6TH TAMIL வளர்தமிழ்

6TH TAMIL வளர்தமிழ்

6TH TAMIL வளர்தமிழ்

6TH TAMIL வளர்தமிழ்

  • மூத்த தமிழ்மொழி என்றும் இளமையானது; எளிமையானது; இனிமையானது; வளமையானது; காலத்திற்கேற்பத் தன்னைத் தகுதிப்படுத்திக்கொள்வது; நினைக்கும்போதே நெஞ்சில் இனிப்பது; நம் வாழ்வைச் செழிக்கச் செய்வது;

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

உலக மொழிகள்

  • உலகில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன
  • இவற்றுள் சில மொழிகள் மட்டுமே பேச்சு வடிவம், எழுத்து வடிவம் ஆகிய இரண்டையும் பெற்றுள்ளன.
6TH TAMIL வளர்தமிழ்
6TH TAMIL வளர்தமிழ்

செம்மொழி தமிழ்

  • உலக மொழிகள் பலவற்றுள் இலக்கண, இலக்கியவளம் பெற்றுத் திகழும் மொழிகள் மிகச்சிலவே.
  • அவற்றுள் செம்மை மிக்க மொழி என ஏற்றுக் கொள்ளப்பட்டவை சில மொழிகளே.
  • தமிழ்மொழி அத்தகு சிறப்பு மிக்க செம்மொழியாகும்.

தமிழ்மொழியின் இனிமை

  • தமிழ் இலக்கியங்கள் இனிமையானவை. ஓசை இனிமை, சொல் இனிமை, பொருள் இனிமை கொண்டவை
  • “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று தமிழின் இனிமையை கூறியவர் = பாரதியார்.
6TH TAMIL வளர்தமிழ்
6TH TAMIL வளர்தமிழ்

மூத்தமொழி தமிழ்

  • “என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்!” என்று தமிழ்மொழியின் தொன்மையை புகழ்ந்தவர் = பாரதியார்.
  • தமிழில் நமக்கு கிடைத்த மிகவும் பழமையான இலக்கண நூல் = தொல்காப்பியம்.

எளிய மொழி

  • தமிழ்மொழி பேசவும் படிக்கவும் எழுதவும் உகந்த மொழி.
  • எழுத்துகளைக் கூட்டி ஒலித்தாலே தமிழ் படித்தல் இயல்பாக நிகழ்ந்துவிடும்.

வலஞ்சுழி எழுத்துகள், இடஞ்சுழி எழுத்துகள்

  • தமிழ்மொழியை எழுதும் முறையும் மிக எளிதுதான். இதற்கேற்ப, தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் “வலஞ்சுழி” எழுத்துகளாகவே அமைந்துள்ளன.
    • வலஞ்சுழி எழுத்துகள் = அ, எ, ஔ, ண, ஞ
    • இடஞ்சுழி எழுத்துகள் = ட, ய, ழ

சீர்மை மொழி

  • “சீர்மை” என்பதன் பொருள் = ஒழுங்கு முறை.
  • தமிழ் மொழியின் பலவகைச் சீர்மைகளுள் குறிப்பிடத்தக்கது = சொற்சிறப்பு.
  • உயர்திணை, அஃறிணை என இருவகைத் திணைகளை அறிவோம்.
  • உயர்திணையின் எதிர்ச்சொல் தாழ்திணை என அமையவேண்டும்.
  • ஆனால் தாழ்திணை என்று கூறாமல் அஃறிணை (அல் + திணை = உயர்வு அல்லாத திணை) என்று பெயர் இட்டனர் நம் முன்னோர்.
  • பாகற்காய் கசப்புச்சுவை உடையது.
  • அதனைக் கசப்புக்காய் என்று கூறாமல், இனிப்பு அல்லாத காய் பாகற்காய் (பாகு + அல் + காய்) என வழங்கினர்.

இலக்கிய, இலக்கண வளம்

  • இலக்கிய, இலக்கண வளம் நிறைந்தது தமிழ் மொழி.
    • இலக்கண நூல் = தொல்காப்பியம், நன்னூல்
    • சங்க இலக்கியம் = எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
    • அறநூல்கள் = திருக்குறள், நாலடியார்
    • காப்பியங்கள் = சிலப்பதிகாரம், மணிமேகலை

சொல் வளம்

  • ஒரு பொருளின் பல நிலைகளுக்கும் வெவ்வேறு பெயர் சூட்டுவது தமிழ் மொழியின் சிறப்பாகும்.
  • சான்றாக, பூவின் ஏழுநிலைகளுக்கும் தோன்றுவது முதல் உதிர்வது உதிர்வது வரை தனித்தனிப் பெயர்கள்தமிழில் உண்டு.
6TH TAMIL வளர்தமிழ்
6TH TAMIL வளர்தமிழ்

பூவின் ஏழு நிலைகள்

  • பூவின் முதல் நிலை = அரும்பு
  • பூவின் இரண்டாவது நிலை = மொட்டு
  • பூவின் மூன்றாவது நிலை = முகை
  • பூவின் நான்காவது நிலை = மலர்
  • பூவின் ஐந்தாவது நிலை = அலர்
  • பூவின் ஆறாவது நிலை = வீ
  • பூவின் ஏழாவது நிலை = செம்மல்

மா என்னும் சொல்லின் பல்வேறு பொருள்

  • மா என்னும் ஓரெழுத்து சொல்லின் பல்வேறு பொருள்கள் = மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு.

முத்தமிழ்

  • இயல்தமிழ் = எண்ணத்தை வெளிப்படுத்தும்.
  • இசைத்தமிழ் = உள்ளத்தை மகிழ்விக்கும்.
  • நாடகத்தமிழ் = உணர்வில் கலந்து வாழ்வின் நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டும்.

புதிய இலக்கிய வடிவங்கள்

  • செய்யுள், கவிதை, புதுக்கவிதை, துளிப்பா = தமிழ்க் கவிதை வடிவங்கள்.
  • கட்டுரை, புதினம், சிறுகதை = தமிழ் உரைநடை வடிவங்கள்.

கணினிக்கு ஏற்ற மொழி

  • மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் என்றால் அது “எண்களின்” அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.
  • கணினி, இணையம் போன்றவற்றில் பயன்படுத்தக்கூடிய மொழியாக தமிழ் திகழ்கிறது.

தமிழ் என்ற சொல் முதன் முதலில் இடம்பெற்ற நூல்

  • “தமிழ்” என்ற சொல் முதன் முதலில் இடம்பெற்றுள்ள நூல் = தொல்காப்பியம்.
  • சான்று:
    • “தமிழென் கிளவியும் அதனோ ரற்றே” (தொல்காப்பியம் : 386)

தமிழ்நாடு என்ற சொல் முதன் முதலில் இடம்பெற்ற நூல்

  • தமிழ்நாடு என்ற சொல் முதன் முதலில் இடம்பெற்றுள்ள நூல் = சிலப்பதிகாரம் (வஞ்சிக்காண்டம்).
  • சான்று:
    • “இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின்” (சிலப்பதிகாரம், வஞ்சிக்காண்டம் : 165)

தமிழன் என்ற சொல் முதன் முதலில் இடம்பெற்ற நூல்

  • தமிழன் என்ற சொல் முதன் முதலில் இடம்பெற்றுள்ள நூல் = அப்பர் தேவாரம் (திருத்தாண்டகம்)
  • சான்று:
    • “தமிழன் கண்டாய்” (அப்பர் தேவாரம், திருத்தாண்டகம் : 23)
6TH TAMIL வளர்தமிழ்
6TH TAMIL வளர்தமிழ்

தாவர இலைப் பெயர்கள்

  • ஆல், அரசு, மா, பலா, வாழை = இலை
  • அகத்தி, பசலை, முருங்கை = கீரை
  • அருகு, கோரை = புல்
  • நெல், வரகு = தாள்
  • மல்லி = தழை
  • சப்பாத்திக் கள்ளி, தாழை = மடல்
  • கரும்பு, நாணல் = தோகை
  • பனை, தென்னை = ஓலை
  • கமுகு (பாக்கு) = கூந்தல்

இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில் உள்ள தமிழ்ச்சொற்கள்

வ.எண்

சொல் இடம்பெற்ற நூல்
1 வேளாண்மை

கலித்தொகை 101, திருக்குறள் 81

2

உழவர் நற்றிணை 4
3 பாம்பு

குறுந்தொகை-239

4

வெள்ளம் பதிற்றுப்பத்து-15
5 முதலை

குறுந்தொகை-324

6

கோடை அகநானூறு-42
7 உலகம்

தொல்காப்பியம், கிளவியாக்கம்- 56, திருமுருகாற்றுப்படை-1

8

மருந்து அகநானூறு-147, திருக்குறள் 952
9 ஊர்

தொல்காப்பியம், அகத்திணையியல் -41

10

அன்பு தொல்காப்பியம், களவியல் 110, திருக்குறள் 84
11 உயிர்

தொல்காப்பியம், கிளவியாக்கம்- 56, திருக்குறள் 955

12

மகிழ்ச்சி தொல்காப்பியம், கற்பியல்-142, திருக்குறள் 531
13 மீன்

குறுந்தொகை 54

14

புகழ் தொல்காப்பியம், வேற்றுமையியல் 71
15 அரசு

திருக்குறள் 554

16

செய் குறுந்தொகை 72
17 செல்

தொல்காப்பியம், 75 புறத்திணையியல்

18

பார் பெரும்பாணாற்றுப்படை, 435
19 ஒழி

தொல்காப்பியம், கிளவியாக்கம் 48

20

முடி

தொல்காப்பியம், வினையியல் 206

 

 

 

 

 

Leave a Reply