8TH TAMIL திருக்கேதாரம்
8TH TAMIL திருக்கேதாரம்
- உயிர்கள் அனைத்தையும் இசைவிப்பது இசை.
- இது மனிதர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் ஆற்றல் உடையது.
- இசைக்கருவிகள் ஓசையோடு பாடல் இணையும்போது அது செவிகளுக்கு மட்டுமின்றிச் சிந்தைக்கும் விருந்தாகிறது.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
தேவாரப்பாடல்
பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிரக் கண்ணின்ஒளி கனகச்சுனை வயிரம்அவை சொரிய மண்நின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண்டு எறியக் கிண் என்றுஇசை முரலும்திருக் கேதாரம்என் னீரே. – சுந்தரர் |
பாடலின் பொருள்
- “கிண் என்றுஇசை முரலும்திருக் கேதாரம்என் னீரே” என்று பாடியவர் = சுந்தரர்.
- கிண் என்ற ஓசை முழங்கும் நகரம் = திருக்கேதாரம்
அருஞ்சொற்பொருள்
- பண் = இசை
- கனகச்சுனை = பொன் வண்ண நீர்நிலை
- மதவேழங்கள் = மதயானைகள்
- முரலும் = முழங்கும்
- பழவெய் = முதிர்ந்த மூங்கில்
சுந்தரர் ஆசிரியர் குறிப்பு
- சுந்தரர், தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்.
- இவர் நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
- இவர் அருளிய தேவாரப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன.
- இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகக் கொண்டே சேக்கிழார் பெரியபுராணத்தைப் படைத்தளித்தார்.
- இந்நூலில் சுந்தரர் பாடியுள்ள கேதாரப்பதிகப்பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.
தேவாரம் நூல் குறிப்பு
- திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும்.
- இந்நூலைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.
- தே + ஆரம் – இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை என்றும், தே + வாரம் – இனிய இசை பொருந்திய பாடல்கள் எனவும் பொருள் கொள்ளப்படும்.
- பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.
- தமிழ் வரிவடிவ வளர்ச்சி
- சொற்பூங்கா
- எழுத்துகளின் பிறப்பு
- ஓடை
- கோணக்காத்துப் பாட்டு
- நிலம் பொது
- வெட்டுக்கிளியும் சருகுமானும்
- வினைமுற்று
- தொடர் வகைகள்
- திருக்குறள்
- நோயும் மருந்தும்
- வருமுன் காப்போம்
- தமிழர் மருத்துவம்
- தலைக்குள் ஒர் உலகம்
- எச்சம்
- கல்வி அழகே அழகு
- புத்தியைத் தீட்டு