6TH TAMIL தமிழ்க்கும்மி

6TH TAMIL தமிழ்க்கும்மி

6TH TAMIL தமிழ்க்கும்மி

6TH TAMIL தமிழ்க்கும்மி

  • கூட்டமாகக்கூடிக் கும்மியடித்துப் பாடி ஆடுவது மகிழ்ச்சியான அனுபவம்.
  • கும்மியில் தமிழைப் போற்றிப்பாடி ஆடுவது பெரும் மகிழ்ச்சி தருவதாகும்
  • வாருங்கள்! தமிழின் பெருமையை வாயாரப் பேசலாம்; காதாரக் கேட்கலாம்; இசையோடு பாடலாம்; கும்மி கொட்டி ஆடலாம்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

அருஞ்சொற்பொருள்

  • ஆழிப் பெருக்கு = கடல் கோள்
  • மேதினி = உலகம்
  • ஊழி = நீண்டதொரு காலப்பகுதி
  • உள்ளப்பூட்டு = உள்ளத்தின் அறியாமை

பாடலின் பொருள்

  • பல நூறு ஆண்டுகளைக் கண்டது தமிழ்மொழி. அறிவு ஊற்றாகிய நூல்கள் பலவற்றைக் கொண்ட மொழி.
  • பெரும் கடல் சீற்றங்கள், கால மாற்றங்கள் ஆகிய எவற்றாலும் அழியாமல் நிலைத்திருக்கும் மொழி.
  • தமிழ், பொய்யை அகற்றும் மொழி; அது மனத்தின் அறியாமையை நீக்கும் மொழி.

பெருஞ்சித்திரனார் ஆசிரியர் குறிப்பு

6TH TAMIL தமிழ்க்கும்மி
6TH TAMIL தமிழ்க்கும்மி
  • பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம்.
  • “பாவலரேறு” என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் = பெருஞ்சித்திரனார்.
  • பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல்கள் = கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
  • பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள் = தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம்.
  • தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் = பெருஞ்சித்திரனார்.
  • பெருஞ்சித்திரனாரின் “கனிச்சாறு” என்னும் நூல் எத்தனை தொகுதிகளாக வெளிவந்துள்ளது = எட்டு தொகுதிகள்.
  • தமிழுணர்வு நிறைந்த பாடல்களைக் கொண்ட நூல் = கனிச்சாறு.

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply