8TH TAMIL பாரத ரத்னா எம் ஜி இராமச்சந்திரன்
8TH TAMIL பாரத ரத்னா எம் ஜி இராமச்சந்திரன்
- தான் எடுத்துக்கொண்ட செயலில் வெற்றியாளராக விளங்கிட வேண்டும் என்கிற எண்ணம் எல்லோருக்கும் உண்டு.
- எண்ணியதை எண்ணியவாறே செய்து முடிக்கும் வல்லமை சிலருக்கு வாய்க்கும்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
சத்துணவுத் திட்டம்
- பள்ளி மாணவர்களுக்காக காமராசர் துவக்கிய மதிய உணவுத் திட்டத்தை, சத்துணவுத் திட்டமாக மாற்றினார் எம்.ஜி.இராமச்சந்திரன்
எம்.ஜி.இராமச்சந்திரன் வாழ்க்கை குறிப்பு
- எம்.ஜி.ஆரின் குடும்பம் கேரளாவை சேர்ந்தவர்கள்.
- பெற்றோர் = கோபாலன் – சத்தியபாமா
- இவர்களின் ஐந்தாவது மகன் = எம்.ஜி.இராமச்சந்திரன்
- பிறந்த தேதி = 1917 ஜனவரி 17 ஆம் நாள்
- குடும்ப சூழ்நிலை காரணமாக இலங்கைக்கு குடிபெயர்ந்தனர்.
- எம்.ஜி.ஆர் சிறுவனாக இருந்த பொழுது தந்தையை இழந்தார்.
- அவரின் தாயார் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தமிழ்நாட்டின் கும்பகோணத்திற்கு குடிபெயர்ந்தார்.
- கும்பகோணத்தில் உள்ள ஆணையடிப் பள்ளியில் எம்.ஜி.ஆர் கல்வி பயின்றார்.
எம்.ஜி.ஆர் சிறப்புப் பெயர்கள்
- புரட்சித்தலைவர்
- எம்.ஜி.ஆர்
- புரட்சி நடிகர்
- மக்கள் திலகம்
- பொன்மனச் செம்மல்
புரட்சி நடிகர்
- வறுமையின் காரணமாக எம்.ஜி.ஆரும் அவரது அண்ணனும் பள்ளிப் படிப்பை தொடர முடியாமல் நாடக குழுவில் சேர்ந்தனர்.
- எம்.ஜி.ஆர் தமது நடிப்பாற்றலால் நாடகக்குழுவின் முதன்மை நடிகராக உயர்ந்தார்.
பாரத் பட்டம்
- இந்திய அரசு மிகச் சிறந்த நடிகருக்கு வழங்கும் “பாரத்” பட்டத்தை எம்.ஜி.ஆருக்கு வழங்கி சிறப்பித்துள்ளது.
எம்.ஜி.ஆர் செயல்படுத்திய சமூக நலத்திட்டங்கள்
- உழவர்களின் கடன் தள்ளுபடி
- ஏழைகளுக்கான வீட்டு வசதித்திட்டம்
- ஆதரவற்ற மகளிர்க்கு திருமண உதவித் திட்டம்
- தாய்சேய் நல இல்லங்கள்
- பற்பொடி வழங்கும் திட்டம்
- நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடநூல் வழங்கும் திட்டம்
- முதியோர் உதவித்தொகை திட்டம்
- வேலைவாய்பு அற்றோருக்கு உதவித்தொகை திட்டம்
எம்.ஜி.ஆரின் தமிழ் வளர்ச்சி பணிகள்
- பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தங்களுள் சிலவற்றை செயல்படுத்தி, தமிழ் எழுத்து முறையை எளிமை ஆக்கினார்.
- மதுரையில் “ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை” சிறப்பாக நடத்தினார்.
- தஞ்சையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் “தமிழ்ப் பல்கலைக்கழகத்தை” தோற்றுவித்தார்.
எம்.ஜி.ஆர் சிறப்புகள்
- சென்னைப் பல்கலைக் கழகம் எம்.ஜி.ஆரின் பணிகளைப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கியது.
- தமிழக அரசு அவர் நினைவைப் போற்றும் வகையில் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தை நிறுவியுள்ளது;
- சென்னைக் கடற்கரையில் இவருக்கு எழிலார்ந்த நினைவிடம் ஒன்றையும் அமைத்துள்ளது.
- அவரது இறப்புக்குப்பின் இந்திய அரசு, மிக உயரிய பாரத ரத்னா (இந்திய மாமணி) விருதினை 1988ஆம் ஆண்டு வழங்கிப் பெருமைப்படுத்தியது.
- எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை ஒட்டி (2017 – 2018) தமிழக அரசால் சென்னையிலும் மதுரையிலும் பேருந்து நிலையங்களுக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- இந்திய அரசு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குப் புரட்சித் தலைவர் டாக்டர். எம். ஜி. இராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்து, அவரைப் பெருமைப்படுத்தியுள்ளது.
- பல்துறைக் கல்வி
- ஆன்ற குடிப்பிறத்தல்
- வேற்றுமை
- நிறுத்தற்குறிகள்
- திருக்கேதாரம்
- பாடறிந்து ஒழுகுதல்
- நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்
- தமிழர் இசைக்கருவிகள்
- தொகைநிலை தொகாநிலைத் தொடர்கள்
- இணைச்சொற்கள்
- வளம் பெருகுக
- மழைச்சோறு
- கொங்குநாட்டு வணிகம்
- காலம் உடன் வரும்
- புணர்ச்சி