8TH TAMIL பல்துறைக் கல்வி

8TH TAMIL பல்துறைக் கல்வி

8TH TAMIL பல்துறைக் கல்வி

8TH TAMIL பல்துறைக் கல்வி

  • கேடில் விழுச்செல்வம் கல்வி.
  • மனிதன் விலங்கில் இருந்து மாறுபட்டு உயர்ந்து நிற்பதற்கு அடிப்படையாய் இருப்பது கல்வி ஆகும்.
  • மனித சமுதாயத்தின் வளர்ச்சியிலும் அதைச் சீர்திருத்தி இட்டுச் செல்வதிலும் கல்வி பெரும்பங்கு வகிக்கிறது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

ஏட்டுக்கல்வி

  • இந்நாளில் ஏட்டுக்கல்வியே கல்வி என்னும் ஒரு கொள்கை எங்கும் நிலவு வருகிறது.
  • ஏட்டுக்கல்வி மட்டும் கல்வி ஆகாது.
  • தேர்வில் தேர்ச்சி பெற்று, தொழிலில் நுழைவதற்கு கல்வி ஒரு கருவியாக கருதப்பட்டு வருகிறது.
  • இக்கல்வியால் கல்விக்கும் வாழ்விற்கும் தொடர்பில்லாமல் போனது.
  • தொழில் நோக்குடன் கல்வி பயில வேண்டாம் என்கிறார் திரு.வி.க.
  • அறிவை பேருக்கும் பொருட்டு கல்வி பயில வேண்டும் என்கிறார் திரு.வி.க.
  • இன்றைய கல்வி “தொழிலில்” நுழைவதற்கு கருவியாக கொள்ளப்பட்டு வருகிறது.
8TH TAMIL பல்துறைக் கல்வி
8TH TAMIL பல்துறைக் கல்வி

தாய்மொழி வழிக்கல்வி

  • தாய்மொழி வழியாக கல்வி பெறுவதே சிறப்பு என்கிறார் திரு.வி.க.
  • தாய்மொழி வழியாக கல்வி கற்பதே இயற்கை முறையாகும் என்கிறார் திரு.வி.க.
  • முதல் முதல் தாய்மொழி வாயிலாகவே கல்வி பயில வேண்டும் என்கிறார் திரு.வி.க.
  • “தாய்நாடு” என்னும் பெயர் தாய்மொழியைக் கொண்டே பிறப்பது ஆகும் என்கிறார் திரு.வி.க.

தமிழ்வழிக் கல்வி

  • மொழிபெயர்ப்பு முறையை கொண்டு தமிழர்கள் ஏன் தாய்மொழியை வளர்த்தல் கூடாது என்கிறார் திரு.வி.க.
  • தமிழை வளர்க்கும் முறையிலும் அளவிலும் பிறமொழிக் கலப்பு அவசியமாகும் என்கிறார் திரு.வி.க.
  • தமிழ்மொழியில் அறிவுக்கலைகள் இல்லை என்னும் பழம்பாட்டை நிறுத்தி, அக்கலைகளைத் தமிழில் பெயர்த்து எழுதித் தாய்மொழிக்கு ஆக்கந் தேடுவோம் என்னும் புதுப்பாட்டைப் பாடுமாறு சகோதரர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்கிறார் திரு.வி.க.
  • கலைகள் யாவும் தாய்மொழி வழி மாணாக்கர்க்கு அறிவுறுத்தப் பெறுங் காலமே, தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறும் காலமாகும் என்கிறார் திரு.வி.க.
  • “கலப்பில் வளர்ச்சி உண்டென்பது இயற்கை நுட்பம்” என்கிறார் திரு.வி.க.
8TH TAMIL பல்துறைக் கல்வி
8TH TAMIL பல்துறைக் கல்வி

காப்பியக் கல்வி

  • வாழ்விற்குரிய இன்பங்களுள் தலையாயது “காவிய இன்பம்” என்கிறார் திரு.வி.க.
  • தமிழில் இலக்கியங்கள் பலப்பல இருக்கின்றன.
  • “இயற்கை ஓவியம் பத்துப்பாட்டு, இயற்கை இன்பக்கலம் கலித்தொகை, இயற்கை வாழ்வில்லம் திருக்குறள், இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும், இயற்கைத் தவம் சிந்தாமணி, இயற்கைப் பரிணாமம் கம்பராமாயணம், இயற்கை அன்பு பெரியபுராணம், இயற்கை இறையுறையுள் தேவார திருவாசக திருவாய் மொழிகள்”.
      • இயற்கை ஓவியம் = பத்துப்பாட்டு
      • இயற்கை இன்பக்கலம் = கலித்தொகை
      • இயற்கை வாழ்வில்லம் = திருக்குறள்
      • இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் = சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
      • இயற்கைத் தவம் = சிந்தாமணி
      • இயற்கைப் பரிணாமம் = கம்பராமாயணம்
      • இயற்கை அன்பு = பெரியபுராணம்
      • இயற்கை இறையுறையுள் = தேவார திருவாசக திருவாய் மொழிகள்
  • இத்தமிழ்க் கருவூலங்களை உன்ன உன்ன உள்ளத்தெழும் இன்ப அன்பைச் சொல்லால் சொல்ல இயலாது.
  • “இளைஞர்களே! தமிழ் இளைஞர்களே! பெறற்கரிய இன்ப நாட்டில் பிறக்கும் பேறு பெற்றிருக்கிறீர்கள்! தமிழ் இன்பத்திலுஞ் சிறந்த இன்பம் இவ்வுலகிலுண்டோ? தமிழ்க் காவியங்களைப் படியுங்கள். இன்பம் நுகருங்கள்” என்கிறார் திரு.வி.க

அறிவியல் கல்வி

  • புறஉலக ஆராய்ச்சிக்கு அறிவியல் “கொழுகொம்பு” போன்றது என்கிறார் திரு.வி.க.

ஐ.நா அவையின் முதல் பெண் தலைவர்

  • எ.நா அவையின் முதல் பெண் தலைவர் = விஜயலட்சுமி பண்டிட்
  • “கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று. அது மெய்ம்மையைத் தேடவும் அறநெறியைப் பயிலவும் மனித ஆன்மாவுக்கு பயிற்சி அளிக்கும் ஒரு நெறிமுறை ஆகும்” என்று கூறியவர் = விஜயலட்சுமி பண்டிட்.

கல்வி பற்றி குலோத்துங்கன்

8TH TAMIL பல்துறைக் கல்வி
8TH TAMIL பல்துறைக் கல்வி

ஏடன்று கல்வி; சிலர் எழுதும் பேசும்

இயலன்று கல்வி; பலர்க் கெட்டா தென்னும்

வீடன்று கல்வி; ஒரு தேர்வு தந்த

விளைவன்று கல்வி; அது வளர்ச்சி வாயில்

–    குலோத்துங்கன்

திரு.வி.க ஆசிரியர் குறிப்பு

8TH TAMIL பல்துறைக் கல்வி
8TH TAMIL பல்துறைக் கல்வி
  • திரு.வி.க. என்று அனைவராலும் குறிப்பிடப்படும் திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தரனார் அரசியல், சமுதாயம், சமயம், தொழிலாளர் நலன் எனப் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர்;
  • சிறந்த மேடைப் பேச்சாளர்;
  • தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்படுபவர்.
  • இவர் மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்ச்சோலை, பொதுமை வேட்டல், முருகன் அல்லது அழகு, இளமை விருந்து உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

 

 

8TH TAMIL

 

Leave a Reply