8TH TAMIL வேற்றுமை

8TH TAMIL வேற்றுமை

8TH TAMIL வேற்றுமை

8TH TAMIL வேற்றுமை

  • ஒரு பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறையை வேற்றுமை என்பர்.
  • இதற்காகப் பெயர்ச்சொல்லுடன் இணைக்கப்படும் அசைகளை “வேற்றுமை உருபுகள்” என்று கூறுவர்.

வேற்றுமை எத்தனை வகைப்படும்

  • வேற்றுமை எட்டு வகைப்படும். அவை,
    • முதல் வேற்றுமை
    • இரண்டாம் வேற்றுமை
    • மூன்றாம் வேற்றுமை
    • நான்காம் வேற்றுமை
    • ஐந்தாம் வேற்றுமை
    • ஆறாம் வேற்றுமை
    • ஏழாம் வேற்றுமை
    • எட்டாம் வேற்றுமை

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

வேற்றுமை உருபுகள்

  • முதல் வேற்றுமைக்கு உருபு இல்லை.
  • எட்டாம் வேற்றுமைக்கு உருபு இல்லை.
  • இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரையிலான ஆறு வேற்றுமைகளுக்கு உருபுகள் உண்டு.

வேற்றுமை

வேற்றுமை உருபு

இரண்டாம் வேற்றுமை

மூன்றாம் வேற்றுமை

ஆல், ஆன், ஓடு, ஒடு

நான்காம் வேற்றுமை

கு
ஐந்தாம் வேற்றுமை

இல், இன்

ஆறாம் வேற்றுமை

அது, ஆது, அ
ஏழாம் வேற்றுமை

கண்

8TH TAMIL வேற்றுமை
8TH TAMIL வேற்றுமை

வேற்றுமைத் தொடர் என்றால் என்ன

  • வேற்றுமை உருபுகள் இடம் பெற்றுள்ள தொடர்களை வேற்றுமைத் தொடர்கள் எனப்படும்.

வேற்றுமைத் தொகை என்றால் என்ன

  • வேற்றுமை உருபுகள் இடம் பெற வேண்டிய இடத்தில் அது இடம் பெறாமல், மறைந்திருந்து பொருள் தந்தாள் அது வேற்றுமைத் தொகை எனப்படும்.

முதல் வேற்றுமை

  • முதல் வேற்றுமையின் வேறு பெயர் = எழுவாய் வேற்றுமை.
  • பெரும்பாலான சொற்றொடர்களில் “எழுவாய், செயப்படு பொருள், பயனிலை” ஆகிய மூன்று உறுப்புகள் இடம் பெற்றிருக்கும்.
  • எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல், எழுவாய் மட்டும் தனித்து நின்று இயல்பான பொருளைத் தருவது “முதல் வேற்றுமை” எனப்படும்.
  • முதல் வேற்றுமை = எழுவாய் மட்டும் தனித்து வந்து பொருள் தருதல்.
  • எ.கா:
    • பாவை வந்தாள்.

இரண்டாம் வேற்றுமை

  • இரண்டாம் வேற்றுமையின் வேறு பெயர் = செயப்படுபொருள் வேற்றுமை.
  • இரண்டாம் வேற்றுமை உருபு = ஐ.
  • ஒரு பெயரை செயப்படுபொருளாக வேறுபடுத்திக் காட்டுவது இரண்டாம் வெறுமை ஆகும்.
  • எ.கா:
    • கபிலர் பரணரைப் புகழ்ந்தார்
    • கபிலரை பரணர் புகழ்ந்தார்
  • இவ்விரு தொடர்களிலும் இரண்டாம் வேற்றுமை உறுப்பு (ஐ) எந்தப் பெயருடன் இணைகிறதோ, அப்பெயர் செயப்படுபொருளாக மாறிவிடுகிறது.
  • இரண்டாம் வேற்றுமை எத்தனை பொருள்களில் வரும் = ஆறு.
  • இரண்டாம் வேற்றுமை “ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை” ஆகிய ஆறு பொருள்களில் வரும்.
    • ஆக்கல் = கரிகாலன் கல்லணையை கட்டினான்
    • அழித்தல் = பெரியார் மூடநம்பிக்கைகளை ஒழித்தார்
    • அடைதல் = கோவலன் மதுரையை அடைந்தான்
    • நீத்தல் = காமராசர் பதவியைத் துறந்தார்
    • ஒத்தல் = தமிழ் நமக்கு உயிரைப் போன்றது
    • உடைமை = வள்ளுவர் பெரும் புகழை உடையவர்.

மூன்றாம் வேற்றுமை

  • மூன்றாம் வேற்றுமை உருபுகள் = ஆல், ஆன், ஒடு, ஓடு
  • ஆல், ஆன் = கருவிப் பொருள், கருத்தாப் பொருள் ஆகிய இரண்டு பொருள்களிலும் வரும்.
    • கருவிப் பொருள் இரண்டு வகைப்படும். அவை,
      • முதற்கருவி
      • துணைக் கருவி
    • முதற்கருவி = கருவியே செயப்படுபொருளாக மாறும்.
      • எ.கா = மரத்தால் சிலை செய்தான்
    • துணைக்கருவி = ஒன்றை செய்வதற்கு துணையாக இருப்பது துணைக்கருவி ஆகும்.
      • எ.கா = உளியால் சிலை செய்தான்.
    • கருத்தாப் பொருள் இரண்டு வகைப்படும். அவை,
      • ஏவுதல் கருத்தா
      • இயற்றுதல் கருத்தா
    • ஏவுதல் கருத்தா = பிறரை செய்யவைப்பது ஏவுதல் கருத்தா
      • எ.கா = கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது.
    • இயற்றுதல் கருத்தா = தானே செய்வது இயற்றுதல் கருத்தா ஆகும்.
      • எ.கா = சேக்கிழாரால் பெரியபுரனாம் இயற்றப்பட்டது.
    • ஆன் = ஆன் என்னும் உருபு பெரும்பாலும் செய்யுள் வழக்கில் இடம்பெறும்.
      • பெரும்பாலும் செய்யுள் வழக்கில் இடம்பெறும் உருபு = ஆன் (மூன்றாம் வேற்றுமை)
      • எ.கா = புறத்தூய்மை நீரான் அமையும்.
    • ஒடு, ஓடு = இவை “உடன் நிகழ்ச்சி” பொருளில் வரும்.
      • உடனிகழ்ச்சிப் பொருளில் வரும் வேற்றுமை உருபுகள் = ஒடு, ஓடு
      • எ.கா = தாயொடு குழந்தை சென்றது (ஒடு)
      • எ.கா = அமைச்சரோடு அலுவலர்கள் சென்றனர் (ஓடு)
    • உடனிகழ்ச்சி பொருளில் வரும் வேற்றுமை = மூன்றாம் வேற்றுமை.

நான்காம் வேற்றுமை

  • நான்காம் வேற்றுமை உருபு = கு.
  • நான்காம் வேற்றுமை உருபு வரும் பொருள்கள் = கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை.
    • கொடை = முல்லைக்குத் தேர் கொடுத்தான்
    • பகை = புகை மனிதனுக்கு பகை
    • நட்பு = கபிலருக்கு நண்பர் பரணர்.
    • தகுதி = கவிதைக்கு அழகு கற்பனை.
    • எல்லை = தமிழ்நாட்டின் கிழக்கு வங்கக்கடல்
  • நான்காம் வேற்றுமை உருபுடன் கூடுதலாக “ஆக” என்னும் அசை சேர்ந்து வருவதும் உண்டு.
    • எ.கா:
      • கூலிக்காக வேலை.
8TH TAMIL வேற்றுமை
8TH TAMIL வேற்றுமை

ஐந்தாம் வேற்றுமை

  • ஐந்தாம் வேற்றுமை உருபுகள் = இன், இல்.
  • ஐந்தாம் வேற்றுமை உருபுகள் வரும் பொருள் = நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது.
    • நீங்கல் = தலையின் இழிந்த மயிர்.
    • ஒப்பு = பாம்பின் நிறம் ஒரு குட்டி.
    • எல்லை = தமிழ்நாட்டின் கிழக்கு வங்கக்கடல்
    • ஏது = சிலேடை பாடுவதில் வல்லவர் காளமேகம்.

ஆறாம் வேற்றுமை

  • ஆறாம் வேற்றுமை உருபு = அது, ஆது, அ.
  • ஆறாம் வேற்றுமை “உரிமைப் பொருளில்” வரும்.
    • உரிமைப் பொருளில் வரும் வேற்றுமை = ஆறாம் வேற்றுமை.
    • உரிமைப் பொருளை “கிழமைப் பொருள்” என்றும் கூறுவர்.
    • கிழமைப் பொருளில் வரும் வேற்றுமை = ஆறாம் வேற்றுமை.
  • எ.கா:
    • இராமனது வில்.
    • நண்பனது கை.
  • ஆது, அ = இக்காலத்தில் பயன்பாட்டில் இல்லாத உருபுகள்.
    • தற்காலத்தில் பயன்பாட்டில் இல்லாத வேற்றுமை உருபுகள் யாது = ஆது, அ.

ஏழாம் வேற்றுமை

  • ஏழாம் வேற்றுமை உருபு = கண், மேல், கீழ், கால், இல், இடம்
  • “இடம், காலம்” ஆகியவற்றை குறிக்கும் சொற்களில் ஏழாம் வேற்றுமை இடம்பெறும்.
  • எ.கா:
    • எங்கள் ஊரின்கண் மழை பெய்தது.
    • இரவின்கண் மழை பெய்தது.

எட்டாம் வேற்றுமை

  • எட்டாம் வேற்றுமைக்கு உருபு இல்லை.
  • “விளிப்” பொருளில் வரும் வேற்றுமை = எட்டாம் வேற்றுமை
  • “விளி வேற்றுமை” என அழைக்கப்படும் வேற்றுமை = எட்டாம் வேற்றுமை.
  • விளி வேற்றுமை = படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக மாற்றி அழைப்பது விழி வேற்றுமை எனப்படும்.
  • பெயர்கள் திரிந்து வழங்குவது உண்டு.
    • பெயர்களை திரிந்து வழங்கும் வேற்றுமை = எட்டாம் வேற்றுமை.
  • அண்ணன் என்பதனை “அண்ணா” என்றும், புலவர் என்பதனை “புலவரே” என்றும் மாற்றி வழங்குவது எட்டாம் வேற்றுமை ஆகும்.

வேற்றுமை உருபுகளும் அவற்றின் பொருள்களும்

8TH TAMIL வேற்றுமை
8TH TAMIL வேற்றுமை

வேற்றுமை உருபுகளும் அவற்றின் பொருள்களும்

வேற்றுமை உருபு சொல்லுருபு

பொருள்

முதல் (எழுவாய்)

ஆனவன், ஆவான், ஆகின்றான் பயனிலை ஏற்றல்
இரண்டாம்

செயப்படுபொருள்

மூன்றாம்

ஆல், ஆன், ஓடு, ஒடு கொண்டு, வைத்து, உடன், கூட கருவி, கருத்தா, உடனிகழ்ச்சி
நான்காம் கு ஆக, பொருட்டு, நிமித்தம்

கொடை, பகை, நட்பு, தகுதி, பொருட்டு, முறை, எல்லை

ஐந்தாம்

இல், இன் இலிருந்து, நின்று, காட்டிலும், பார்க்கிலும் நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது
ஆறாம் அது, ஆது, அ உடைய

கிழமை

ஏழாம்

கண் இடம், காலம்
எட்டாம்

விளி (அழைத்தல்)

வேற்றுமை உருபு “இல்”

8TH TAMIL வேற்றுமை
8TH TAMIL வேற்றுமை
  • இரண்டு வேற்றுமைகளில் வரும் ஒரே உருபு = இல்
  • ஐந்தாம் வேற்றுமை மற்றும் ஏழாம் வேற்றுமை ஆகிய இரண்டு வேற்றுமைகளிலும் வருகிறது.
    • ஐந்தாம் வேற்றுமையில் “நீங்கல்” பொருளில் வரும்.
    • ஏழாம் வேற்றுமையில் “இடப்” பொருளில் வரும்.
  • நீங்கல் பொருளில் வந்தால் ஐந்தாம் வேற்றுமை எனவும், இடப்பொருளில் வந்தால் ஏழாம் வேற்றுமை எனவும் கொள்ள வேண்டும்.

சொல்லுருபுகள் என்றால் என்ன

8TH TAMIL வேற்றுமை
8TH TAMIL வேற்றுமை
  • சில இடங்களில் உருபுகளுக்குப் பதிலாக முழுச்சொற்களே வேற்றுமை உருபாக வருவதும் உண்டு.
  • இவற்றை “சொல்லுருபுகள்” என்பர்.
  • எ.கா:
    • ஓவியர் தூரிகையால் ஓவியம் வரைந்தார்.
      • இதில் வந்துள்ள வேற்றுமை உருபு = ஆல்.
    • ஓவியர் தூரிகை கொண்டு ஓவியம் வரைந்தார்.
      • இதில் உருபு வரவில்லை.
      • ஆனால் “கொண்டு”, சொல்லுருபாக வந்துள்ளது.

 

 

 

 

 

Leave a Reply