8TH TAMIL தமிழர் இசைக்கருவிகள்
8TH TAMIL தமிழர் இசைக்கருவிகள்
- ஒரு சொல்லின் பொருளை அறியப் பயன்படுவது = அகராதி.
- ஒரு பொருள் குறித்த அணைத்து விவரங்களையும் அறிந்துக் கொள்ள பயன்படுவது = கலைக்களஞ்சியம்.
- கலைக்களஞ்சியத்தில் பெரும்பாலும் தகவல்கள் அகர வரிசையில் அமைந்திருக்கும்
இசை என்பது யாது
- நகை, அழுகை, வீரம் உள்ளிட்ட ஒன்பது சுவைகளை வெளிப்படுத்தக்கூடிய கலை = இசை.
- இசைக்கலை வெளிப்படுத்தும் சுவைகள் = ஒன்பது.
- இசையை இரண்டாக பிரிப்பர். அவை,
- குரல்வழி இசை
- கருவிவழி இசை.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
இசைக்கருவிகள்
- இசையின் இனிமைக்கு துணை செய்பவை = இசைக்கருவிகள்.
- இசைக்கருவிகளை இசைத்துப் பாடல் பாடுவோர் = பாணர்.
பாணன் சூடான் பாடினி அணியாள்
- “நல்லியாழ் மருப்பின் மெல்ல வங்கிப் பாணன் சூடான் பாடினி அணியாள்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = புறநானூறு.
இசைக்கருவிகள் எத்தனை வகைப்படும்
- இசைக்கருவிகள் நான்கு வகைப்படும். அவை,
- தோல்கருவி
- நரம்புக்கருவி
- காற்றுக்கருவி
- கஞ்சக்கருவி
தோல்கருவி என்பது யாது
- விலங்குகளின் தோலால் மூடப்பட்டு செய்யப்படும் கருவிகள்.
- எ.கா:
- முழவு, முரசு, உடுக்கை, குடமுழா, திமிலை, பறை
நரம்புக்கருவி என்றால் என்ன
- நரம்பு அல்லது தந்திகளை உடையவை.
- தந்திகளை கொண்டு உருவாக்கப்படும் இசைக்கருவி = நரம்புக்கருவி
- எ.கா:
- யாழ், வீணை
காற்றுக்கருவி என்றால் என்ன
- காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படுபவை
- எ.கா:
- குழல், சங்கு, கொம்பு
கஞ்சக்கருவி என்றால் என்ன
- ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுபவை, கஞ்சக்கருவி எனப்படும்.
- எ.கா:
- சாலரா, சேகண்டி
உடுக்கை இசைக்கருவி
- உடுக்கை ஒரு தோல்கருவி.
- உடுக்கை என்பது இடை சுருங்கிய ஒரு “கைப்பறை” ஆகும்.
- பித்தளையால் ஆனது.
- வாய்ப்பகுதி ஆட்டுத்தோலால் பொருத்தப்பட்டிருக்கும்.
- இரு வாய்களையும் இணைக்கும் கயிறு இடையில் கட்டப்பட்டிருக்கும்.
- வலது வாயின் மீதுதான் அடிப்பர்.
- பெரிய உடுக்கையை “தவண்டை” என்பர்.
- “தவண்டை” என்பது பெரிய உடுக்கை.
- சிறிய உடுக்கையை “குடுகுடுப்பை” என்பர்.
- தில்லை நடராசரின் கைகளில் இந்த குடுகுடுப்பையை காணலாம்.
- இறை வழிபாடு, குறிசொல்லும் பொழுது இதனை பயன்படுத்துவர்.
- “தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம் பயில்வார்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = தேவாரம் (திருஞானசம்பந்தர்).
- “தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம் பயில்வார்” என்று கூறியவர் = திருஞானசம்பந்தர்.
குடமுழா இசைக்கருவி
- குடமுழா ஒரு தோல் கருவி ஆகும்.
- இது முரசு வகை கருவி ஆகும்.
- ஐந்து முகங்களை உடைய முரசு வகை கருவி.
- ஐந்து வட்டவடிவ வாய்களுடன் ஒரு பெரிய குடத்தின் வடிவில் அமைக்கப்பட்டிருக்கும்.
- நடுவில் உள்ள வாய் மற்றவற்றை விட பெரியதாக இருக்கும்.
- வாய்ப்பகுதி தோலால் மூடப்பட்டிருக்கும்.
- ஐந்து வாயில் இருந்து ஐந்து வகை இசை பிறக்கும்.
- குடமுழா கருவியை “பஞ்சமகா சப்தம்” என்று அழைப்பர்.
- “பஞ்சமகா சப்தம்” என்று அழைக்கப்படும் கருவி = குடமுழா.
- சென்னை அருங்காட்சியகத்தில் இது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
குழல் இசைக்கருவி
- குழல் ஒரு காற்றுக்கருவி ஆகும்.
- மூங்கில், சந்தானம், செங்காலி, கருங்காலி ஆகிய மரங்களில் இருந்து உருவாக்கப்படுகிறது குழல்.
- இதனை “வேய்ங்குழல், புல்லாங்குழல்” என்றும் அழைப்பர்.
- ஏழு சுரங்களை உண்டாக்குவதற்கு ஏற்ப ஏழு துளைகள் அமைக்கப்பட்டிருக்கும்.
- குழல் கருவியின் நீளம் = இருபது விரல்.
- குழல்களின் வகைகளை கூறிய நூல் = சிலப்பதிகாரம்.
- “கொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல்குழல்” என்று பலவகையான குழல்களின் செய்திகளை கூறும் நூல் = சிலப்பதிகாரம்.
- “குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்” என்று வள்ளுவர் கூறுகிறார்.
கொம்பு இசைக்கருவி
- கொம்பு ஒரு காற்றுக்கருவி ஆகும்.
- இறந்த மாடுகளின் கொம்புகளில் இருந்து உருவாக்கப்படும் இசைக்கருவி.
- தற்போது “பித்தளை அல்லது வெண்கலம்” கொண்டு இக்கருவி உருவாக்கப்படுகிறது.
- வேடர்கள் வேட்டையின் போது ஊதும் கருவி = கொம்பு.
- திருடர்கள், விலங்குகளை விரட்டவும் இக்கருவி ஊதப்படுகிறது.
- கொம்பின் வகைகள் = ஊதுகொம்பு, எக்காளம், சிங்கநாதம், துத்துரி.
- எக்காளம் என்பது கொம்பு வகை இசைக்கருவி ஆகும்.
- சிங்கநாதம் என்பது கொம்பு வகை இசைக்கருவி ஆகும்.
- துத்துரி என்பது கொம்பு வகை இசைக்கருவி ஆகும்.
சங்கு இசைக்கருவி
- சங்கு ஒரு இயற்கை கருவி ஆகும்.
- சங்கு ஒரு காற்றுக்கருவி ஆகும்.
- சங்கு “வலது” புறம் சுழிந்து இருக்கும்.
- அதனால் சங்கை “வலம்புரிச்சங்கு” என்று கூறுவர்.
- சங்கின் ஒலியை “சங்கநாதம்” என்பர்.
- இலக்கியங்களில் சங்கின் ஒலியை “பணிலம்” என்பர்.
- “பணிலம்” என்பது சங்கின் ஒலியாகும்.
- “சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = திருப்பாவை (ஆண்டாள்).
சாலரா இசைக்கருவி
- சாலரா ஒரு கஞ்சக்கருவி ஆகும்.
- பித்தளை அல்லது வெண்கலத்தால் செய்யப்படும் கருவி இது.
- உட்புறம் குவிந்து இருக்கும் கருவி = சாலரா.
- சாலரா கருவியை “பாண்டில்” எனவும் அழைப்பர்.
- “பாண்டில்” என அழைக்கப்படும் கருவி = சாலரா (ஜால்ரா).
- கோவில் கூட்டு வழிபாடு, இன்னிசை அரங்குகளில் இசைக்கப்படும் இன்றியமையாத கருவி.
- இக்கருவியை தற்காலத்தில் “ஜால்ரா” என்பர்.
சேகண்டி இசைக்கருவி
- சேகண்டி ஒரு கஞ்சக்கருவி ஆகும்.
- வட்ட வடிவமான “மணி வகையை” சேர்ந்த இசைக்கருவி = சேகண்டி.
- குச்சி, இரும்புத் துண்டி கொண்டு அடித்து ஒலி எழுப்புவர்.
- தேவைக்கு ஏற்ப பல அளவுகளில் உருவாக்கப்படும்.
- சேகண்டி கருவியை “சேமங்கலம்” என்றும் கூறுவர்.
- சேமங்கலம் என்று அழைக்கப்படும் இசைக்கருவி = சேகண்டி.
- இறுதி ஊர்வலத்தின் போது இசைக்கப்டும் கருவி இது.
திமிலை இசைக்கருவி
- திமிலை ஒரு தோல்கருவி ஆகும்.
- பலா மரத்தினால் செய்யப்படும் கருவி = திமிலை.
- விலங்குத் தோலால் கட்டப்படும் கருவி இது.
- “மணல் கடிகார” வடிவில் அமைக்கப்படும் இசைக்கருவி = திமிலை.
- “பாணி” என அழைக்கபடும் இசைக்கருவி = திமிலை.
- “சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டி” என்ற அடி இடம்பெற்றுள்ள நூல் = பெரியபுராணம்.
- “வியன்துடி திமிலை தட்டி” என்ற அடி இடம்பெற்றுள்ள நூல் = பெரியபுராணம்.
பறை இசைக்கருவி
- பறை ஒரு தோல் கருவி ஆகும்.
- விலங்குத் தோலால் இழுத்துக் கட்டப்பட்ட கருவி இது.
- பழங்காலத்தில் செய்திகளை தெரிவிக்க “கோட்பறையை” பயன்படுத்தினர்.
- ஆநிரைகளை கவர்ந்து வர “ஆகோட்பறையை” முழங்குவர்.
- பறையை “தப்பு” எனவும் கூறுவர்.
- பறையை இசைத்துக்கொண்டே ஆடும் ஆட்டம் “தப்பாட்டம்” எனப்படும்.
மத்தளம் இசைக்கருவி
- மத்தளம் ஒரு வகை தோல் கருவி ஆகும்.
- “மத்து” என்பது = ஓசையின் பெயர்.
- இசைக்கருவிகளுக்கு எல்லாம் அடிப்படை = தளம்.
- மத்து + தளம் = மத்தளம்.
- மத்து + தளம் = மத்தளம் என்று ஆகியது என்கிறார் “அடியார்க்கு நல்லார்”.
- இக்கருவி இரண்டு கைகளால் இசைக்கப்டும்.
- மத்தளத்தை “முதற்கருவி” என்பர்.
- முதற்கருவி எனப்படும் இசைக்கருவி = மத்தளம்.
- தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டில் கோயிலுக்கு நியமிக்கப்பட்ட இசைக்கலைஞர்களுள் கொட்டி மத்தளம் வாசிப்பவர் பெயரும் உள்ளது.
- “மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தர்க்கீழ்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = நாச்சியார் திருமொழி.
- “மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தர்க்கீழ்” என்று பாடியவர் = ஆண்டாள்.
முரசு இசைக்கருவி
- முரசு ஒரு தோல்கருவி ஆகும்.
- தமிழர்களின் போர்களில் பயன்படுத்தப்படும் முதன்மையான இசைக்கருவி = முரசு.
- தமிழர்கள் போர்த் துணையாகக் கொண்ட கருவிகளுள் முதன்மையானது = முரசு.
- முரசு மூன்று வகைப்படும். அவை,
- படைமுரசு
- கொடைமுரசு
- மணமுரசு
- தமிழ் மக்களிடம் “முப்பத்தாறு” வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாக “சிலப்பதிகாரம்” கூறுகிறது.
- தமிழ் மக்களிடம் “முப்பத்தாறு” வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாக கூறும் நூல் = சிலப்பதிகாரம்.
- “மாக்கண் முரசம்” என்று முரசு பற்றி குறிப்பிடும் நூல் = மதுரைக்காஞ்சி.
முழவு இசைக்கருவி
- முழவு ஒரு தோல் கருவி ஆகும்.
- முழவு, “முரசு” வகையை சேர்ந்த தோல் கருவி ஆகும்.
- ஒரே முகத்தை உடைய கருவி = முழவு.
- ஒரே பெரிய குடத்தின் வாயில் தோலை இழுத்துக் கட்டப்பட்ட கருவி = முழவு.
- இத்தோலில் ஒருவகை பசை மண்ணைத் தடவி முழக்குவர்.
- “மண்ணமை முழவு” என்று கூறும் நூல் = பொருநராற்றுப்படை.
- காலத்தை அறிவிக்க பயன்பட்ட முழவுகள் = நாழிகை முழவு, காலை முழவு.
- “கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = புறநானூறு.
யாழ் இசைக்கருவி
- யாழ் ஒரு நரம்புக் கருவி ஆகும்.
- வேட்டுவர் (வேடர்) வில்லை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இசைக் கருவி = யாழ்.
- மிகப்பழமையான யாழ் கருவிகள் = பேரியாழ், செங்கோட்டியாழ்.
- யாழின் வகைக்கு ஏற்ப அதில் இருக்கும் நரம்புகளின் எண்ணிக்கை வேறுபடுகிறது.
- இருபத்தொரு நரம்புகளை கொண்ட யாழ் = பேரியாழ்.
- பத்தொன்பது நரம்புகளை கொண்ட யாழ் = மகரயாழ்.
- மீன் வடிவில் அமைந்த யாழ் = மகரயாழ்.
- பதினான்கு நரம்புகளை கொண்ட யாழ் = சகோடயாழ்.
- யாழின் வடிவமே மெல்லமெல்ல மாற்றமடைந்து வீணையாக மாறியது என்பர்.
வீணை இசைக்கருவி
- வீணை ஒரு நரம்புக் கருவி ஆகும்.
- யாழ் போன்ற அமைப்பை உடைய இசைக்கருவி = வீணை.
- வீணை “ஏழு நரம்புகளைக்” கொண்டது.
- வீணையில் உள்ள நரம்புகளின் எண்ணிக்கை = ஏழு.
- இரு கைகளால் வாசிக்கும் கருவி.
- இடது கை விரல்களால் நர்மபுகளை அமுக்கியும், வலது கை விரல்களால் கம்பிகளை மீட்டியும் இசைக்க வேண்டும்.
- நரம்புகள் மூலம் எழுப்பப்படும் இசையை, வீணையின் தண்டு, குடம் ஆகியவை ஓசையை பெருக்கி அனுப்புகின்றன.
- மகேந்திரவர்ம பல்லவன் பயன்படுத்திய வீணை = பரிவாதினி என்னும் வீணை வகை.
- தமிழ் வரிவடிவ வளர்ச்சி
- சொற்பூங்கா
- எழுத்துகளின் பிறப்பு
- ஓடை
- கோணக்காத்துப் பாட்டு
- நிலம் பொது
- வெட்டுக்கிளியும் சருகுமானும்
- வினைமுற்று
- தொடர் வகைகள்
- திருக்குறள்
- நோயும் மருந்தும்
- வருமுன் காப்போம்
- தமிழர் மருத்துவம்
- தலைக்குள் ஒர் உலகம்
- எச்சம்
- கல்வி அழகே அழகு
- புத்தியைத் தீட்டு
- பல்துறைக் கல்வி