8TH TAMIL நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்
8TH TAMIL நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்
- கண்ணுக்கும் கருத்துக்கும் மகிழ்ச்சியளித்து நற்பண்புகளை வளர்ப்பது கலைகளின் இயல்பாகும்.
- மேலும் அவை தொன்மையான பண்பாட்டுக்கூறுகளையும் எடுத்துக்காட்டுகின்றன
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
கைவினைக்கலை என்றால் என்ன
- அன்றாடப் பயன்பாட்டுக்காக அழகிய பொருள்களைத் தொழில்முறையில் உருவாக்கும் கலையைக் கைவினைக்கலை எனலாம்.
மண்பாண்டக்கலை
- உலகில் மிகவும் பழமையான கைவினைக் கலைகளுள் ஒன்று மண்பாண்டக்கலை.
- “சிந்துசமவெளி” அகழாய்வில் பானை ஓடுகள் கிடைத்துள்ளன.
- தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.
- நாகை மாவட்டம் “செம்பியன் கண்டியூரில்” கலையழகு மிகுந்த மண்கலங்கள் கிடைத்துள்ளன.
- மதுரை அருகே கீழடியில் ஏராளமான “சுடுமண் பொருட்கள்” கிடைத்துள்ளன.
திருவை என்றால் என்ன
- மண்பாண்டம் செய்ய பயன்படும் சக்கரத்தை “திருவை” என்பர்.
- களிமண்ணுடன் மெல்லிய மணல் மற்றும் சாம்பல் ஆகியவற்றை சேர்த்து பக்குவப்படுத்தி, மண்பாண்டங்களை செய்வர்.
பானை வனைதல்
- பானை செய்தலைப் “பானை வனைதல்” எனவும் கூறுவர்.
- முடிவு பெற்ற பானையை மெருகேற்ற “உருட்டுக்கல்” கொண்டு தேய்ப்பர்.
டெரகோட்டா சுடுமண் சிற்பங்கள்
- மண்பாண்டக் கலையில் அடுத்த வளர்ச்சி நிலை = சுடுமண் சிற்பங்கள்.
- சுடுமண் சிற்பங்களை ஆங்கிலத்தில் டெரகோட்டா என்பர்.
- களிமண்ணால் செய்யப்பட்டு சூளையில் சுட்டு எடுக்கப்படுபவை சுடுமண் சிற்பங்கள் ஆகும்.
மூங்கில்கலை
- மூங்கிலால் பல வகை பொருட்கள் செய்யப்படுகின்றன.
- பிறந்த குழந்தைக்கு விளையாட்டு பொருட்கள் முதல் இறந்தவரை எடுத்துச் செல்லும் பாடை வரை மூங்கிலால் செய்யப்படுகின்றன.
மூவகை மூங்கில்கள்
- மூங்கில்கள் மூன்று வகைப்படும். அவை,
- கல்மூங்கில்
- மலைமூங்கில்
- கூட்டுமூங்கில்
- கைவினைப் பொருட்கள் செய்வதற்கு ஏற்ற மூங்கில்கள் = கூட்டுமூங்கில்கள்.
கூம்பொடு மீப்பாய் களையாது
- முற்காலத்தில் பாய்மரப்படகுகளில் பைகளை பயன்படுத்தினர் என்பதனை “கூம்பொடு மீப்பாய் களையாது” என்ற புறநானூற்று பாடல் அடி விளக்குகிறது.
- “கூம்பொடு மீப்பாய் களையாது” என்ற அடி இடம் பெற்ற நூல் = புறநானூறு.
பனையோலை
- பழந்தமிழ் இலக்கியங்கள் பாதுகாத்து வைத்தவை = பனையோலை.
- பனை மரம் = தமிழ்நாட்டின் மாநில மரம்.
பிரம்பு
- பிரம்பு என்பது கொடி வகையை சார்ந்த தாவரம் ஆகும்.
- பிரம்பின் தாவரவியல் பெயர் = கலாமஸ் ரொடாங் (Calamus Rotang)
- இது நீர்நிறைந்த வாய்க்கால் வரப்புகளிலும், மண்குகைகளிலும் வளருபவை.
- இது தமிழகத்தில் தற்போது குறைந்துவிட்டது.
- தமிழ் வரிவடிவ வளர்ச்சி
- சொற்பூங்கா
- எழுத்துகளின் பிறப்பு
- ஓடை
- கோணக்காத்துப் பாட்டு
- நிலம் பொது
- வெட்டுக்கிளியும் சருகுமானும்
- வினைமுற்று
- தொடர் வகைகள்
- திருக்குறள்
- நோயும் மருந்தும்
- வருமுன் காப்போம்
- தமிழர் மருத்துவம்
- தலைக்குள் ஒர் உலகம்
- எச்சம்
- கல்வி அழகே அழகு
- புத்தியைத் தீட்டு
- பல்துறைக் கல்வி