6TH TAMIL ஆசாரக்கோவை

6TH TAMIL ஆசாரக்கோவை

6TH TAMIL ஆசாரக்கோவை

6TH TAMIL ஆசாரக்கோவை

  • நல்லொழுக்கமே நல்ல மனிதர்களை உருவாக்கும்.
  • நாம் ஒழுக்க நெறிகளை அறிந்தால்தான் அவற்றைப் பின்பற்றி நல்வாழ்வு வாழ முடியும்.
  • இந்த நோக்கத்திற்காகவே நம் முன்னோர் அற நூல்களைப் படைத்தனர்.
  • நாம் பின்பற்ற வேண்டிய நற்பண்புகளை அறநூல்கள் விளக்குகின்றன.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

ஆசாரக்கோவை பாடல்

6TH TAMIL ஆசாரக்கோவை
6TH TAMIL ஆசாரக்கோவை

நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு

இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு

ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை

நல்லினத் தாரோடு நட்டல் – இவையெட்டும்

சொல்லிய ஆசார வித்து

–    பெருவாயின் முள்ளியார்

அருஞ்சொற்பொருள்

  • நன்றியறிதல் = பிறர் செய்த உதவியை மறவாமை
  • ஒப்புரவு = எல்லோரையும் சமமாகப் பேணுதல்
  • நட்டல் = நட்புக் கொள்ளுதல்

பாடலின் பொருள்

  • நல்லொழுக்கத்தை விதைக்கும் விதைகள் = எட்டு. அவை,
    • பிறர் செய்த உதவியை மறவாதிருத்தல்
    • பிறர் செய்யும் தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதல்
    • இனிய சொற்களைப் பேசுதல்
    • எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல்
    • கல்வி அறிவு பெறுதல்
    • எல்லோரையும் சமமாகப் பேணுதல்
    • அறிவுடையவராய் இருத்தல்
    • நற்பண்புகள் உடையவரோடு நட்புக் கொள்ளுதல்

ஆசாரக்கோவை நூல் குறிப்பு

  • ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார்.
  • இவர் பிறந்த ஊர் கயத்தூர்.
  • ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள்.
  • இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது.

 

Leave a Reply