட்டி புத்தகம்
- வட்டமேசை மாநாட்டிற்கு சென்ற அம்பேத்கர், மாநாடு முடிந்து திரும்பிய போது “பதினான்கு பெட்டிகள்” நிறைய புத்தகங்களைக் கொண்டு வந்தார்.
ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை
- “ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை” என்ற அமைப்பை நிறுவியவர் = அம்பேத்கர்.
- “ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வுப் பேரவை“ என்ற அமைப்பை அம்பேத்கர் துவங்கிய ஆண்டு = 1924.
இலண்டன் வட்டமேசை மாநாடு
- வட்டமேசை மாநாடு நடைபெற்ற இடம் = இலண்டன்.
- 1930 ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படும் முன் “என் மக்களுக்கு நியாயமாக என்ன கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன்; அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழு மனத்துடன் ஆதரிப்பேன்” என்று கூறினார் அம்பேத்கர்.
இரண்டாவாது வட்ட மேசை மாநாடு
- ஒடுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்படவேண்டும் என்று இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் வலியுறுத்தினார்.
பூனா ஒப்பந்தம்
- இரண்டாவது வட்ட மேசை மாநாட்டின் விளைவாக, ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் ஒடுக்கப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் இரட்டை வாக்குரிமை வழங்கப்பட்டது.
- ஆனால், இதை ஏற்க மறுத்த காந்தியடிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
- இதன் விளைவாக 1931 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் இருபத்து நான்காம் நாள் காந்தியடிகளும் அம்பேத்கரும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
- அதன்படி ஒடுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாகப் பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
- இந்த ஒப்பந்தமே பூனா ஒப்பந்தம் எனப்பட்டது.
சுதந்திரத் தொழிலாளர் கட்சி
- மாநில சுயாட்சி வழங்குவதற்கான இந்திய அரசாங்கச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு = 1935.
- ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் நலனைப் பாதுகாக்கத் தேர்தலில் போட்டியிட அம்பேத்கர் விரும்பினார்.
- அம்பேத்கர் துவங்கிய கட்சி = சுதந்திரத் தொழிலாளர் கட்சி.
- அவர் வெற்றி பெற்றதுடன் அவரின் கட்சி வேட்பாளர்கள் பதினைந்து பேரும் வெற்றிபெற்றனர்.
ஒடுக்கப்பட்ட பாரதம்
- அம்பேத்கர் துவக்கிய இதழ் = ஒடுக்கப்பட்ட பாரதம்.
- “ஒடுக்கப்பட்ட பாரத்” என்ற இதழை அம்பேத்கர் துவக்கிய ஆண்டு = 1927.
சமாஜ் சமாத சங்கம்
- சமத்துவச் சமுதாயத்தை அமைக்கும் நோக்கில் இவர் சமாஜ் சமாத சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார்;
- 1930 ஆம் ஆண்டு நாசிக் கோயில் நுழைவுப் போராட்டத்தினை நடத்தி வெற்றி கண்டார்.
- “நாசிக் கோயில் நுழைவுப் போராட்டத்தை” அம்பேத்கர் நடத்திய ஆண்டு = 1930.
இந்திய அரசியல் சாசன சபையின் தலைவர்
- 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் பதினைந்தாம் நாள் இந்தியா விடுதலை பெற்றது.
- ஜவகர்லால் நேரு தலைமையில் அமைந்த அரசில் அம்பேத்கர் சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு
- 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 29 ஆம் நாள் அரசியல் நிர்ணய மன்றம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது.
- அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு (Drafting committee) உருவாக்கப்பட்டது.
- இக்குழுவில், கோபால்சாமி, அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, கே.எம். முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவராவ், டி. பி. கைதான் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றனர்.
- இக்குழு தனது அறிக்கையை 1948, பிப்ரவரி 21-இல் ஒப்படைத்தது.
- அம்பேத்கர் தலைமையிலான சட்ட வரைவுக்குழு, அப்போது மக்களாட்சி நடைபெற்ற நாடுகள் பலவற்றிலிருந்து இந்திய நடைமுறைக்குப் பொருந்தும் சட்டக்கூறுகளை, இந்திய அரசியலமைப்பு வரைவில் சேர்த்தது.
மிகச்சிறந்த சமூக ஆவணம்
- அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், குடிமக்களின் உரிமைகளுக்குப் பலவகைகளில் பாதுகாப்பை அளிப்பதாக அமைந்தது.
- இது மிகச்சிறந்த சமூக ஆவணம் என வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்படுகிறது.
புத்த சமயம் மீது பற்று
- அம்பேத்கர் புத்த சமயக் கொள்கைகளின் மீது ஈடுபாடு கொண்டார்
- 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள் நாக்பூரில் இலட்சக்கணக்கான மக்களோடு புத்த சமயத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
- அவர் எழுதிய “புத்தரும் அவரின் தம்மமும்” என்னும் புத்தகம் அவரது மறைவுக்குப் பின் 1957 ஆம் ஆண்டு வெளியானது.
- “புத்தரும் அவரின் தம்மமும்” என்ற நூலின் ஆசிரியர் = அம்பேத்கர்.
- ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தம் வாழ்நாள் முழுவதும் உழைத்த அம்பேத்கர், 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாள் காலமானார்.
- அவருடைய மறைவிற்குப் பின், இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1990 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
அம்பேத்கரின் பொன்மொழி
- “நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை.” என்று கூறியவர் = அம்பேத்கர்.
இரட்டைமலை சீனிவாசன்
- இந்தியர்களுக்கு அரசியல் உரிமை வழங்குவதைப் பற்றி முடிவு செய்ய 1930 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் இங்கிலாந்தில் முதலாவது வட்டமேசை மாநாடு நடைபெற்றது.
- ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாளராக அம்பேத்கருடன் தமிழகத்தைச் சேர்ந்த இராவ்பகதூர் இரட்டைமலை சீனிவாசனும் கலந்துகொண்டார்.
அரசியல் அமைப்புச் சட்டம்
- உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாக இந்தியா விளங்குகிறது.
- இந்நாட்டில் பல்வேறுபட்ட இன, மொழி, சமயங்களைச் சார்ந்த மக்கள் வாழ்கின்றனர்.
- இவர்களை ஒன்றிணைக்க, ஆட்சி நடத்த அடிப்படையான சட்டம் தேவைப்படுகிறது.
- இச்சட்டத்தினையே அரசியலமைப்புச் சட்டம் என்பர். உலகில் உள்ள அனைத்து நாடுகளும் அந்தந்த நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்டே இயங்குகின்றன.
- அஃது எழுதப்பட்டதாகவோ அல்லது எழுதப்படாததாகவோ இருக்கக்கூடும்.
- பல்துறைக் கல்வி
- ஆன்ற குடிப்பிறத்தல்
- வேற்றுமை
- நிறுத்தற்குறிகள்
- திருக்கேதாரம்
- பாடறிந்து ஒழுகுதல்
- நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்
- 8TH TAMIL சட்டமேதை அம்பேத்கர்
- 8TH TAMIL சட்டமேதை அம்பேத்கர்
- 8TH TAMIL சட்டமேதை அம்பேத்கர்
- 8TH TAMIL சட்டமேதை அம்பேத்கர்
- 8TH TAMIL சட்டமேதை அம்பேத்கர்
- 8TH TAMIL சட்டமேதை அம்பேத்கர்
- 8TH TAMIL சட்டமேதை அம்பேத்கர்
- தமிழர் இசைக்கருவிகள்
- தொகைநிலை தொகாநிலைத் தொடர்கள்
- இணைச்சொற்கள்
- வளம் பெருகுக
- மழைச்சோறு
- கொங்குநாட்டு வணிகம்
- காலம் உடன் வரும்
- புணர்ச்சி