6TH TAMIL சிலப்பதிகாரம்
6TH TAMIL சிலப்பதிகாரம்
- நம்மைச் சுற்றிலும் எங்குப் பார்த்தாலும் இயற்கையின் அழகு கொட்டிக் கிடக்கிறது
- கடலும், மலையும், கதிரும், நிலவும் மழையும் பனியும் இயற்கையின் கொடைகள் அல்லவா? அவற்றைக் கண்டு மகிழாதவர் உண்டோ?
- நிலவின் குளிர்ச்சியையும் கதிரவனின் வெம்மையையும், மழையின் பயனையும் சிலப்பதிகாரம் போற்றுகிறது.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
சிலப்பதிகாரப் பாடல்
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்றுஇவ் அங்கண் உலகு அளித்த லான் ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு மேரு வலம் திரிதலான் மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல் மேல்நின்று தான் சுரத்தலான் – இளங்கோவடிகள் |
அருஞ்சொற்பொருள்
- திங்கள் = நிலவு
- கொங்கு = மகரந்தம்
- அலர் = மலர்தல்
- திகிரி = ஆணைச்சக்கரம்
- பொற்கோட்டு = பொன்மயமான சிகரத்தில்
- மேரு = இமயமலை
- நாமநீர் = அச்சம் தரும் கடல்
- அளி = கருணை
பாடல் பொருள்
- தேன் நிறைந்த ஆத்திமலர் மாலையை அணிந்தவன் சோழ மன்னன்.
- அவனுடைய வெண்கொற்றக் குடை குளிர்ச்சி உடையது போன்றது வெண்ணிலா.
- காவிரி ஆறு பாய்ந்து வளம் செய்யும் நாட்டை ஆட்சி செய்பவன் சோழ மன்னன்.
- அவனின் ஆணைச்சக்கரம் போன்றது கதிரவன்.
இளங்கோவடிகள் ஆசிரியர் குறிப்பு
- சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.
- இவர் சேர மன்னர் மரபைச் சேர்ந்தவர் என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுகிறது.
- இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பர்.
சிலப்பதிகாரம் நூல் குறிப்பு
- ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம்.
- இதுவே தமிழின் முதல் காப்பியம்.
- இது முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், என்றெல்லாம் போற்றப்படுகிறது.
- சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
- சிலப்பதிகார நூல் எவ்வாறு துவங்குகிறது = திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாக சிலப்பதிகாரம் தொடங்குகிறது.
- “திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = சிலப்பதிகாரம்.
- “ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = சிலப்பதிகாரம்.
- “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = சிலப்பதிகாரம்.
- ஓரெழுத்து ஒருமொழி பகுபதம் பகாப்பதம்
- ஒரு வேண்டுகோள்
- கீரைப்பாத்தியும் குதிரையும்
- பேசும் ஓவியங்கள்
- தமிழ் ஒளிர் இடங்கள்
- தொழிற்பெயர்
- விருந்தோம்பல்
- வயலும் வாழ்வும்
- திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி
- திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்
- அணி இலக்கணம்
- புதுமை விளக்கு
- அறம் என்னும் கதிர்
- ஒப்புரவு நெறி
- அணி இலக்கணம்
- திருக்குறள்
- மலைப்பொழிவு
- தன்னை அறிதல்
- கண்ணியமிகு தலைவர்
- பயணம்
- ஆகுபெயர்