8TH TAMIL தொகைநிலை தொகாநிலைத் தொடர்கள்
8TH TAMIL தொகைநிலை தொகாநிலைத் தொடர்கள்
- ஒரு எழுத்து தனித்து நின்றோ, பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது = சொல்.
- சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது = சொற்றொடர் அல்லது தொடர்
தொகைநிலைத் தொடர் என்றால் என்ன
- இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி (மறைந்து) வருமானால் அதனைத் தொகைநிலைத் தொடர் என்பர்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்
- தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும். அவை,
- வேற்றுமைத் தொகை
- வினைத்தொகை
- பண்புத்தொகை
- உவமைத்தொகை
- உம்மைத்தொகை
- அன்மொழித்தொகை.
வேற்றுமைத் தொகை என்றால் என்ன
- இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபு மறைந்து வந்து பொருள் தந்தால் அதனை வேற்றுமைத்தொகை என்பர்.
- எ.கா:
- திருக்குறள் படித்தாள்
- இத்தொடர் திருக்குறளைப் படித்தாள் என விரிந்து நின்று பொருள் தருகிறது. இரு சொற்களுக்கும் இடையில் ‘ஐ’ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது.
- திருவாசகம் படித்தான் = (ஐ) இரண்டாம் வேற்றுமைத்தொகை
- தலைவணங்கு = (ஆல்) மூன்றாம் வேற்றுமைத்தொகை
- சிதம்பரம் சென்றான் = (கு) நான்காம் வேற்றுமைத்தொகை
- மலைவீழ் அருவி = (இன்) ஐந்தாம் வேற்றுமைத்தொகை
- கம்பர் பாடல் = (அது) ஆறாம் வேற்றுமைத்தொகை
- மலைக்குகை = (கண்) ஏழாம் வேற்றுமைத்தொகை
உருபும் பயனும் உடன்தொக்க தொகை
- ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் சொல்லும் (பயன்) மறைந்து வருவது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை எனப்படும்.
- எ.கா:
- பணப்பை
- இது பணத்தைக் கொண்ட பை என விரிந்து பொருள் தருகிறது. பணம், பை என்னும் இரு சொற்களுக்கு இடையில் ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபும் ‘கொண்ட’ என்னும் சொல்லும் (உருபின் பயன்) மறைந்து வந்துள்ளன.
- பால் குடம் = (பாலைக் கொண்ட குடம்)
- இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
- பொற்சிலை = (பொன்னால் ஆகிய சிலை)
- மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
- மாட்டுக் கொட்டகை = (மாட்டுக்குக் கட்டப்பட்ட கொட்டகை)
- நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
- பால் குடம் = (பாலைக் கொண்ட குடம்)
வினைத்தொகை என்றால் என்ன
- காலம் காட்டும் இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சத்தை வினைத்தொகை என்பர்.
காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை – ( நன்னூல் 364) |
- எ.கா:
- ஆடுகொடி, வளர்தமிழ்
- இத்தொடர்களில் ஆடு, வளர் என்பவை வினைப்பகுதிகள்.
- இவை முறையே கொடி, தமிழ் என்னும் பெயர்ச்சொற்களோடு சேர்ந்து காலம் காட்டாத பெயரெச்சங்களாக உள்ளன.
- அதாவது காலம் காட்டும் இடைநிலைகள் தொக்கி உள்ளன.
- மேலும் இவை முறையே ஆடிய கொடி, ஆடுகின்ற கொடி, ஆடும் கொடி எனவும் வளர்ந்த தமிழ், வளர்கின்ற தமிழ், வளரும் தமிழ் எனவும் முக்காலத்திற்கும் பொருந்தும்படி பொருள் தருகின்றன.
பண்புத்தொகை என்றால் என்ன
- பண்புப் பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையே ஆன, ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.
- எ.கா:
- வெண்ணிலவு, கருங்குவளை
- இத்தொடர்களில் வெண்மை, கருமை என்னும் பண்புகள் நிலவு, குவளை என்னும் பெயர்ச்சொற்களைத் தழுவி நிற்கின்றன.
- ஆன, ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து வெண்மையான நிலவு, கருமையாகிய குவளை என்னும் பொருள்களைத் தருகின்றன.
இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்றால் என்ன
- சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நிற்க, இடையில் ஆகிய என்னும் பண்புருபு மறைந்து வருவதை இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பர்.
- எ.கா:
- பனைமரம்
- இத்தொடர் பனையாகிய மரம் என விரியும்.
- மரம் என்பது பொதுப்பெயர்.
- பனை என்பது மரங்களுள் ஒன்றனைக் குறிக்கும் சிறப்புப்பெயர்.
உவமைத்தொகை என்றால் என்ன
- உவமைக்கும் உவமேயத்துக்கும் இடையில் போல, போன்ற, நிகர, அன்ன முதலிய உவம உருபுகளுள் ஒன்று மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.
- எ.கா;
- மலர்விழி
- இத்தொடர் மலர் போன்ற விழி என்ற பொருள் தருகிறது.
- மலர் – உவமை
- விழி – உவமேயம்
- இடையில் போன்ற என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது.
உம்மைத்தொகை என்றால் என்ன
- சொற்களுக்கு இடையிலும், இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவதை உம்மைத்தொகை என்பர்.
- எ.கா;
- இரவுபகல், தாய்தந்தை
- இத்தொடர்கள் இரவும் பகலும் தாயும் தந்தையும் என விரிந்து பொருள் தருகின்றன.
- இதில் சொற்களின் இடையிலும், இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருகிறது.
எண்ணும்மை என்றால் என்ன
- ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களில் உம் என்னும் உருபு வெளிப்பட வருவது எண்ணும்மை எனப்படும்.
- “உம்” என்னும் உருபு வெளிப்படையாக (மறையாமல்) வருவது எண்ணும்மை ஆகும்.
- எ.கா:
- இரவும் பகலும், பசுவும் கன்றும்
அன்மொழித்தொகை என்றால் என்ன
- அல் + மொழி + தொகை = அன்மொழித்தொகை.
- வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களுள், அவை அல்லாத வேறு பிற சொற்களும் மறைந்து வருவது அன்மொழித்தொகை (அல் + மொழி + தொகை) எனப்படும்.
- எ.கா:
- பொற்றொடி வந்தாள். (தொடி – வளையல்)
- தொடி என்பதன் பொருள் = வளையல்
- இத்தொடரில் பொற்றொடி என்பது பொன்னாலான வளையல் எனப் பொருள் தரும்.
- இத்தொடர் வந்தாள் என்னும் வினைச்சொல்லைத் தழுவி நிற்பதால் பொன்னாலாகிய வளையலை அணிந்த பெண் வந்தாள் என்னும் பொருள் தருகிறது.
- இதில் ‘ஆல்’ என்னும் மூன்றாம் வேற்றுமை உருபும் ‘ஆகிய’ என்னும் அதன் பயனும் மறைந்து வந்து, வந்தாள் என்னும் சொல்லால் பெண் என்பதையும் குறிப்பதால் இது மூன்றாம் வேற்றுமைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை எனப்படும்.
தொகாநிலைத்தொடர் என்றால் என்ன
- ஒரு தொடரில் இரு சொற்கள் வந்து அவற்றின் இடையில் எச்சொல்லும் எவ்வுருபும் மறையாமல் (வெளிப்படையாக) நின்று பொருள் உணர்த்தினால் அதனைத் தொகாநிலைத் தொடர் என்பர்.
தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும்
- தொகாநிலைத் தொடர் ஒன்பது வகைப்படும். அவை,
- எழுவாய்த் தொடர்
- விளித்தொடர்
- வினைமுற்றுத் தொடர்
- பெயரெச்சத் தொடர்
- வினையெச்சத் தொடர்
- வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
- இடைச்சொல் தொடர்
- உரிச்சொல் தொடர்
- அடுக்குத்தொடர்
எழுவாய்த் தொடர் என்றால் என்ன
- எழுவாய் மற்றும் பயனிலை இடையே எச்சொல்லும் மறையாமல் வருவது எழுவாய்த் தொடர் எனப்படும்.
- எ.கா;
- மல்லிகை மலர்ந்தது.
- இதில் ‘மல்லிகை’ என்னும் எழுவாயைத் தொடர்ந்து ‘மலர்ந்தது’ என்னும் பயனிலை அமைந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளது.
விளித்தொடர் என்றால் என்ன
- நண்பா படி
- இதில் ‘நண்பா’ என்னும் விளிப்பெயர் ‘படி’ என்னும் பயனிலையைக் கொண்டு முடிந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால் இது விளித்தொடர் ஆகும்.
வினைமுற்றுத் தொடர் என்றால் என்ன
- சென்றனர் வீரர்.
- இதில் ‘சென்றனர்’ என்னும் வினைமுற்று ‘வீரர்’ என்னும் பெயரைக் கொண்டு முடிந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால் இது வினைமுற்றுத் தொடர் ஆகும்.
பெயரெச்சத்தொடர் என்றால் என்ன
- வரைந்த ஓவியம்.
- இதில் ‘வரைந்த’ என்னும் எச்சவினை ‘ஓவியம்’ என்னும் பெயர்ச்சொல் கொண்டு முடிந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால் இது பெயரெச்சத் தொடர் ஆகும்.
வினையெச்சத் தொடர் என்றால் என்ன
- தேடிப் பார்த்தான்.
- இதில் ‘தேடி’ என்னும் வினையெச்சச் சொல் ‘பார்த்தான்’ என்னும் வினைமுற்றுச்சொல் கொண்டு முடிந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வந்துள்ளதால் இது வினையெச்சத் தொடர் ஆகும்.
வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் என்றால் என்ன
- கவிதையை எழுதினார்.
- இதில் ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துவதால் இது வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் ஆகும்.
இடைச்சொல் தொடர் என்றால் என்ன
- மற்றுப் பிற (மற்று + பிற)
- இதில் ‘மற்று’ என்னும் இடைச்சொல் வெளிப்படையாக வந்துள்ளதால் இஃது இடைச்சொல் தொடர் ஆகும்.
உரிச்சொல் தொடர் என்றால் என்ன
- சாலவும் நன்று.
- இதில் ‘சால’ என்னும் உரிச்சொல் வெளிப்படையாக வந்துள்ளதால் இஃது உரிச்சொல் தொடர் ஆகும்.
அடுக்குத்தொடர் என்றால் என்ன
- நன்று நன்று நன்று
- இதில் ஒரே சொல் பலமுறை அடுக்கி வந்துள்ளதால் இஃது அடுக்குத்தொடர் ஆகும்.
- தமிழ் வரிவடிவ வளர்ச்சி
- சொற்பூங்கா
- எழுத்துகளின் பிறப்பு
- ஓடை
- கோணக்காத்துப் பாட்டு
- நிலம் பொது
- வெட்டுக்கிளியும் சருகுமானும்
- வினைமுற்று
- தொடர் வகைகள்
- திருக்குறள்
- நோயும் மருந்தும்
- வருமுன் காப்போம்
- தமிழர் மருத்துவம்
- தலைக்குள் ஒர் உலகம்
- எச்சம்
- கல்வி அழகே அழகு
- புத்தியைத் தீட்டு
- பல்துறைக் கல்வி