7TH TAMIL திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

7TH TAMIL திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

7TH TAMIL திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி
7TH TAMIL திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

 

7TH TAMIL திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

  • தொடக்கத்தில் காடுகளில் வாழ்ந்து வந்த மனிதன் பின்னர் ஊர்களை உருவாக்கிக் கொண்டு வாழத் தொடங்கினான்.
  • சிறிய ஊர்கள் வளர்ச்சி அடைந்து நகரங்களாக மாறின.
  • நகரங்களில் பெரும்பாலானவை ஆற்றங்கரைகளில் அமைந்திருந்தன
  • ஆற்றங்கரைகளில் சிறந்து விளங்கும் நகரங்கள் தமிழ்நாட்டில் பல உள்ளன.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

திருநெல்வேலி

  • பாண்டியர்களின் தலைநகரம் = மதுரை.
  • பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரம் = திருநெல்வேலி.
7TH TAMIL திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி
7TH TAMIL திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

திருநெல்வேலி பெயர்க் காரணம்

  • இந்நகரைச் சுற்றி நெல் வயல்கள் வேலி போல் அமைந்திருந்ததால் திருநெல்வேலி எனப் பெயர் பெற்றது.
  • தற்போது நெல்லை என்று மருவி வழங்கப்படுகிறது.

திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

  • “திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி” என்று கூறியவர் = திருஞானசம்பந்தர்.

தண்பொருநைப் புனல் நாடு

  • “தண்பொருநைப் புனல் நாடு” என்று கூறியவர் = சேக்கிழார்.
  • “புனல் நாடு” என்று சேக்கிழார் குறிப்பிடுவது = திருநெல்வேலி நகரம்.

வேணுவனம்

  • முற்காலத்தில் திருநெல்வேலிக்கு வேணுவனம் என்னும் பெயரும் இருந்துள்ளது.
  • “வேணுவனம்” என்பதன் பொருள் = மூங்கில் காடு.
  • மூங்கில் நெல் மிகுதியாக விளைந்தமையால் அப்பகுதிக்கு நெல்வேலி என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கருதுவர்.
7TH TAMIL திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி
7TH TAMIL திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

பொதியி லாயினும் இமய மாயினும்

  • “பொதியி லாயினும் இமய மாயினும் பதியெழு அறியாப் பழங்குடி” என்று பாடியவர் = இளங்கோவடிகள்.
  • பொதிகை மலையை முதலிடம் கொடுத்து பாடியவர் = இளங்கோவடிகள்.

திரிகூடமலை

  • இலக்கியங்களில் திரிகூடமலை என வழங்கப்படும் குற்றாலமலை புகழ் பெற்ற சுற்றுலா இடமாகத் திகழ்கின்றது.
  • “திரிகூடமலை” எனப்படுவது = குற்றாலமலை.

திரிகூட இராசப்பக் கவிராயர்

  • “வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்” என்று பாடியவர் = திரிகூட இராசப்பக் கவிராயர்
  • “வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = குற்றால குறவஞ்சி
  • குற்றால குறவஞ்சி நூலின் ஆசிரியர் = திரிகூட இராசப்பக் கவிராயர்.

தாமிரபரணி ஆறு

  • திருநெல்வேலிப் பகுதியை வளம் செழிக்கச் செய்யும் ஆறு = தாமிரபரணி.
  • தாமிரபரணி ஆற்றின் வேறு பெயர் = தண்பொருநை நதி.
  • தண்பொருநை நதி என்று அழைக்கப்படுவது = தாமிரபரணி ஆறு.
  • தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் = பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி.

நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் முதலிடம்

  • நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் நெல்லை மாவட்டமே முதலிடம் வகிக்கின்றது.
7TH TAMIL திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி
7TH TAMIL திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு

  • திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஆதிச்சநல்லூர் என்னும் இடத்தில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வில் இறந்தவர்களின் உடல்களைப் புதைக்கப் பழந்தமிழர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • மேலும் தமிழரின் தொன்மைக்கும் நாகரிகச் சிறப்புக்கும் சான்றாக விளங்கும் தொல்பொருள்கள் இங்குக் கிடைத்துள்ளன.
  • இவ்வூர் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது.

கொற்கை துறைமுகம்

  • தாமிரபரணி ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் அமைந்த துறைமுகம் = கொற்கை.
  • கொற்கையில் விளைந்த பாண்டி நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றதாக விளங்கியது.

சங்க இலக்கியங்களில் கொற்கை முத்துக்கள்

  • “முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = நற்றிணை.
  • “கொற்கையில் பெருந்துறை முத்து” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = அகநானூறு.
  • கிரேக்க, உரோமாபுரி நாடுகளைச் சேர்ந்தவர்களான யவனர்கள் இந்த முத்துகளை விரும்பி வாங்கிச் சென்றனர்.

நெல்லை மாநகர்

  • நெல்லை மாநகரின் நடுவே நெல்லையப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது.
  • இங்குத் திங்கள்தோறும் திருவிழா நடைபெறும் என்பதை, “திங்கள் நாள்விழா மல்கு திருநெல் வேலியுறை செல்வர் தாமே” என்னும் திருஞானசம்பந்தர் பாடல் அடிகளால் அறியலாம்.
  • “திங்கள் நாள்விழா மல்கு திருநெல் வேலியுறை செல்வர் தாமே” என்ற பாடியவர் = திருஞானசம்பந்தர்.

நெல்லை நகர தெருக்கள்

  • காவற்புரைத் தெரு = காவற்புரை என்றால் சிறைச்சாலை.
  • கூழைக்கடைத் தெரு = கூலம் என்பது தானியத்தைக் குறிக்கும்.
  • அக்கசாலை = அணிகலன்களும் பொற்காசுகளும் உருவாக்கும் இடம்.
  • பேட்டைத் தெரு = வணிகம் நடைபெறும் இடம்.
  • பாண்டியபுரம் = பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனை நெல்லை நகர மக்கள் எதிர்கொண்டு வரவேற்ற இடம்.
  • திருமங்கை நகர் = பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனின் தேவியாகிய மங்கையர்க்கரசியை மகளிர் எதிர்கொண்டு வரவேற்ற இடம்.

வீரராகவபுரம், மீனாட்சிபுரம்

  • நாயக்க மன்னரின் தளவாயாக விளங்கிய அரியநாதரின் வழித் தோன்றல் வீரராகவர்.
  • அவரது பெயரில் அமைந்த ஊர் வீரராகவபுரம் எனவும், அவரது துணைவியார் மீனாட்சி அம்மையார் பெயரில் உள்ள ஊர் மீனாட்சிபுரம் எனவும் வழங்கப்பட்டு வருகின்றன.

இரட்டை நகரங்கள்

  • “இரட்டை நகரங்கள்” எனப்படும் நகரங்கள் = திருநெல்வேலி, பாளையங்கோட்டை.
  • தாமிரபரணி ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்த நகரம் = திருநெல்வேலி.
  • தாமிரபரணி ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்த நகரம் = பாளையங்கோட்டை.
7TH TAMIL திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி
7TH TAMIL திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு

  • “தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு” என அழைக்கபடும் நகரம் = பாளையங்கோட்டை.
  • பாளையங்கோட்டையில் அதிக அளவில் கல்வி நிலையங்கள் இருப்பதால் அந்நகரைத் தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்பர்.

 

 

Leave a Reply