சமசீர் கல்வி 11 ஆம் வகுப்பு பாட புத்தகம் சீவக சிந்தாமணி

சீவக சிந்தாமணி

நூல் குறிப்பு:

 • சிந்தாமணி என்பதற்கு ஒளிகுன்றாத மணி என்பது பொருள்.
 • இக்காப்பியத்தை இயற்றியவர் திருத்தக்கதேவர்.
 • இவர் சோழ நாட்டினர். சமணத் துறவி.
 • இவர் நரி விருத்தம் என்ற நூலையும் படைத்துள்ளார்.
 • சீவக சிந்தாமணிக்கு “மண நூல்” என்ற பெயரும் உண்டு.
 • இது நாமகள் இலம்பகம் முதலாக முத்தி இலம்பகம் ஈறாகப் 13 இலம்பகம் கொண்டுள்ளது.
 • இந்நூல் விருத்தம் என்ற பாவினால் அமைந்த முதல் நூல்.
 • இந்நூலிற்கு உரை கண்டவர் = உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்.
 • சீவகன் வரலாற்றை கூறுவதால் இந்நூல் சீவக சிந்தாமணி எனப் பெயர் வழங்கப்படுகிறது.

காந்தருவதத்தையார் இலம்பகம்:

 • வெள்ளி மலையின் வேந்தன் கலுழவேகன்.
 • அவன் மகள் காந்தருவதத்தை.
 • காந்தருவதத்தையின் தோழி வீணாபதி
 • யாழ்போர் நடந்த இடம் இராசமாபுரம்
 • காந்தருவதத்தை சீதத்தன் என்னும் வணிகனிடம் ஒப்படைக்கப்பட்டாள்.
 • சீவகனின் நண்பன் நபுலன்
 • போட்டியில் சீவகன் காந்தருவதத்தையை வென்று அவளை மணம் முடித்தான்.

சொற்பொருள்:

சிலை – வில் பொழில் – சோலை
குரங்கின – வளைந்தன பறவை – கின்னரமிதுனம் என்னும் பறவை
கருங்கொடி – கரிய ஒழுங்கு மிடறு – கழுத்து
கொடி – ஒழுங்கு கடி – விளக்கம்
எயிரு – பல் விம்மாது – புடைக்காது
எரிமலர் – முருக்கமலர் உளர – தடவ
இவுளி – குதிரை கால் – காற்று
நுனை – கூர்மை கடம் – காடு
பிணை – பெண்மான் மாழ்கி – மயங்கி
இழுக்கி – தப்பி எழினி – உறை
மொய்ம்பு – வலிமை மடங்கல் – சிங்கம்
கணிகை – பொதுமகள் கொல்லை – முல்லைநிலம்
குரங்கி – வளைந்து தூமம் – அகிற்புகை
நிலமடந்தை – பெற்ற தாய் இருவிசும்பு – செவிலித்தாய்
கைத்தாய் – செவிலித்தாய் ஓதி – சொல்லி
புரி – முறுக்கு பத்தர் – யாழின் ஓர் உறுப்பு

இலக்கணக்குறிப்பு:

எழீஇ – சொல்லிசை அளபெடை சிறுநுதல் – அன்மொழித்தொகை
பாவை – உவமை ஆகுபெயர் சிலைத் தொழில் – ஆறாம் வேற்றுமைத்தொகை
கருங்கொடி – பண்புத்தொகை இருங்கடல் – பண்புத்தொகை
கடிமிடறு – உரிச்சொற்றொடர் பவளச்செவ்வாய் – உவமைத்தொகை
விரிமலர் – வினைத்தொகை கோதை – உவமை ஆகுபெயர்
எரிமலர் – உவமத்தொகை செவ்வாய் – அன்மொழித்தொகை
ஒப்ப – உவமஉருபு இன்னரம்பு – பண்புத்தொகை
விடுகணை – வினைத்தொகை திண்டேர் – பண்புத்தொகை
வடிநுனை – வினைத்தொகை அடுதிரை – வினைத்தொகை
கழித்தவேல் – பெயரெச்சம் அன்ன – உவமஉருபு
நீக்கி – வினையெச்சம் நெடுங்கண் – பண்புத்தொகை
தடங்கண் – உரிச்சொற்றொடர் சுரந்து, முதிர்ந்து – வினையெச்சம்
நின்றாள் – வினையாலணையும் பெயர் போக, நடக்க – வியங்கோள் வினைமுற்று
கமழ் ஓதி – அன்மொழித்தொகை காளை – உவம ஆகுபெயர்

Leave a Comment

Your email address will not be published.