7TH TAMIL அணி இலக்கணம்
7TH TAMIL அணி இலக்கணம்
- ஒரு பொருளை விளக்க மற்றொரு பொருளை உவமையாகக் கூறுவது உவமை அணி ஆகும்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
உருவக அணி என்றால் என்ன
- உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணியாகும்.
- இதில் உவமிக்கப்படும் பொருள் முன்னும் உவமை பின்னுமாக அமையும்.
- ‘தேன் போன்ற தமிழ்’ என்று கூறுவது உவமை ஆகும். தமிழாகிய தேன் என்னும் பொருளில் ‘தமிழ்த்தேன்’ என்று கூறுவது உருவகம் ஆகும்.
- வெள்ளம் போன்ற இன்பத்தை ‘இன்ப வெள்ளம்’ என்று கூறுவதும் கடல் போன்ற துன்பத்தைத் ‘துன்பக்கடல்’ என்று கூறுவதும் உருவகம் ஆகும்.
- எ.கா:
வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய சுடர்ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை இடர்ஆழி நீங்குகவே என்று |
- இப்பாடலில் பூமி அகல்விளக்காகவும், கடல் நெய்யாகவும், கதிரவன் சுடராகவும் உருவகப்படுத்தப்பட்டு உள்ளன.
ஏகதேச உருவக அணி என்றால் என்ன
- கூறப்படும் இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.
- ஏகதேசம் – ஒரு பகுதி
- எ.கா:
- அறிவு என்னும் விளக்கைக் கொண்டு அறியாமையை நீக்க வேண்டும்.
- இத்தொடரில் அறிவு விளக்காக உருவகப்படுத்தப்பட்டு உள்ளது. அறியாமை இருளாக உருவகப் படுத்தப்படவில்லை.
- இவ்வாறு கூறப்படும் இரு பொருள்களில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.
- எ.கா:
- பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்.
- வள்ளுவர் மக்களின் செயல்களைப் பொன்னின் தரத்தை அறிய உதவும் உரைகல்லாக உருவகம் செய்துவிட்டு, மக்களது உயர்வையும் தாழ்வையும் பொன்னாக உருவகம் செய்யவில்லை.
- எனவே இக்குறளில் இடம்பெற்றிருப்பது ஏகதேச உருவக அணியாகும்.
- தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ முத்துராமலிங்கத்தேவர்
- கப்பலோட்டிய தமிழர்
- வழக்கு
- கலங்கரை விளக்கம்
- கவின்மிகு கப்பல்
- தமிழரின் கப்பற்கலை
- ஆழ்கடலின் அடியில்
- இலக்கியவகைச் சொற்கள்
- இன்பத்தமிழ்க் கல்வி
- அழியாச் செல்வம்
- வாழ்விக்கும் கல்வி
- பள்ளி மறுதிறப்பு
- ஓரெழுத்து ஒருமொழி பகுபதம் பகாப்பதம்
- ஒரு வேண்டுகோள்
- கீரைப்பாத்தியும் குதிரையும்
- பேசும் ஓவியங்கள்
- தமிழ் ஒளிர் இடங்கள்
- தொழிற்பெயர்
- விருந்தோம்பல்