12 ஆம் வகுப்பு காப்பியங்கள்
12 ஆம் வகுப்பு காப்பியங்கள்
- தமிழில் காப்பியங்களுக்கு இலக்கணம் வகுத்துள்ள நூல் = கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய தண்டியலங்காரம் ஆகும்.
- தண்டியலங்காரத்தில் “பெருங்காப்பிய நிலை பேசுங்காலை” எனத் தொடங்கும் நூற்பா காப்பியங்களின் இலக்கணம் கூறுகிறது.
பெருங்காப்பிய இலக்கணம்
- இயற்கையை வாழ்த்துதல், தெய்வத்தினை வணங்குதல், உரைக்கும் பொருள் உணர்த்தல் ஆகிய மூன்றினுள் ஒன்று பெருங்காப்பியத்தில் முதலாக வர வேண்டும்.
- அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு பொருள்களை பெருங்காப்பியம் வலியுறுத்தி பாட வேண்டும்.
- பெருங்காப்பியங்கள், எதையும் குறைவின்றிச் செய்து முடிக்கும் வலிமை வாய்ந்த தன்னிகர் இல்லா தலைவனை பெற்றிருக்க வேண்டும்.
- காப்பியம் எழுந்த சூழல் சார்ந்து மலை, கடல், நாடு, நகர் முதலானவற்றின் வருணனைகள் இடம்பெற வேண்டும்.
- பின்னர் அந்தந்த நிலத்து மக்களின் வாழ்வியல், சடங்குகள், விளையாட்டுகள், தூது, பயணம், போர், வெற்றி போன்ற செய்திகளைக் கொண்டிருக்க வேண்டும்.
- எண்வகை மெய்ப்பாடுகளைக் கூறும் வகையில் இதன் உள்ளடக்கம் அமைதல் வேண்டும். (எண் வகை மெய்ப்பாடுகள் = சிரிப்பு, அழுகை, சிறுமை, வியப்பு, அச்சம், பெருமை, சினம், மகிழ்ச்சி)
- காப்பியத்தின் பெரும்பிரிவிற்குக் காண்டம், இலம்பகம், பருவம் எனவும் உட்பிரிவிற்குச் சருக்கம், காதை, படலம் எனவும் பெயரிடுவர்.
சிறுங்காப்பிய இலக்கணம்
- அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு பொருள்களில் ஏதேனும் ஒன்று குறைந்து வர பாடல் அமைப்பது சிறு காப்பியம் ஆகும் என்கிறார் தண்டியலங்கார நூலின் ஆசிரியர் தண்டி.
ஐம்பெரும்காப்பியங்கள்
- ஐம்பெரும்காப்பியங்கள் நூல்கள் = சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி
- சங்கம் மருவிய கால இலக்கியங்கள் = சிலப்பதிகாரம், மணிமேகலை
- சோழர் கால இலக்கியங்கள் = சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி
- அழிந்து போன காப்பியங்கள் = வளையாபதி, குண்டலகேசி
ஐஞ்சிறுகாப்பியங்கள்
- அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதிப்பொருள்களுள் ஒன்றோ சிலவோ குறைந்து, பெருங்காப்பிய இலக்கணத்திற்கு மாறுபட்டு வருவது சிறுங்காப்பியமாகும்.
- ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமண சமய காப்பியங்களாகும்.
- ஐஞ்சிறுகாப்பியங்கள் = உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி.
-
ஐம்பெரும் காப்பியங்கள் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
-
ஐஞ்சிறுகாப்பியங்கள் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- சிறுபாணாற்றுப்படை
- கோடை மழை
- குறியீடு
- வ.சுப.மாணிக்கம்
- 12 ஆம் வகுப்பு இலக்கணக்குறிப்பு
- 12 ஆம் வகுப்பு அருஞ்சொற்பொருள்
- 12 ஆம் வகுப்பு பிரித்து எழுதுக
- 12 ஆம் வகுப்பு நூல் நூலாசிரியர்கள்
- 12 ஆம் வகுப்பு தமிழக்கம் தருக
- 12 ஆம் வகுப்பு காப்பியங்கள்