10TH TAMIL சிற்றகல் ஒளி

Table of Contents

10TH TAMIL சிற்றகல் ஒளி

10TH TAMIL சிற்றகல் ஒளி
10TH TAMIL சிற்றகல் ஒளி

10TH TAMIL சிற்றகல் ஒளி

  • இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் சிறப்புடையதாக கருதப்படும் ஆண்டு என ம.பொ.சி குறிப்பிடுவது = 1906.
  • காந்தியடிகள் “சத்தியாக்கிரகம்” என்ற அறப்போராட்டத்தை துவக்கி வைத்த ஆண்டு = 1906.
  • காந்தியடிகள் “சத்தியாக்கிரகம்” என்ற அறப்போராட்டத்தை துவக்கி வைத்த இடம் = தென்னாப்ரிக்கா.
  • வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் துவக்கிய ஆண்டு = 1906.
  • சிலம்புச் செல்வர் ம.பொ.சி பிறந்த ஆண்டு = 1906.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

சிலம்புச் செல்வர் ம.பொ.சி

  • ம.பொ.சி பிறந்த இடம் = சென்னை ஆயிரம்விளக்கு வட்டம் சால்வன்குப்பம் பகுதி.
  • தந்தையார் பெயர் = பொன்னுசாமி
  • தாயார் பெயர் = சிவகாமி.
  • ம.பொ.சியின் இயற்பெயர் = ஞானப்பிரகாசம்.
  • ம.பொ.சிக்கு “சிவஞானி” என்று பெயர் வைத்தவர் = சரபையர் என்ற முதியவர்.
  • சிவஞானி என்னும் பெயர் பிற்காலத்தில் “சிவஞானம்” என மாற்றம் அடைந்தது.
  • வறுமையின் காரணமாக மூன்றாம் வகுப்போடு கல்வியை நிறுத்தி விட்டார்.

செவிச்செல்வம் பெற்றல்

  • ம.பொ.சிக்கு இலக்கிய பயிற்சியாக அமைந்தவை = அவரின் அம்மா பயிற்றுவித்த பாக்கள்.
  • இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டது = அவரின் அம்மா வழங்கிய “அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை” போன்ற அம்மானை பாடல்களை கொண்ட நூல்களை படித்ததன் மூலம்.
  • இலக்கிய அறிவை பெற்றது = சொற்பொழிவுகளை கேட்டு.

கல்வியறிவு பெறுவதற்கான வழிகள்

  • ஒருவன் கல்வியறிவு பெற இரண்டு வழிகள் உள்ளன என ம.பொ.சி கூறுகிறார்.
    • ஒன்று கல்வி
    • மற்றொன்று கேள்வி.

திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்

  • ம.பொ.சியின் கேள்வி ஞானத்தை பெருக்கிய பெருமை கொண்டவர் = திருப்பாதிரிப் புலியூர் ஞானியாரடிகள்

புத்தகப்பித்தன்

  • “தன்னை புத்தகப்பித்தன்” என்று கூறிக்கொண்டார் ம.பொ.சி
  • “என் அறியாமையுடன் கடும் போர் நடத்தியிருக்கிறேன்” என்கிறார் ம.பொ.சி.
  • “குறைந்த விலைக்கு நல்ல புத்தகம் கிடைத்து விட்டால் பேரானந்தம் அடைவேன்” என்கிறார் ம.பொ.சி.
  • “என் வாழ்நாளில் நானாக முயன்று சேர்த்து வைத்துள்ள சொத்துக்கள் என்னிடமுள்ள பல்லாயிரக்கணக்கான நூல்களைத் தவிர வேறு எதுவும் இல்லை” எனக் கூறியுள்ளார் ம.பொ.சி.

காந்தி – இர்வின் ஒப்பந்தம்

  • காந்தி – இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்ட ஆண்டு = 1931.
  • பேராயக் கட்சி எனப்படுவது “காங்கிரஸ் கட்சி”.
  • பேராயக் (காங்கிரஸ்) கட்சியால் நடத்தப்பட்ட ஊர்வலங்களிலும் காதர் விற்பனையிலும் தவறாமல் கலந்துக் கொண்டார் ம.பொ.சி.

ஆறுமாதக் கடுங்காவல்

  • “தமிழா! துள்ளி எழு” என்ற தலைப்புடைய துண்டறிக்கையை கடற்கரையில் மக்களுக்கு வழங்கியதற்காக ஆறும் மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டார் ம.பொ.சி.

“வெள்ளையனே வெளியேறு தீர்மானம்”

  • இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கத்தக்க பொன் நாள் என ம.பொ.சி. குறிப்பிடுவது = 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் நாள்.
  • 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் நாள், பம்பாயில் பேராயக் (காங்கிரஸ்) கட்சி சார்பில் “இந்தியாவை விட்டு வெள்ளையனே வெளியேறு” தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • ம.பொ.சி கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
  • ம.பொ.சி வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட நாள் = 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் நாள்.
  • காமராசர், தீரர் சத்தியமூர்த்தி, பிரகாசம் போன்ற தலைவர்களை சந்தித்த இடம் = வேலூர் மத்திய சிறைச்சாலை.
  • ம.பொ.சி வேலூர் சிறையில் இருந்து எங்கு மாற்றப்பட்டார் = அமராவதி சிறை.
  • ம.பொ.சி எந்த சிறையில் இருந்து அமராவதி சிறைக்கு மாற்றப்பட்டார் = வேலூர் சிறை.
  • அமராவதி சிறையில் ம.பொ.சி இருந்த அறையின் மேற்கூரை துத்தநாக தகடுகளால் ஆனது.
  • அங்கு 120 பாகை அளவில் வெயிலின் தாக்கம் இருந்தது.
10TH TAMIL சிற்றகல் ஒளி
10TH TAMIL சிற்றகல் ஒளி

வடக்கெல்லை மீட்சி

  • வடக்கெல்லை மீட்சிக்கான முதல் முயற்சி துவக்கப்பட்ட நாள் = 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் நாள் (சுதந்திரத்திற்கு அடுத்த நாள்).
  • ம.பொ.சியை வடக்கெல்லை மீட்சி போராட்டத்திற்கு அழைத்தவர் = ஆசிரியர் மங்கலங்கிழார்.

தமிழாசான் மங்கலங்கிழார்

  • சித்தூர் மாவட்டத்தை ஆந்திராவுடன் இணைக்க முயற்சித்த பொழுது, வடக்கெல்லை மாவட்ட தமில் மக்களை ஒருங்கிணைத்து தமிழுணர்வு கொள்ளச் செய்தவர் = தமிழாசான் மங்கலங்கிழார்.
  • தமிழாசான் மங்கலங்கிழாருடன் சேர்ந்து சென்னையிலும், திருத்தணியிலும் தமிழர் மாநாடு நடத்திய அமைப்பு = தமிழரசுக் கழகம்.

வடக்கெல்லை போராட்டம்

  • வடக்கெல்லை போராட்டம் துவங்கிய இடம் = சித்தூர், புத்தூர், திருத்தணி.
  • போராட்டத்தில் ஈடுபட்டு திருவாலங்காடு கோவிந்தராசன் என்பவர் இராஜமுந்திரி சிறையிலும், பழநி சிறையில் இருந்து மாணிக்கம் என்பவரும் சிறையிலேயே உயிர் இழந்தனர்.

கே.எம்.பணிக்கர் மொழிவாரி ஆணையம்

  • மத்திய யாரின் தலைமையில் மொழிவாரி ஆணையத்தை அமைத்தது = சர்தார் கே.எம்.பணிக்கர்.
  • சித்தூர் மாவட்டம் முழுவதையும் ஆந்திர மாநிலத்திற்கு கொடுக்க பரிந்துரைத்த ஆணையம் = கே.எம்.பணிக்கர் மொழிவாரி ஆணையம்.

படாஸ்கர் ஆணையம்

  • “மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்” என்று முழங்கினார் ம.பொ.சி.
  • ஆதனால் மத்திய அரசு “படாஸ்கர் ஆணையம்” அமைத்து உத்தரவிட்டது.
  • படாஸ்கர் ஆணையம் அமைக்கப்பட்டு திருத்தணி வரையிலான தமிழக நிலங்கள் மீட்கப்பட்டன.

நீதிபதி வாஞ்சு ஆணையம்

  • ஆந்திராவின் தலைநகராக சென்னையை கேட்டதால் மீண்டும் போராட்டம் வெடித்தது.
  • தலைநகர் சென்னையை காக்க அப்போதைய முதல்வர் இராசாசி தனது பதவியை துறக்க முன்வந்தார்.
  • போராட்டத்தின் காரணமாக மத்திய அரசு “நீதிபதி வாஞ்சு” தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது.

தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்

  • சென்னை மாநகராட்சியின் சிறப்பு கூட்டம், மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமையில் நடைபெற்றது. இதில் “தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என முழங்கினார் ம.பொ.சி.
  • 03.1953 அன்று பிரதமர் நேரு ஆந்திர மாநிலத்தின் தலைநகர் ஆந்திர மாநிலத்தின் எல்லைக்குள்ளேயே அமைக்கப்படும் என அறிவித்தார். இதனால் சென்னை தமிழருக்கு என உறுதி செய்யப்பட்டது.

தெற்கெல்லைப் போராட்டம்

  • ம.பொ.சி முதன் முதலில் கலந்துக் கொண்ட போராட்டம் = தெற்கெல்லைப் போராட்டமே.
  • தெற்கெல்லை கிளர்ச்சி பற்றி ம.பொ.சியின் முதல் பேச்சு நடைபெற்ற இடம் = நாகர்கோவில் நகரின் வடிவீசுவரம்.
  • எந்த சங்கத்தின் ஆண்டு விழாவில் தெற்கெல்லை கிளர்ச்சி பற்றி ம.பொ.சி பேசினார் = வடிவை வாலிபர் சங்கம்.

தமிழரசுக் கழகம்

  • தமிழக வடக்கு – தெற்கு எல்லைக் கிளர்ச்சிகளைத் தமிழகம் அளவில் நடத்திய அமைப்பு = தமிழரசு கழகம்.
  • தெற்கெல்லை கிளர்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர்கள் = தேவசகாயம், செல்லையா.
  • ம.பொ.சி யாரை மறக்கக்கூடாது என்கிறார் = தெற்கெல்லை போராட்டத்தில் உயிர்நீத்த தேவசகாயம், செல்லையா.

மார்ஷல் ஏ. நேசமணி

  • யாருடைய வருகைக்கு பிறகு தெற்கெல்லைப் போராட்டம் வலுப்பெற்றது = மார்ஷல் ஏ. நேசமணி.
  • இளம்வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடியவர்; வழக்கறிஞர்.
  • நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.
  • குமரி மாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்; இதனால் மார்ஷல் நேசமணி என்று அழைக்கப்பட்டார்.
  • 1956 நவம்பர் 1ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்து, தமிழகத்தின் தென் எல்லையாக மாறியது.
  • இவருடைய நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு இவருக்கு நாகர்கோவிலில் சிலையோடு மணிமண்டபமும் அமைத்துள்ளது.

பசல் அலி ஆணையம்

  • நீலகிரியின் கூடலூர், உதகமண்டலம் ஆகிய பகுதிகளை கேரளாவுடன் இணைக்க வேண்டும் என கேரளா சார்பில் பசல் அலி ஆணையத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது.
  • பசல் அலி ஆணையத்தின் பரிந்துரை வெளியான தினம் = 1955 அக்டோபர் 10.
  • ஆணையத்தின் பரிந்துரையின் படி கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகத்தீசுவரம், செங்கோட்டை ஆகிய பகுதிகள் தமிழகத்துடன் சேர்க்கப்பட்டன.
  • தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப்பட்டன.

ம.பொ.சியின் வாழ்நாள் மகிழ்ச்சி

  • தமிழகத்தின் வடக்கெல்லை வேங்கடமலையாகவும், தெற்கெல்லை குமரிமுனையாகவும் கூறப்பட்டுள்ள சங்க இலக்கிய நூல்கள் = புறநானூறு, சிலப்பதிகாரம்.
  • “அந்தத் தெய்வீக எல்லைகளை ஓரளவேனும் தமிழகம் திரும்பப் பெற்றது என்பதே என் வாழ்நாள் மகிழ்ச்சியாகும்” எனக் கூறினார் ம.பொ.சி.

சிலப்பதிகாரமும் ம.பொ.சியும்

10TH TAMIL சிற்றகல் ஒளி
10TH TAMIL சிற்றகல் ஒளி
  • நான் சிலப்பதிகாரக் காப்பியத்தை மக்களிடம் கொண்டுசெல்ல விரும்பியதற்குக் காரணமுண்டு; திருக்குறளையோ, கம்பராமாயணத்தையோ விரும்பாதவனல்லன்.
  • ஆயினும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டிற்குக் கேடில்லாத வகையில், தமிழினத்தை ஒன்றுபடுத்த எடுத்துக்கொண்ட முயற்சிக்குப் பயன்படக்கூடிய ஓர் இலக்கியம் தமிழில் உண்டென்றால், அது சிலப்பதிகாரத்தைத் தவிர வேறில்லையென்று உறுதியாகக் கூறுவேன் என்றார் ம.பொ.சி.
  • இளங்கோ தந்த சிலம்பு, தமிழினத்தின் பொதுச்சொத்து. எனவேதான் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் சிலப்பதிகார மாநாடுகள் நடத்தினோம்.
  • “தமிழினத்தின் பொதுசொத்து” என ம.பொ.சி குறிப்பிடுவது = சிலப்பதிகாரம்.
  • சிலப்பதிகார மாநாட்டை நடத்தியவர் = ம.பொ.சி.
  • தமிழகத்தை ஒன்றுபடுத்த ம.பொ.சி. பயன்படுத்திய இலக்கியம் = சிலப்பதிகாரம்.
  • “தமிழகத்தை ஒன்றுபடுத்த பயன்பட்ட இலக்கியம் சிலப்பதிகாரம்” என்று கூறியவர் = ம.பொ.சி.

ம.பொ.சிவஞானம்

  • ‘எனது போராட்டம்’ என்னும் தன்வரலாற்று நூலை எழுதியவர் = ம.பொ.சிவஞானம்.
  • “சிலம்புச்செல்வர்” என்று போற்றப்படுபவர் = ம.பொ.சிவஞானம் (1906-1995)
  • விடுதலைப் போராட்ட வீரர்.
  • 1952முதல் 1954வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் 1972முதல் 1978வரை சட்டமன்ற மேலவைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
  • தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர் = ம.பொ.சிவஞானம்.
  • “வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு” என்ற நூலின் ஆசிரியர் = ம.பொ.சி.
  • ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்னும் இவருடைய நூலுக்காக 1966ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
  • தமிழக அரசு திருத்தணியிலும் சென்னை தியாகராய நகரிலும் இவருக்குச் சிலை அமைத்துள்ளது.

கடல்கடந்த தமிழ் வணிகம்

  • ஆஸ்டிரியா நாட்டுத் தலைநகரமான வியன்னாவில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் பேபிரஸ் தாளில் எழுதப்பட்ட அரிய கையெழுத்துச் சுவடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
  • இச்சுவடி சேர நாட்டுத் துறைமுகமான முசிறியில் வாழ்ந்த தமிழ் வணிகருக்கும் எகிப்து நாட்டின் அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் வாழ்ந்த கிரேக்க வணிகருக்கும் இடையிலான வணிக ஒப்பந்தம்.
  • இது கி.பி. 2ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.

 

 

 

Leave a Reply