6TH TAMIL நால்வகைச் சொற்கள்
6TH TAMIL நால்வகைச் சொற்கள்
- தமிழில் சில எழுத்துகள் தனித்து நின்று பொருள் தரும்.
- ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும்.
- இவ்வாறு பொருள் தருபவை சொல் எனப்படும்.
- எ.கா:
- பூ, கா, மை, கல், கடல், தங்கம்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
இலக்கண அடிப்படையில் சொற்கள் எத்தனை வகைப்படும்
- இலக்கண அடிப்படையில் சொற்கள் நான்கு வகைப்படும். அவை,
- பெயர்ச்சொல்
- வினைச்சொல்
- இடைச்சொல்
- உரிச்சொல்
பெயர்ச்சொல் என்றால் என்ன
- ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.
- எ.கா.
- பாரதி, பள்ளி, காலை, கண், நன்மை, ஓடுதல்.
வினைச்சொல் என்றால் என்ன
- வினை என்னும் சொல்லுக்குச் செயல் என்பது பொருள். செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.
- எ.கா.
- வா, போ, எழுது, விளையாடு.
இடைச்சொல் என்றால் என்ன
- பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் இடைச்சொல் ஆகும்.
- இது தனித்து இயங்காது.
- எ.கா:
- உம் – தந்தையும் தாயும்
- மற்று – மற்றொருவர்
- ஐ – திருக்குறளை
உரிச்சொல் என்றால் என்ன
- பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது உரிச்சொல் ஆகும்
- எ.கா;
- மா – மாநகரம்
- சால – சாலச்சிறந்தது
- தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும்
- சிலப்பதிகாரம்
- காணி நிலம்
- சிறகின் ஓசை
- முதலெழுத்தும் சார்பெழுத்தும்
- திருக்குறள்
- அறிவியல் ஆத்திச்சூடி
- கணியனின் நண்பன்
- ஒளி பிறந்தது
- மொழி முதல் இறுதி எழுத்துகள்
- மூதுரை
- துன்பம் வெல்லும் கல்வி
- கல்விக்கண் திறந்தவர்
- நூலகம் நோக்கி
- இன எழுத்துகள்
- ஆசாரக்கோவை
- கண்மணியே கண்ணுறங்கு